சாக்கடை நாற்றம் அடிக்கும் சமூகநீதி சந்நிதானங்கள்! - அன்புள்ள அப்பாவுக்கு...
5
அன்புள்ள அப்பாவுக்கு,
நலமாக இருக்கிறீர்களா?
ராமகிருஷ்ண மட மருத்துவமனையில்
சில சோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. மஞ்சள் காமாலைக்கான சிறப்பு சிகிச்சை தேவையா இல்லையா
என்பதை முடிவு செய்ய இந்த சோதனைகள் தேவை என்று சொல்கிறார்கள். முத்தாரம் வார இதழ் இனி
நம் வீட்டிற்கு வரும். அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். உங்கள் பெயரிலேயே இதழ்
வரும்.
சம்பளம் 4ஆம் தேதி கிடைத்தது.
உள்ளாடைகள், பழங்கள் வாங்கினேன். அறைக்கும், அலுவலகத்திற்குமான தொலைவு வருந்தும்படியான
பிரச்னையாகவே இருக்கிறது. மயிலாப்பூரில் அறை கிடைக்குமா என்று பார்க்கவேண்டும். குங்குமத்தில்
நான் ஏதும் எழுதவில்லை. அப்படி எழுதினால் அந்த இதழை நான் உங்களுக்கு அனுப்பி வைப்பேன்.
தலித் முரசு இதழில் மீதிப்பணம்
வாங்குவதற்கு பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. தலித்துகளே கூட குறிப்பிட்ட நிலைக்கு வந்ததும், அடுத்தவர்களை சுரண்டி பிராமணர்களைப் போலவே மாறிவிடுகிறார்கள்.
பேசுவது சமூகநீதி என்றாலும் அவர்களின் சிந்தனைகள், பேச்சு எல்லாவற்றிலும் சாக்கடை நாற்றம்
அடிக்கிறது.
ச.அன்பரசு
6.3.16