இடுகைகள்

தகவல்தொடர்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வினோதரச மஞ்சரி - ரேடியோ தகவல்தொடர்பு, கனிமங்களின் வகைகள்

படம்
ரேடியோ தகவல் தொடர்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தகவல்தொடர்பு மெதுவாக நடைபெற்று வந்தது. பிறகுதான் ரேடியோ அலைகள் கண்டறியப்பட்டன. மின்காந்த அலைகளில் ரேடியோ அலையும் ஒன்று.இதன்மூலம் தொலைவிலுள்ள ஒருவருக்கு எளிதாக தகவல் அனுப்பி, பதிலைப் பெறமுடியும். இதற்கு உதவுவதுதான் டிரான்ஸ்சீவர் (Transceiver).இதில் உள்ள ஆன்டெனா மூலம் சிக்னல்களைப் பெற்று பதில் அனுப்ப முடியும். டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரீசிவர் என இரு பணிகளையும் தனது பெயருக்கு ஏற்ப டிரான்ஸ்சீவர் கருவி செய்கிறது.  மலையேறும் வீரர்கள், டிரான்ஸ்சீவரைப் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் மலையேற்றக் குழுவில் யாராவது விபத்து காரணமாக காணாமல் போனாலும், கருவியில் உள்ள சிக்னல் மூலம் எளிதாக கண்டுபிடிக்க மீட்க முடியும். போக்குவரத்திற்கு பயன்படும் காருக்கான ஸ்மார்ட் கீ, ரேடியோ அலை மூலமே இயங்குகிறது. இதன்மூலம் காரின் கதவுகளை திறப்பது, மூடுவது, காரின் இஞ்சினை ஆன் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.  2 போர்னைட் (Bornite) இயற்கையில் கிடைக்கும் வண்ணமயமான கனிமங்களில் இதுவும் ஒன்று. போர்னைட், செம்பு மற்றும் இரும்பு கொண்ட சல்பைட் வடிவம். இதற்கு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த  கனி

தேசியமொழியாக இந்தியே இருக்க முடியும்! - நமது மொழிப்பிரச்சினை - காந்தி- அ.லெ.நடராஜன்

படம்
  காந்தி நமது மொழிப்பிரச்னை காந்தி தமிழில்  அ.லெ. நடராஜன் இந்த நூல் காந்தி எழுதிய பல்வேறு கட்டுரைகள், பேசிய சொற்பொழிவுகளிலிருந்து பெறப்பட்டு கோவையாக்கி நூலாக்கப்பட்டுள்ளது. நூலின் தமிழாக்கம் சிறப்பாக உள்ளதை குறிப்பிட்டு கூறவேண்டும்.  பனியா சாதியில் பிறந்தவர் காந்தி. அவர், தன் வாழ்பனுவத்தில்  சமூகத்தில் உள்ள மக்களைப் பற்றி இறுதி வரை கற்றுக்கொண்டே இருந்தார். இந்த வகையில் அவர் தன் வாழ்வின் இறுதிக் காலகட்டம் வரை பல்வேறு விஷயங்களைக் கற்றும் கற்றதை பரிட்சித்தும் பார்த்து வந்தார்.  இந்த நூலில் முழுக்க மொழிகளைப் பற்றிப் பேசுகிறார். இந்தியாவின் தேசிய மொழியாக ஒரே மொழி. அது எதுவென்பதுதான் விஷயமே. இந்த வகையில் நாடு முழுவதையும் ஒருங்கிணைக்க இந்தி தான் உதவும் என தனது தரப்பு கருத்தை கூறுகிறார். ஒருகட்டத்தில் பிற மொழிகளைக் கூட தேவநாகரி லிபியில் எழுதிப்பழகலாம். இதனால் தாய்மொழி அழிந்துவிடாது என தன் கருத்தை கூறுகிறார்.  நூலில் முக்கியமான மொழிகளாக இந்தி வட்டாரத்தில் பேசப்படும் இந்தி, உருது ஆகிய மொழிகளில் எது சிறந்தது என வாதிடும் போக்கிலேயே நூல் பெரிதும் பயணிக்கிறது. இந்துஸ்தானி என்பது எந்த மொழியைக் குறிக்

குரல் வழியாக நீர்யானை தன் குழுவை அறியுமா?

படம்
  எதிரிகளை அடையாளம் கண்டுபிடிக்கும் நீர்யானை! அண்மையில் நீர் யானைகள் எப்படி தகவல் தொடர்பு கொள்ளும் என்பதைப் பற்றிய ஆய்வு நடைபெற்றது. இதில், இந்த உயிரினம் எப்படி தனது நண்பர்கள், அந்நியர்களை அடையாளம் காண்கிறது என்பதே ஆய்வின் முக்கியமான கருத்து.   நிலத்தில் வாழும் பாலூட்டி இனங்களில் முக்கியமானது, நீர்யானை. இதனை பொதுவாக அறிந்தவர்கள் கூட இதன் குணங்களை பற்றி அதிகம் தெரிந்துகொண்டிருக்க மாட்டார்கள். பகலில் நீர்நிலையில் இருக்கும் நீர்யானைகள், இரவில் மட்டுமே நிலத்திற்கு வருகிறது. இதனை நாள் முழுவதும் கவனித்து பார்த்து ஆய்வு செய்வது கடினமான பணி. நீர்யானை மட்டுமல்ல பிற விலங்குகளையும் அதன் குணங்களை அறிய அதிக ஆண்டுகள் தேவை. அப்போதுதான்,  கவனித்து கண்காணித்து தகவல்களை சேகரிக்க முடியும்.  பிரமாண்டமான நீர்யானை , அதேயளவு ஆபத்தும் நிறைந்தது. பெரிய உடம்பு என்றாலும் அந்நியர்களைக் கண்டால் முரட்டு கோபத்தோடு தாக்க முயலும். நீர், நிலம் என இரண்டிலும் ஓடக்கூடிய, நின்ற நிலையிலேயே சடாரென திரும்பும் திறன் கொண்ட விலங்கு என்பதை விலங்கு ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர்.  அருகில் போகாமல் நீர்யானைகளை ஆராய, அதன் ஒலியை ஆய்வு செய்

அமேசான் காடுகளில் தகவல்தொடர்புக்கான மொழி பயோஅக்கவுஸ்டிக்!

படம்
            சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா என பாடல் கேட்டிருப்பீர்கள் . உண்மையில் குயில் நமக்காகத்தான் பாடுகிறதா ? இல்லவே இல்லை . அவை தகவல்தொடர்புக்கான மொழி அது . இதுபற்ற அமேசான் காடுகளில் முனைவர் படிப்பு படிக்கும் மாணவர் ஆலிவர் மெட்கால்ப் ஆராய்ச்சி செய்து வருகிறார் . ஆராய்ச்சிபூர்வமாக நாம் இன்னும் காட்டுயிர் வாழ்க்கையை புரிந்துகொள்ளவில்லை . அதன் காரணமாகவே இன்றுவரை நம்மால் காட்டுத்தீயை எப்படி ஏற்படுகிறது என்று ஓரளவு தெரிந்துகொண்டாலும் கூட அதனை அணைக்கமுடியவில்லை . இதற்காக இப்போது ஆலிவர் பயன்படுத்தும் முறைதான் பயோஅக்கவுஸ்டிக் . இம்முறையில் பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்து அதன் தகவல்தொடர்பை ஆராய்ந்து உண்மையைக் கண்டறிய முடியும் . பறவைகள் குரல் எழுப்பது பாடுவது போன்று தோன்றினாலும் அவை தகவல்தொடர்புக்காக இப்படி செய்கின்றன . அவை தொடர்புகொள்ளும் முறை , அதிலுள்ள செய்தி ஆகியவற்றை அறியவே நாங்கள் முயல்கிறோம் என்றார் ஆலிவர் . மனிதர்கள் பொதுவாக பறவைகளை எப்படி புரிந்துகொள்கிறார்கள்ழ பார்வையின் வழியாகத்தான் . ஆனால் பறவைகளின் உலகில் இம்முறையில் நுழைவது கடினமானது . எனவே , இ

விண்வெளியிலுள்ள வேலைகள்! - பட்டதாரிகள் இதற்கும் விண்ணப்பிக்கலாம்

படம்
pixabay எக்ஸ்ட்ராடெரஸ்டரியல் சர்வேயர் விண்வெளியில் உள்ள கோள்களை ஆராயும் பணி. விண்வெளியில் சுற்றும் கற்களை, கோள்களைக் கண்டுபிடித்து அதிலுள்ள கனிமங்களை ஆராய முடியுமா என ஆராய்வார்கள். இப்பணியை இந்த பணியிடத்திற்கு வருபவர் செய்ய வேண்டும். ஆஸ்டிராய்டு மைனர் கோள்களை துளையிட்டு கனிமங்களை அகழ்ந்து எடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆபத்தான பணிதான். ஆனாலும் நம் எதிர்காலத்தை உறுதி செய்வது இவரின் அர்ப்பணிப்பான பணிதான். அட்மாஸ்பியர் ஓவர்சீயர் பூமியை ஒத்த வேறு கோள்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதில் உள்ள வாயுக்களின் தன்மையை ஆராய வேண்டும். இவரின் ஆய்வுதான் கோளின் தன்மையை பிறருக்குச் சொல்லும். கம்யூனிகேஷன் மற்றும் நேவிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்!  இந்தியோ, தமிழோ, தெலுங்கோ எந்த மொழியாக இருந்தாலும் சரி. விண்வெளியில் பேசியே ஆகவேண்டும். அப்போதுதான், அவர் சரியான பாதையில் நகர்ந்து செல்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய  முடியும். இல்லையென்றால் அவர் விண்கலத்துக்கு சரியாக வரமுடியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. புரோபல்சன் இஞ்சினியர்! இஞ்சின் சூடாகி விட்டதா, கதிரியக்க பாதிப்பு உண்டா,

5 ஜி வந்தால் நம் வாழ்க்கை எப்படி இருக்கும்?

படம்
இந்தியாவில் 4ஜி வேகத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவது ஜியோதான். கட்டை ரேட்டில் இந்த வேகமா என்று மிரட்டுகிறது. அதே வேளையில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே பிஎஸ்என்எல் போராடி வருகிறது. இந்த லட்சணத்தில் தொழில்நுட்ப அப்டேட் ம்ஹூம் வாய்ப்பே இல்லை. ஏர்டெல்லிடம் மூச்சு பேச்சே காணோம். 5 ஜி என்பது முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றம். இதனை ஜியோ கையில் எடுக்க வாய்ப்புள்ளது. உலகம் 6 ஜி தொழில்நுட்பத்திற்கான ஆய்வுகளில் உள்ளது. ஹூவெய் போன்ற நிறுவனங்கள் இதனை சிறப்பாக வழங்கலாம். இப்போது அதன் பலன்களைப் பார்த்துவிடுவோம். தொழில்வளர்ச்சி விர்...... 5ஜி டேட்டா வேகத்தில் இணையம் தொங்காமல், படம் தரவிறக்குவது மில்லினியர்களின் கனவு. அதைக்கடந்து தொழில்துறை 89 சதவீதம் வளரும் என்கிறது பிஎஸ்பி எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை. தொலைத்தொடர்பு சிறப்பு! ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் இன்னும் செலவு குறைவாக தங்கள் சேவைகளை வழங்கலாம். மின்சிக்கனமாகும். வேகம் அதிகரிக்கும். தடையில்லாத சிக்னல் மெட்ரோ ரயில்களில் சென்றாலும் கிடைக்கும். ஸ்மார்ட் வகுப்பறை! அனைத்து வகுப்புகளும் 5 ஜியில் இணைக்கப்பட்டிருக்கும். எனவ

திசை தெரியாமல் போகிறதா? - உங்கள் பிழை அல்ல!

படம்
Cartoon Connie Comics Blog ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி சிலருக்கு வழி தேடும் திறன் ஏன் மிக குறைவாக உள்ளது? மூளையிலுள்ள முன்புறப்பகுதி வழிதேடும் திறனுக்கானது. ஆனால் இது அனைவருக்கும் அப்படியே செயல்படாது. சிலர், பிறரிடம் வழிகேட்டு ஒரு இடத்தை எளிதாக சென்று சேர்வார்கள். சிலர் அலைந்து திரிந்துதான் சரியான இடத்திற்கு செல்வார்கள். என்னைக்கூட தொலைந்து போய்விடுவான் என எங்கேயும் போக அனுமதிக்க மாட்டார்கள். என்னைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையால் நான் புதிய இடங்களுக்கு மிகச்சரியாக, தவறாகச் செல்வேன். தட்டுத்தடுமாறித்தான் அந்த இடங்களை சென்று சேர்ந்துள்ளேன். அதனால் கவலைப்படாதீர்கள். உடனே எக்ஸ்ட்ரோவர்ட், இன்ட்ரோவர்ட் என கிளம்புவார்கள். உள்ளூரில் ஓரிடத்திற்கு ஒரு பெயரைச் சொல்லுவார்கள். நமக்கு காகித த்தில் திருத்தமான பெயர் இருக்கும். எனவே தவறுகள் நடப்பது சிரமம். இதை சாக்காக வைத்து நாலைந்து மனிதர்களோடு பேசுகிறீர்கள். முன்னே பின்னே பார்க்காத கட்ட டங்களை அறிந்துகொள்கிறீர்கள் என்றால் லாபம்தானே? நன்றி:பிபிசி எர்த்