மிஸ்டர் ரோனி - நான்கு கேள்விகள் - அதிரடி பதில்கள்!

Diver, Man, Swimmer, Water, Goggles, Oxygen, Close-Up
pixabay

மிஸ்டர் ரோனி - பேக் டூ பேக் கேள்விகள் -பதில்கள்


புதிய உயிரினங்களை எப்படி வகைப்படுத்துகிறார்கள்?

வகைப்படுத்துவது என்பது மிகப்பெரிய நீண்ட பணி. முதலில் ஆராய்ச்சியாளர்கள் தாம் கண்டறியும் உயிரினத்தின் மரபணுவையும், அதன் பரிணாம வளர்ச்சி பற்றியும் ஆராய வேண்டும். இதுபற்றிய செய்திகளை நன்றாக படித்துவிட்டு மரபணு ரீதியாகவும், பிற உயிரினங்களுடன் உள்ள தொடர்பையும் அறிந்துகொண்டு அப்போதும் அது புது உயிரி என்றால் அறிவியல் இதழ்களுக்கு அறிக்கையாக எழுதி அனுப்பலாம்.

அப்போதும் அது புதிய உயிரினம் என்பதற்கு உறுதி கிடையாது. பத்திரிகையில் வெளியான பிறகுதான் அதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலரும் விவாதிப்பார்கள். பின்னர், அதற்கான ஆதாரங்களோடு நாம் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தால் அந்த உயிரினம் புதிது என கருதப்பட, நிரூபிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த உயிரினத்திற்கும் நாம் தனுஸ்ரீ என பெயர் வைத்துவிட முடியாது. அதற்கும் உலக ஜூவாலஜிகல் நோமன்கிலேச்சர் என்ற அமைப்பின் அனுமதியும் ஒப்புதலும் தேவை. அப்போது பெயர் சூட்டி ஏ2பி லட்டை பரிமாறி சந்தோஷப்பட முடியும்.





உலகிலுள்ள ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் என்னாகும் ப்ரோ?

பயம் வந்துவிட்டதல்லவா? அப்போது பின்னாடியே தீர்வும் வந்துவிடும். தாவரங்கள் சூரிய ஒளி மூலம் செய்யும் ஒளிச்சேர்க்கை மூலமாகவே ஆக்சிஜன், சர்க்கரை, கார்பன் டை ஆக்சைடு உருவாகிறது. தாவரங்கள் அழிந்தாலும் சில நூறு ஆண்டுகளுக்கு நம் சூழலில் உள்ள ஆக்சிஜனை வைத்து சமாளித்து விட முடியும். கவலை வேண்டாம் ப்ரோ.


வானில் மேகம் நகர்வது எப்படி?

மேகத்தில் நீர்த்துளிகள் ஐஸ் கிரிஸ்டல்களாக உள்ளன. இவற்றின் மீது காற்றிலுள்ள தூசிகள் ஒட்டுகின்றன. இவற்றை பூமியிலுள்ள ஈர்ப்பு விசை இழுக்கிறது. இதன் விளைவாக நீர்த்துளிகள் ஒன்றாக சேர்ந்து மேகமாக மாறுகின்றன. இவை காற்று அழுத்தம் பொறுத்து பல்வேறு இடங்களுக்கு நகர்ந்து செல்கின்றன.




ஆர்டிக் பகுதியிலுள்ள துருவக்கரடிகளை அன்டார்டிகாவிற்கு மாற்றம் செய்யலாமா?

இது சூழலுக்கு பாதகம் ஏற்படுத்தும். அன்டார்டிகாவிலுள்ள சீல், பெங்குவின்கள் கரடிக்கு எளிதில் இரையாகும் அபாயம் உள்ளது. மேலும் கரடி அங்கு செல்வதால் பல்வேறு நோய்களை அங்குள்ள உயிரினங்களுக்கு பரப்பும் ஆபத்தும் உள்ளது. சூழல் ஒவ்வாமை ஏற்பட்டால் கரடியும் நோய்களுக்கு உள்ளாகி இறக்கலாம். எனவே கரடி அதற்கான இடத்தில் இருப்பதே நல்லது.

நன்றி - தி புக் ஆஃப் அமேசிங் ஆன்சர்ஸ்