இந்தியாவைப் போன்ற மத சுதந்திரம் பாக்.கில் கிடையாது!
ஆரிஃப்
ஆஜாகியா,
மனித
உரிமைகள் செயற்பாட்டாளர்.
பாகிஸ்தானின்
சட்டங்கள் மற்றும் ராணுவத்தை
கடுமையாக விமர்சித்து வந்தவர்
ஆரிஃப்.
தற்போது
வெளிநாட்டில் வசிப்பவர்,
தாய்நாட்டில்
நடைபெறும் மனித உரிமை மீற்ல்களைக்
கண்டித்துப் பேசி வருகிறார்.
பாகிஸ்தானில்
நடைபெறும் பல்வேறு விஷயங்களைப்
பற்றி பேசி வருகிறீர்கள்.
அங்கு
நடைபெறும் முக்கியமான பிரச்னையாக
எதனைக் கூறுவீர்கள்?
அங்கு
நடைபெறும் மனித உரிமை மீறல்கள்
பற்றிய புகார்கள்,
செய்திகள்
நம்பிக்கை அளிக்கும்படி
இல்லை.
ராணுவத்தின்
சொல்படி நடப்பவர்தான் அங்கு
பிரதமராக முடியும்.
பாக்.
ராணுவம்
சிந்து,
பலுசிஸ்தான்,
கைபர்
பக்துன்காவா ஆகிய பகுதிகளில்
கடுமையான மனித உரிமை மீறல்களை
நிகழ்த்தியுள்ளனர்.
அங்கு
சுதந்திரமாக பேசுவது கூட
குற்றமாக கருதப்படுகிறது.
குழந்தை
தொழிலாளர்கள்,
கொத்தடிமை
முறை,
பாலியல்
தொழில்,
குழந்தைகளின்
மீதான வன்முறை ஆகியவை பாக்கில்
சாதாரணமாக நடைபெற்று வருகிறது.
மசூதிகளிலும்
மதராசாக்களிலும் இதுபோன்ற
அநிதீகள் நடந்தாலும்,
அவை
இன்னும் கண்டுகொள்ளப்படவிலைல.
பாக்கில்
சிறுபான்மையினர் மீது மனித
உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன
என்பதை நம்புகிறீர்களா?
பாகிஸ்தான்
தீவிரவாதிகளுக்கு உதவி செய்து
வருவதை அனைத்து உலக நாடுகளும்
அறிவார்கள்.
பாகிஸ்தான்
தனது நாட்டு தீவிரவாதத்தை
வைத்து பிற நாடுகளை மிரட்டி
வருகிறது.
இந்தியா
மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய
நாடுகளுக்கு எதிரான தீவிரவாத
செயல்களை அதி விருப்பத்துடன்
பாகிஸ்தான் செய்து வருகிறது.
முன்நிபந்தனையற்று
அமெரிக்கா தரும் நிதியை
தீவிரவாத இயக்கங்களுக்கு
பாக் அரசு வழங்கி வருகிறது.
பாக்.
ஆக்கிரமிப்பு
காஷ்மீரில் நிலைமை என்ன?
அப்பகுதிகளில்
பஞ்சாபி பேசும் மக்களே அதிகம்
வாழ்கின்றனர்.
இங்கிருந்து
மின்சாரம்,
தண்ணீர்
முழு பாகிஸ்தானுக்கும்
அனுப்பப்படுகிறது.
இதற்கு
பாக்.ஆக்கிரமிப்பு
காஷ்மீருக்கு எந்த பலனும்
கிடைப்பதில்லை.
இங்கு
சீன முதலீடு தற்போது குவிந்து
வருகிறது.
பாகிஸ்தான்
அமைச்சர்கள் இந்தியாவுக்கு
எதிராக பேசிவருவது பற்றி?
பாகிஸ்தான்
இந்தியாவின் உள்நாட்டு
விவகாரங்களான காஷ்மீர் மற்றும்
சிறுபான்மையினர் பற்றி பேசுவதை
உலக நாடுகள் கண்டுகொள்வதில்லை.
காரணம்,
பாகிஸ்தானில்
மனித உரிமை மீறல்கள் ஏராளம்
நடைபெறுகின்றன.
அங்குள்ள
சிறுபான்மையினரை மிகவும்
மோசமான விதத்தில் நடத்துவது
அவர்களின் வழக்கம்.
பிற
மத பெண்களை மதம் மாற்றுவது
அண்மையில் அவர்கள் செய்து
வரும் அநீதியான நடவடிக்கை.
இந்தியாவில்
முஸ்லீம் ஒருவர் எந்த இடத்திலும்
உரிமையுடன் இறைவனைத் தொழ
முடியும்.
சுதந்திரமாக
இதனைச் செய்யலாம்.
ஆனால்
பாக்கில்.
மசூதி
தவிர்த்து வேறு எங்கும்
தொழக்கூடாது என்று உத்தரவே
உண்டு.
பாகிஸ்தானுக்கும்
இந்தியாவுக்கும் அமைதி நிலவ
என்ன செய்யலாம்?
பாக்.
இந்தியா
மற்றும் ஆப்கானிஸ்தானுடன்
நேரடி மற்றும் மறைமுகப் போர்
ஆகியவற்றில் ஈடுபடுவதைக்
கைவிடவேண்டும்.
பாகிஸ்தானின்
பொருளாதார நிலைமைக்கு ராணுவம்
இவ்வளவு பெரிதாக இருக்கவேண்டியது
அல்லை.
நன்றி
-
டைம்ஸ்
24,
2020 அமின்
அலி