உலகை மாற்றிய இங்கிலாந்து பெண் கண்டுபிடிப்பாளர்கள்
ஷில்லி ங் |
இங்கிலாந்து பெண் கண்டுபிடிப்பாளர்கள்
Rosalind Franklin
1920ஆம் ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங் ஹில்லில் பிறந்தவர். 1942ஆம் ஆண்டு நிலக்கரி பயன்பாடு பற்றிய இவரது ஆராய்ச்சி, அந்நாடு உலகப்போரில் நிலக்கரியை சிறப்பாக பயன்படுத்த உதவியது. இதுதொடர்பாகவே தன் முனைவர் படிப்பையும் செய்தார்.
1950ஆம் ஆண்டு ரோசாலின்ட் இருவகை டிஎன்ஏக்களை கண்டுபிடித்தார். இதன் காரணமாக கிங் கல்லூரியில் உதவித்தொகை பெற்றார். டிஎன்ஏ அதிகளவு ஈரப்பதமான சூழலில் இருந்தால் அதன் வடிவம் மாறிவிடும் என்பதை ஆராய்ச்சி செய்து கண்டறிந்தார். 1958ஆம்ஆண்டு ரோசாலின்ட் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டு 37 வயதில் மரணமடைந்தார்.
Janet Taylor
1804ஆம் ஆண்டு ஜேனட் டெய்லர் பிறந்தார். இவர் அவரது பெற்றோருக்கு ஆறாவது குழந்தை. இவர் தன் ஏழாவது வயதில் தாயாரை இழந்தார். கடல் சம்பந்தமான பல்வேறு சாதனங்களை தயாரித்து விற்று புகழ்பெற்றார். இவரது கருவிகள் பற்றி புகார்கள், சர்ச்சை இருந்தாலும் இதற்கான அகாடமி ஒன்றையும் துணிச்சலாக உருவாக்கி வென்றவர் இவர். 1617-1852 ஆம் ஆண்டில் பதிவான காப்புரிமைகள் எழுபதிற்கும் மேல். இதில் ஒரு காப்புரிமையை ஜேனட் டெய்லர் செய்தார். ஒரே பெண் இவர்தான். 1870ஆம் ஆண்டு இறந்தவர், ஏராளமான நூல்களை எழுதினார். இறப்பு சான்றிதழில் ஆசிரியை என்று குறிப்பிட்டிருந்தது. அதற்கும் மேலான பல்வேறு விஷயங்களை தன் வாழ்வில் சாதித்தார்.
Beatrice Shilling
1909ஆம் ஆண்டு ஹாம்ஷையரில் பிறந்த விண்வெளி வீராங்கனை. மோட்டார் சைக்கிள் பந்தய வீரரும் கூட. 14 வயதில் முதல் மோட்டார் சைக்கிளை வாங்கினார். 1940இல் போர் தொடங்கிவிட்டது. அப்போது ரோல்ஸ் ராய்ஸ் எஞ்சின்களை கொண்டு விமானங்களை இயக்குவது சிரமமாக இருந்தது. ஷில்லிங் இதற்கான பிரச்னையை தீர்த்து வைத்தார்.
நன்றி பிபிசி