கலைப்படைப்பையும், அறிவியல் படிப்பையும் இணைக்கவேண்டும்
சந்திரிகா டான்டன்
கல்வி
செயற்பாட்டாளர்
இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் பயில்வதற்கான
வாய்ப்புகள் இருக்கின்றனவா?
அமெரிக்காவில்
உள்ள பல்கலைக்கழகங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். பல்வேறு பள்ளிகளில்
படிக்கும் இந்திய மாணவர்களுக்கான குழு தலைவராக இருக்கிறேன். மாணவர்கள் தன்னம்பிக்கையாக
இருக்கிறார்கள். உறுதியான மனதுடன் படிக்கிறார்கள்.
இந்திய
மாணவர்கள் இன்னும் ஸ்டெம் துறையை மட்டுமே கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். உயிரிபொறியியல்,
சுகாதாரம் ஆகிய துறைகளிலும் கவனம் செலுத்துவது எதிர்கால வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.
இயந்திர பொறியியல் என்பதை நீங்கள் படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதோடு சேர்த்து
மெக்கட்ரானிக்ஸ் என்பதையும் சேர்த்துப் படியுங்கள் என்கிறேன். கல்வி நிறுவனங்கள் எதிர்கால
வேலைவாய்ப்புகளுக்கான மாணவர்களை உருவாக்குவதை கடமையாக கொள்ள வேண்டும்.
உயர்கல்வியில்
என்னென்ன மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன?
முந்தைய
ஆண்டுகளில் வேண்டாம் என்று நினைத்து ஒதுக்கிய விஷயங்கள் இன்று முக்கியமான இடத்தைப்
பிடித்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. அறிவியல் தொடர்பான கல்வியை இந்தியாவில் எங்கு
கற்றுத்தருவார்கள் என்று கேட்டால் பலரும் ஐஐடி என்பார்கள். ஆனால் இன்று நிலைமை மாறி
வருகிறது. பல்வேறு அரசு நிறுவனங்கள் இருந்தாலும் அதற்கு நிகரான தனியார் நிறுவனங்களும்
இங்கு உள்ளன.
நீங்கள்
கூறியபடி பார்த்தால் நாம் கலைப்படிப்புகளையும் அறிவியல் படிப்புகளோடு இணைக்கவேண்டுமா?
மாறுபட்டு
யோசிப்பதை கலைப்படிப்புகள் கற்றுத்தருகின்றன. அறிவியல்படிப்புகளை அதனை கற்றுத்தருவதில்லை.
அறிவியலின் நோக்கம் என்ன? உலகில் ஏற்படும் முக்கியமான பிரச்னைகளுக்கு தீர்வுகளை தேடி
அடைவது. அதற்கான வழிகளை இதன்மூலம் நாம் அடையலாம்.
அறிவியல்
மாணவர்களை நீங்கள் இன்றைக்கு உலகின் முக்கியமான பிரச்னை என்ன என்று கேட்டால் கிடைக்கும்
பதிலைக் கேட்டு ஆச்சரியப்படுவீர்கள். அவர்களுக்கு இந்த உலகில் நடக்கும் சிக்கல்களும்,
பிரச்னைகளும் தெரிவதில்லை. பிரச்னைகள் பற்றிய
வரலாற்றை அறியாமலேயே அறிவியல் படிப்புகளை அவர்கள் படிக்கிறார்கள். ஆனால் கலைப்படிப்புகளை
படிப்பவர்களுக்கு இந்த அறிவு உண்டு. அறிவியலோடு கலைப்படிப்புகளையும் இணைப்பது இதனால்தான்.
உயர்கல்வியில்
நாம் என்ன விஷயத்தை தவறவிடுகிறோம் என்று நினைக்கிறீர்கள்?
சில
நாட்களுக்கு முன்பு லண்டனில் பீகிங் பல்கலைக்கழகம் ராயல் அகாடமி ஆகியோர் பங்கேற்ற அறிவியல்
கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சீனா, அமெரிக்கா இருக்கிறது. ஆனால் இந்தியா
இல்லை. காரணம் என்ன? நம்மிடையே சிறந்த ஆராய்ச்சியாளர்கள் உண்டு. ஆனால் அதனை அங்கீகரித்து
வெளியிட எந்த ஆய்வு நிறுவனமும் இல்லை. இப்பிரச்னையை இந்தியா களையவேண்டும். அப்போதுதான்
நமக்கென ஆராய்ச்சி, காப்புரிமை ஆகியவற்றை உருவாக்க முடியும்.
நன்றி
– டைம்ஸ் – ராஜேஷ் சந்திரமௌலி