காதலும் வயதும் முட்டிக்கொண்டால்? - ஹார்ட்பீட் -2017
ஹார்ட்பீட்
இயக்கம் துவர்கா ராஜா
இசை தரண்குமார்
ஒளிப்பதிவு பாலாஜி சுப்பிரமணியம்
காதலும் வயசும் எப்போதும் ஒன்றாக இணைந்து பயணிப்பதில்லை. இங்கும் அதுதான் பிரச்னை. 18 வயது டீனேஜ் பெண்ணும், 25 வயது இளைஞனும் காதலித்தால் என்ன பிரச்னை உருவாகிறது என்பதுதான் படம்.
ஆஹா
படத்தில் தேவையில்லாமல் குத்துப்பாட்டு, ஆபாச காட்சிகள், மழையில் நனைவது என்பதெல்லாம் இல்லை. துருவா, வெண்பா இரண்டு பேர்களுமே நன்றாக நடித்திருக்கிறார்கள். காமெடி என்பது தனியாக இல்லை. முழுக்க காதலும் வயதும் சார்ந்த விஷயங்களாகவே இருக்கிறது.
ஐயையோ
வயது சார்ந்த பிரச்னையாகவே அதனைப் பேசுகிறார்கள். பள்ளியில் காதல் என்பது சர்ச்சையாகும் என்பதால், டீனேஜ் பெண் வேலைக்குப் போனபிறகு காதலிப்பதாக காட்டுகிறார்கள். ஆனால் நாயகனின் அம்மா, தான் அவளின் வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாக பேசுகிறார். இதை எப்படி புரிந்துகொள்வது?
முக்கியமான விஷயத்தை கவனமாக கையாண்ட இயக்குநருக்கு பாராட்டுகள். பள்ளியில் காதல் என்பது படிப்பில் பெண்களின் கவனத்தை சிதறடிக்கும் விஷயம் என்பதால் அதனை பார்வையாளர்கள் ஆதரிப்பது கடினம்.
பேசவேண்டிய விஷயத்தை தன் பார்வையில் பேசியிருக்கிறார். நாம் வரும் காலத்திலும் நடப்பிலும் தீர்வு காணவேண்டிய பிரச்னையாக இளம்பருவக் காதல் உள்ளது.
ஹார்ட்பீட் பார்க்கிறவர்களுக்கும் நிச்சயமாக எகிறும்.
கோமாளிமேடை டீம்