அன்புள்ள அப்பாவுக்கு.... மின்னூலின் அட்டைப்படம் வெளியீடு!
நாம் எப்போதும் அம்மாவிற்கு நன்றி கூறுகிறோம். அவளை நினைவுகூர்ந்து நெகிழ்கிறோம். அவள் அடையாளம் காட்டித்தான் அப்பா என்பவரை அறிகிறோம். வீட்டிற்கு, உறவுகளுக்கு, உணர்ச்சிகளுக்கு அம்மா வழிகாட்டுகிறார். புரிந்துகொள்ள உதவுகிறார். சமூகத்திற்கு, வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு அப்பா வழிகாட்டுகிறார். அவர் பெரியளவில் பாராட்டுகளில் பங்குகொள்வதில்லை. வெற்றியிலும் கூட ஒதுங்கியே நிற்கிறார்.
அப்பாவையே மகன் தன் முன்மாதிரியாக கருதுவது வரம்தான். அப்படி ஒரு அப்பா அனைவருக்கும் அமைந்துவிடுவதில்லை. சில விஷயங்களைப் புரிந்துகொள்ள நாம் உரையாடித்தானே ஆகவேண்டியதிருக்கிறது. அப்படி அதிகம் பேசாத தந்தைக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே இந்த மின்னூல். உங்களுக்கு இந்த நூல் விரைவில் இலவசமாக கிடைக்கும். தரவிறக்கிக்கொள்ளலாம். இப்போது அதன் அட்டைப்படம் மட்டும்.
படம்:Pixabay |