இடுகைகள்

இணையப் பாதுகாப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையப் பாதுகாப்புக்கு அவுட்சோர்சிங் - ஜெய்ப்பூர் காவல்துறை சாதனை!

படம்
giphy இணைய பாதுகாப்பு தொடர்பான பந்தயத்தில் அரசு ஏறத்தாழ தோற்றுவிட்டது. அரசின் தடைகள் ஆபாச தளங்களை தடுத்தாலும், இணையம் மூலமாக நடைபெறும் மோசடிகளை இன்னும் தடுக்க முடியவில்லை. இதனால் அரசு உடனே என்ன யோசிக்கும்? அதேதான். தனது வேலைகளை உள்வாடகைக்கு விடும். தற்போது தனியார் நிறுவனங்களை இதற்காக பணியமர்த்த தொடங்கியிருக்கின்றன. 2015ஆம் ஆண்டில் 49,495 ஆயிரமாக இருந்த இணையக் குற்றங்கள் 2019ஆம் ஆண்டில் 3 லட்சத்து 13 ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளன. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட 2017 தகவல்படி, இணையக்குற்றங்களில் முதலிடம் பிடிப்பது துறவி ஆதித்யநாத் ஆளும் புனித மாநிலமான உத்தரப்பிரதேசம்தான். அடுத்து மகாராஷ்டிரம், கர்நாடகம் என மாநிலங்கள் அணிவகுக்கின்றன. வோலன், ஏவிஎஸ் லேப்ஸ் ஆகிய இணைய நிறுவனங்களை அரசின் காவல்துறை அணுகி உதவிகளைக் கோரி வருகிறது. காரணம், அவர்களின் குற்ற வழக்குகளை துப்ப துலக்க திறன் இல்லாமைதான். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த காவல்துறை தனது சைபர்பிரிவு வழக்குகளை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்து வருகிறது.. நாட்டிலேயே இது முதன்முறையான முன்னோடி முயற்சி ஆகும். காவல்துறையி