தடை செய்யப்பட்ட நூல்களை படித்திருக்கிறீர்களா?



Book with chains wrapped around it

கீழ்க்காணும் நூல்களை அமெரிக்கன் லைஃப்ரி ஆஃப் காங்கிரஸ், பெற்றோர்கள் படிக்கலாம். குழந்தைகளுக்கு படிக்க பரிந்துரைக்க கூடாது என்று கூறியுள்ளது. அப்படிப்பட்ட சில நூல்களை பார்ப்போம்.


'The Absolutely True Diary of a Part-Time Indian'


இந்த நூல் ஆசிரியரின் சொந்த வாழ்க்கையைப் பேசுகிறது. அவரின் மீது நடத்தப்பட்ட இனவெறி வசைகள், வறுமை, குடிபோதை வாழ்க்கை, வன்முறை, பாலியல் வேட்கை ஆகியவற்றை பேசுகிற இந்த நூல் வெளியானபோது கடும் சர்ச்சைகளை சந்தித்தது. அதனாலேயே வெற்றியும் பெற்றது. 2007ஆம் ஆண்டு தேசிய புத்தகவிருதும், அடுத்த ஆண்டே சிறந்த இளைஞர் இலக்கிய விருதையும்  வென்று சாதனை படைத்தது.


'The Adventures of Huckleberry Finn'

மார்க் ட்வைன் எழுதிய இந்நூல் முன்னணி எழுத்தாளர்களால் மிகச்சிறந்த படைப்பு என்று பேசப்பட்டது. ஆனால் வெளியானபோது இனவெறியை பேசியதால் சர்ச்சைக்குள்ளானது. ஆனாலும் வாசகர்கள் இதனை சரியாகப் புரிந்துகொண்டு அவரின் நய்யாண்டியை அடையாளம் கண்டு ரசித்தனர். அமெரிக்காவில் 1885ஆம் ஆண்டு வெளியானது. நூலின் சிறப்பு, அமெரிக்கர்கள் தினசரி பேசும் எளிய ஆங்கிலம் கொண்டு உரையாடல்கள் இருந்ததுதான். தி ஸ்டோரி ஆஃப் டாம் சாயர் என்ற நாவலின் அடுத்த பாகமாக உருவானது இந்த நூல்.


'The Catcher in the Rye'

பதினேழு வயது இளைஞரான போல்டன் கால்ஃபீல்டு என்பவரின் வாழ்க்கையில் நடக்கும் காதல், மோதல், துக்கம், துயரம் பாலியல் பிரச்னைகள்தான் கதை. நியூயார்க் நகரில் அலையும் இச்சிறுவனின் வாழ்க்கையை விவரித்த விதம் பார்த்து இலக்கிய உலகமே அலறியது. வக்கிரமான மொழியில் வன்முறையையும் பாலியலையும் கலந்து எழுதுகிறார் சாலிங்கர் என்று கூறினார்கள். ஆனால் டைம் பத்திரிகையில் சிறந்த நூல்களில் ஒன்றாக தேர்வானது.

'The Great Gatsby'

ஸ்காட் ஃப்ரிட்ஸ்ஜெரால்டு எழுதிய கிரேட் கேட்ஸ்பை நாவல் அதன் மொழிக்காகவும் பாலியல் சார்ந்த விவரிப்புகளுக்காகவும் பேசப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கிளாசிக் நாவல்களில் இதுவும் ஒன்று. ஜே கேட்ஸ்பை என்ற பணக்காரரின் காதல் வாழ்க்கையைப் பேசுகிறது. 1920 ஆம் ஆண்டு கால அமெரிக்க கலாசாரம், வாழ்ந்த மனிதர்களைத் துல்லியமாக பதிவு செய்த நாவல் இது.


நன்றி - தாட்கோ.காம்