மனநல பிரச்னைகளை சினிமாவில் சரியாக காட்டுவதில்லை! - ஷகீன் பட்
மன அழுத்தம், விரக்தி, மனச்சோர்வு ஆகியவற்றை இன்று அனைவரும்
பேசி வருகிறோம். காரணம், பணி, குடும்பம் என பல்வேறு விஷயங்கள் இடியாப்பம் போல ஒன்றாக
கலந்து நம் மனதைப் பாதிக்கின்றன. திரைப்பட
எழுத்தாளர் ஷகீன் பட் இதுபற்றிய ஐ ஹேவ் நெவர் பீன் அன் ஹேப்பியர் என்ற நூலை எழுதியுள்ளார்.
தன் இருபது ஆண்டு, மனச்சோர்வு விடுதலைப்போராட்டம் பற்றிய நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
நீங்கள் எழுதியுள்ள
நூலில் மனச்சோர்வு எப்படி உறவுகளை பாதித்தது என்று கூறியுள்ளீர்கள். உங்கள் குடும்பத்தில்
இதனை எப்படி எதிர்கொண்டார்கள்.?
என் குடும்பத்தில் எனக்கு ஏற்பட்ட மனச்சோர்வு பிரச்னை பற்றி
அனைவருக்கும் தெரியும். இதனால் நூல் வெளியானபோது எனக்கு எந்த பயமும் இல்லை. ஆனால் அறையில்
இருக்கும்போது, தனியாக இருக்க விரும்ப அதிகம் விரும்பியிருக்கிறேன். மனதிற்கு நெருக்கமானவரிடம்
கூட சில விஷயங்களை நாம் பகிர்ந்துகொள்ள முடியாது. இதனால்தான் நான் பிறருக்கு சொல்லவேண்டிய
விஷயங்களை நூலாக்கியுள்ளேன். இதனை படிக்கும்போது குழந்தை வளர்ப்பை ஆண்களும் செய்யவேண்டும்,
மனச்சோர்வு காலகட்டம், பாதிப்பு ஆகியவற்றஃ அறிந்துகொள்ளமுடியும்.
நீங்கள் உங்கள்
நூலில் முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டிருந்தீர்கள். மகிழ்ச்சியைத் தேடியபடியே அலைந்து
திரிந்து கவனமின்றி திரியும் மனநிலையை அதில் விவரித்திருந்தீர்கள்.
யாருமே முழுநேரமும் இங்கே மகிழ்ச்சியாக இருக்கமுடியாது. இப்படி
நாம் நினைக்க காரணமே, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பலரும் மகிழ்ச்சியாக இருக்கும் நம்மைப்
பற்றி ஏதாவது சொல்லுவார்கள் என்பதுதான். இதனால் மனநிலையில் பாதிப்பு ஏற்படும்போதும்
தான் பலவீனமானவன் என்று நாம் ஏற்பதில்லை. இதன் காரணமாக அவர்கள் மருத்துவரைத் தேடி வரும்போது
காலதாமதமாகிவிடுகிறது.
இந்த நூலைப்
படிக்கம்போது உங்கள் நாட்குறிப்பில் நீங்கள் எழுதிவைத்திருக்கும் சாத்தியமுள்ள விஷயங்கள்
காணப்படுகின்றனவே? மிக கடுமையான நாட்களை கடந்து வந்திருக்கிறீர்கள்.
நான் பனிரண்டு வயதிலிருந்து நாட்குறிப்பை எழுதி வருகிறேன்.
அப்போதிலிருந்து எனக்கு மனச்சோர்வு பிரச்னை உள்ளது. அதிலிருந்து தப்பிக்கவே நான் எழுத
தொடங்கினேன். எழுத்து என்னை குணப்படுத்தும் மருந்தாக செயல்பட்டதால் பின்னாளில் அதிலிருந்து
மீண்டேன். என்னை நானே புரிந்துகொள்ளவும் எழுத்தே உதவியது.
நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களைப் பற்றியும்
பதிவு செய்திருக்கிறீர்களே?
இதில் தவறேதும் இல்லை. உள்ளது உள்ளபடியே எழுதியுள்ளேன். எனது
குடும்பத்தினர் இதைப் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். மனநலம் பற்றிய புரிதலை
என் வழியாக வெளிப்படுத்த விரும்பினேன். அதாவது, என் அனுபவங்கள் வழியாக.
திரைக்கதை எழுத்தாளராக
மனநலம் பற்றிய புரிதலை திரையுலகம் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
இன்றுள்ள படங்கள் மனநலத்தை அபாயகரமான நோயாக சித்திரிக்கின்றன.
இது தவறானது. முடிந்தவரை இவற்றை சரியான முறையில் சொல்ல முயற்சிக்க வேண்டும். இல்லையெனில்
இதுபற்றிய தவறான செய்தியே மக்களிடம் சென்று சேரவேண்டும்.
நன்றி – டைம்ஸ்,
சோபிதா தர் ஜன.12, 2020