உலக மக்களை அதிகம் பாதிக்கும் பூஞ்சை பாதிப்பு! கேண்டிடா ஆரிஸ்
அதிகரிக்கும் பூஞ்சைத்தொற்று!
வைரஸ், பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு நிகராக பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த்தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஸ்டெபைலோகாகஸ் ஆரியஸ் (Staphylocaccus aures), குளோஸ்டிரிடியம் டிஃபிசிலே (clostridium difficille) ஆகிய பூஞ்சைகள் ஆன்டிபயாடிக் மருந்துகளை செயல்படாமல் தடுக்கின்றன. இதன் காரணமாக நிமோனியா, கொனோரியா, செப்சிஸ், காசநோய் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. இப்போது உலகில் ஏற்படும் 90 சதவீத நோய்த்தொற்றுக்கு காரணமாக கேண்டிடா ஆரிஸ் (Candida auris) எனும் பூஞ்சையே காரணமாக உள்ளது. இதைத் தடுக்கும் மருந்துகளுக்கு எதிரான ஆற்றலை மெல்ல வளர்த்துவருகிறது இந்த நுண்ணுயிரி.
கேண்டிடா ஆரிஸ் |
இப்பூஞ்சை வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் காற்று மூலம் பரவுகிறது. பயிர்கள் வளருவதற்கு, மதுபானங்கள் தயாரிப்பிற்கு என பூஞ்சைகள் பயன்பட்டுவந்தன. கி.பி.500க்குப் பிறகு பூஞ்சைகளின் தாக்குதல் மனிதர்களின் மீது தொடங்கியது. இதற்கான மருத்துவ சிகிச்சை 1950ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. அசோல்ஸ் என்ற மருந்து கண்டறியப்பட்டது. இதை சாப்பிடும்போது ஏற்படும் பக்கவிளைவுகள் பின்னாளில் குறைந்தன. தற்போது நம்மிடம் பூஞ்சைகளை எதிர்ப்பதற்கான மூன்று மருந்துகள் உள்ளன. டிரியாசோல்ஸ், ஆம்போடெரிசின் பி, எகினோகான்டின்ஸ் ஆகியவை பரவலாக மருத்துவத்தில் பயன்படுகின்றன.
இறந்துபோன தாவரங்களிலிருந்து மனிதர்களின் உடலுக்குள் செல்லும் ஆஸ்பெர்கில்லஸ் ஃபமிகாடஸ் (aspergillus fumigatus) எனும் பூஞ்சை, பல்கிப் பெருகி ரத்தத்தில் கலக்கிறது. இதனால் வேறு நோய்களுக்கு மருந்துகளை சாப்பிட்டாலும் அம்மருந்து வேலை செய்யாது. இவர்களின் நோய்எதிர்ப்பு சக்தியும் வெகுவாக குறைந்துவிடும். இதனால் இறப்பைச் சந்திப்பவர்களின் எண்ணிக்கை தொண்ணூறுகளில் 45 சதவீதமாக இருந்தது. 2009ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த பெண்மணியின் காதில் சி.ஆரிஸ் பூஞ்சைத்தொற்று கண்டறியப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் இதன் பாதிப்பு ஆசியா, மத்தியக்கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் பரவலானது. ஐரோப்பாவில் இதன் தாக்குதல் 2015இல் தொடங்கியது. உயிரற்ற பொருட்களிலும் 28 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதால் இதனைக் கட்டுப்படுத்துவது கடினம். 2009ஆம் ஆண்டு தொடங்கி 30 நாடுகளில் ஆயிரம் நபர்கள் சி. ஆரிஸ் பூஞ்சை தாக்கியுள்ளது. இந்த நோய்த்தொற்று மூன்று வாரங்களில் ஒருவரின் உள்ளுறுப்புகளை பாதித்து, உயிரை பறித்துவிடுகிறது.
பூஞ்சைகள் வைரஸ், பாக்டீரியாக்களை விட நம் உடலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இதனால் இவற்றைக் கட்டு்ப்படுத்தும் மருந்துகளை கண்டறிவது கடினமாக உள்ளது. இதற்கான ஆராய்ச்சிகள் இன்னும் வேகம் பெறவில்லை. பூஞ்சைக்கொல்லிகளில் பயன்படும் மருந்துகள் மனிதர்களின் உடலிலுள்ள பூஞ்சை பாதிப்புகளை மேலும் அதிகரிக்கிறது. நெதர்லாந்து நாட்டில் பூஞ்சைத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் வேகம் பெற்று வருகின்றன. ஐபிரெக்ஸாஃபன்ஜெர்ப் (ibrexafungerp), ரெஸாஃபன்ஜின் (rezafungin) ஆகிய பூஞ்சைத்தொற்று மருந்துகளை ஆராய்ச்சியாளர்கள் சோதித்து வருகின்றனர்.
தகவல்
New scientist
the other superbugs
Nic fleming
New scientist 2 jan 2021
கருத்துகள்
கருத்துரையிடுக