ஆங்கிலம் பேசினால் இங்கிலாந்து செல்லலாம்!





Image result for priti
அமைச்சர் ப்ரீத்தி படேல்

இங்கிலாந்தில் குடியேற்றத்துறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் விசா நடைமுறைகளை மாற்றவிருக்கிறது. இதன்விளைவாக, ஆங்கிலம் பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவிருக்கிறது. “சிறப்பாக ஆங்கிலம் பேசும் இந்தியர்கள் இதன் மூலம் பயன் பெறமுடியும். திறன் வாய்ந்த மனிதர்களை இம்முறையில் நாங்கள் அடையாளம் கண்டுகொண்டு இங்கிலாந்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவோம்” என்று கூறியுள்ளார் குடியேற்றத்துறை அமைச்சர் ப்ரீத்தி படேல்.

அடுத்த ஆண்டு முதல் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனிலிருந்து முற்றாக விலகி விடும். இதனால் அரசு தன் குடியேற்றம், பாதுகாப்பு, தொழில் உள்ளிட்ட விஷயங்களில் மாறுதல்களை ஏற்படுத்த முயன்றுவருகிறது. பிரெக்ஸிட் பற்றியே பேச்சுகளும், வாக்கெடுப்பும் நடந்தபோது தெரசாமே இந்தியாவுக்கு வருகை தந்தார். தொழில்சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அப்போது உறுதியாயின.

அதே முறையில் பல்வேறு ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை அங்கு கல்வி கற்கவும், ஆராய்ச்சி செய்யவும் இங்கிலாந்து அரசு வரவேற்று விசா காலத்தை கூட இரண்டு ஆண்டுகளாக நீட்டித்து உத்தரவிட்டிருந்தது.


தற்போது ஆங்கிலத்தை சரளமாகப் பேசி, இங்கிலாந்து நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் கடிதத்தை நீங்கள் வைத்திருந்தால் அங்கு தங்கி பணிபுரிய இருபது புள்ளிகள் கிடைக்கும். குறிப்பாக, 25, 600 பவுண்டுகளுக்கு மேல் நீங்கள் சம்பளம் பெறுவதை அமைச்சகம் விரும்புகிறது. இதற்கு மேல் நீங்கள் சம்பளம் வாங்கினால் அங்கு செல்வது எளிது. ஐரோப்பா நாடுகளை இங்கிலாந்து ஒதுக்கி வைக்கவில்லை. அவர்களுக்கும் தேர்வு உண்டு. குளோபல் டேலன்ட் ஸ்கீம் எனும் திட்டத்தின் மூலம் வேலை இல்லை என்றாலும் இங்கிலாந்திற்குள் வரலாம். அதற்கு அனுமதி தருகிறார்கள்.

நன்றி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


பிரபலமான இடுகைகள்