ஆபத்து நிறைந்த ஹைட்ரஜன்!
bevnet |
மிஸ்டர் ரோனி
சோடியம், குளோரின் என்ன வேறுபாடு?
சோடியத்தை அரிதாகவே நீங்கள் பார்த்திருப்பீர்கள். வெள்ளை நிறத்தில் எளிதாக கத்தியால் வெட்டமுடியும் தன்மையில் இருக்கும். மென்மையாக இருக்கிறதே என இதை நீரில் போட்டால் உடனே வெடிக்கும்.
வாயுவாக இருக்கும்போது பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை அதிகளவில் சுவாசிக்கும்போது ஒருவருக்கு மரணம் ஏற்படும்.இதனை பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்துகிறார்கள்.
சோடிய உலோகத்திலிருந்து குளோரின் அணுக்களைப் பெற்று சமையல் உப்பு உருவாகிறது. இவற்றை கிரிஸ்டல் வடிவில் அல்லது இதனை தூளாக்கி சாப்பிடும்போது நம் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.
ஆபத்தான வேதிப்பொருட்களில் ஹைட்ரஜன் உண்டா?
நாம் சுவாசிக்கும் ஐந்தில் ஒரு பங்கு காற்றில் ஹைட்ரஜன் உண்டு. இதில் இயங்கும் வாகனங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. தனியாக உள்ள ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தலாம். ஆனால் கவனமாக பயன்படுத்தாவிட்டால பெரும் விபத்து சம்பவிக்கும். அணுகுண்டுக்கு நிகராக ஹைட்ரஜன் குண்டுகளையும் நாடுகள் இன்று பாதுகாப்புக்குப் பயன்படுத்த தொடங்கியுள்ளதே ஹைட்ரஜனின் பெருமை சொல்லும்.
கேசியம் எனும் வேதிப்பொருள் கூட காற்றில் வினைபுரிந்து நெருப்பை உமிழும். நீரில் போட்டால் வெடிக்கும்.
நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்