இடுகைகள்

சிமிலேட்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிர்ச்சியால் ஒருவருக்கு தலைமுடி நரைத்துபோகலாம்! - உண்மையா? பொய்யா?

படம்
        1. ஒருவருக்கு திடீரென ஏற்படும் அதிர்ச்சியால் ஓரிரவில் முடி வெள்ளையாக வாய்ப்புள்ளது . ரியல் : இந்த ரீலுக்கான ஆதாரம் 1793 ஆம் ஆண்டு பிரான்சில் நடந்த புரட்சியில் அடங்கியுள்ளது . அப்போது ராணி சிறைபிடிக்கப்பட்டார் . அடுத்தநாள் கில்லட்டினால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது . அப்போது , அவரின் தலைமுடி முழுவதும் வெள்ளிக்காசு போல நரைத்துப் போயிருந்தது . இதைக் காரணம் காட்டி அதிர்ச்சியால் தலைமுடி ஓரிரவில் நரைக்கலாம் என்கிறார்கள் . அது சாத்தியமல்ல . நம் உடலுக்கு வயதாகும்போது தலைமுடியின் கருப்பு நிறத்திற்கு காரணமான மெலனின் சுரப்பு குறைகிறது . இதனால்தான் சால்ட் அண்ட் பெப்பர் லுக் சிலருக்கு ஏற்படுகிறது . இந்த எண்ணிக்கை அதிகரித்தால் , ஒருவரின் தலைமுடி முழுக்க வெள்ளையாகும் . இந்நிலைக்கு கனிடைஸ் சப்டிடா (Canities Subita) என்று பெயர் . மெலனின் , ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற வேதிப்பொருளையும் உருவாக்குவதால் , முடியை வெளுத்துப்போகச்செய்வதில் அதன் பங்கும் உண்டு . ஆனால் இது ஓரிரவில் நடக்காது . 2. சாலை விபத்துகளை வாகனங்களிலுள்ள விளக்குகள் தடுக்கின்றன . ரியல் : உண்மை . பல்வேறு பருவ க