அரசு எழுப்பும் தீண்டாமைச்சுவர்! - பணிகளில் காட்டப்படும் தீண்டாமை!




caste. caste violence. casteism. dalit
TNIE



அரசு எழுப்பும் தீண்டாமைச்சுவர்! 



கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. முகேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தர்காண்ட் அரசு, பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்குவது அடிப்படை உரிமை கிடையாது என்று கூறியுள்ளது. அரசியலமைபச

இந்த வழக்கு மட்டுமல்ல; இந்தியாவில் பல்வேறு பட்டியலினத்தவர்களுக்கு அரசு இதுபோன்ற அநீதியை இழைக்கிறது. இது எப்படி என்றால், ஆதி திராவிடர்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் அரசு பதவியை வகிக்கிறார்கள். அவர்கள் பணி ஓய்வு வரை அவர்களுக்கான பதவி பயன்களை கொடுக்க மறுக்கிறார்கள் இதில் ஊதிய உயர்வு, போனஸ் தொகை போன்றவையும் உள்ளடங்கும். பணி ஓய்வு பெறும்போது, பதவி உயர்வு கடிதம், அதுவரை நிறுத்தியிருந்த ஊதிய தொகை ஆகியவற்றை அரசு வழங்கி மன உளைச்சலை உருவாக்கி வருகிறது.

பஞ்சாபைச் சேர்ந்த பொதுநிர்வாகத்துறை ஊழியர் காஜல். இவருக்கு பணி ஓய்வு பெற்ற நாளில் பதவி உயர்வு கடிதம் கிடைத்துள்ளது. அதில் மூத்த பொறியியலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கான பணிநாட்கள் முடிந்துவிட்டன. அவர் வேலை செய்தது சூப்பரிடெண்டாக, ஆனால் அரசு ஆவணத்தில் அவர் மூத்த பொறியியலாளராக பணியாற்றியதாக இருக்கும். காஜல் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பட்டியலினத்தவர் என்பதால் தீண்டாமையைக் கடைபிடித்து அநீதி இழக்கின்றனர் என்பது காஜல் தரப்பு வாதம். இதில் தீர்ப்பு வந்த தேதி, பிப்.27.  இதன் விளைவாக அவருக்கு பதவி உயர்வு கிடைத்த தேதி பிப். 28. அதாவது காஜலின் பணி ஓய்வு பெறும் நாளன்று பதவி உயர்வு கிடைத்துள்ளது.


மத்திய அரசு பணியிடங்களில் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு 15 சதவீதமாக உள்ளது. பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் உள்ளது. இப்போது என்ன நினைப்பீர்கள்? குடிமைத்தேர்வுகளில் ஆதிதிராவிடர்களும், பட்டியலினத்தவர்களும்  நிறையப்பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டுமே என்றுதானே? யுபிஎஸ்சி தேர்வுகளில் 22.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது.

அரசு கொடுத்த தகவல்படி ஜூலை 2019 இல் செயலர் தகுதி பணிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை வெறும் 4 தான். கூடுதல் செயலர் தகுதியில் உள்ளவர்களின் எண்ணிக்கை 93. அதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை 11தான்.  முகேஷ்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தர்காண்ட் அரசு அரசியலமைப்புச் சட்டம் 16(4ஏ)வைக் காரணமாக காட்டி, எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் சலுகை வழங்குவது கட்டாயமல்ல. அடிப்படை உரிமை அல்ல என்று கூறியுள்ளது.

வரலாறு ரீதியாக புறக்கணிக்கப்பட்டு நசுக்கப்பட்ட இனக்குழுவினரான ஆதிதிராவிடர்கள் மற்றும் பட்டியலினத்தவர்களின் மேம்பாட்டுக்காக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இது அடிப்படை உரிமையாக கொண்டு வரப்பட்டது. யாரும் கருணை கொண்டு இந்த உரிமையை அளித்து விடவில்லை. என்கிறார் விட்னெஸ் ஃபார் ஜஸ்டிஸ் அமைப்பின் தலைவர் பாண்டியன்.


நன்றி - தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 16.02.2020

https://www.newindianexpress.com/thesundaystandard/2020/feb/16/caste-to-a-corner-2103946.html