விண்வெளியிலுள்ள வேலைகள்! - பட்டதாரிகள் இதற்கும் விண்ணப்பிக்கலாம்




Superhero, Girl, Speed, Runner, Running, Lights, Space
pixabay






எக்ஸ்ட்ராடெரஸ்டரியல் சர்வேயர்

விண்வெளியில் உள்ள கோள்களை ஆராயும் பணி. விண்வெளியில் சுற்றும் கற்களை, கோள்களைக் கண்டுபிடித்து அதிலுள்ள கனிமங்களை ஆராய முடியுமா என ஆராய்வார்கள். இப்பணியை இந்த பணியிடத்திற்கு வருபவர் செய்ய வேண்டும்.


ஆஸ்டிராய்டு மைனர்

கோள்களை துளையிட்டு கனிமங்களை அகழ்ந்து எடுக்கும் பணியை செய்ய வேண்டும். ஆபத்தான பணிதான். ஆனாலும் நம் எதிர்காலத்தை உறுதி செய்வது இவரின் அர்ப்பணிப்பான பணிதான்.

அட்மாஸ்பியர் ஓவர்சீயர்

பூமியை ஒத்த வேறு கோள்கள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து, அதில் உள்ள வாயுக்களின் தன்மையை ஆராய வேண்டும். இவரின் ஆய்வுதான் கோளின் தன்மையை பிறருக்குச் சொல்லும்.


கம்யூனிகேஷன் மற்றும் நேவிகேஷன் ஸ்பெஷலிஸ்ட்! 


இந்தியோ, தமிழோ, தெலுங்கோ எந்த மொழியாக இருந்தாலும் சரி. விண்வெளியில் பேசியே ஆகவேண்டும். அப்போதுதான், அவர் சரியான பாதையில் நகர்ந்து செல்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய  முடியும். இல்லையென்றால் அவர் விண்கலத்துக்கு சரியாக வரமுடியாமல் போகும் வாய்ப்பும் உண்டு.

புரோபல்சன் இஞ்சினியர்!

இஞ்சின் சூடாகி விட்டதா, கதிரியக்க பாதிப்பு உண்டா, எரிபொருள் அளவு சரியாக இருக்கிறதா என சோதிக்கும் பணி இவருக்கு. இதில் குளறுபடியானால் அதோடு விண்கலனின் சோலி முடிந்தது. சாம்பல் கூட கிடைக்காது.



நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்


பிரபலமான இடுகைகள்