நிலங்களில் சுரங்கம் அமைக்க முடியுமா?



மிஸ்டர் ரோனி



© Andy Potts
பிபிசி 


பூமியில் பல்வேறு கனிமங்களை சுரங்கம் அமைத்து தோண்டி விட்டோம். இனி மாசுபாடுகளின் பிரச்னைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் தெருக்களில் நடந்து வருகின்றன. இதனால் வேறு கோளைத் தேடிச்சென்று சுரங்கம் அமைத்து கனிமங்களை பெற ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். அது இரவில் நம்மை குளிர்விக்கும் நிலா என்றால் ஆச்சரியப்படுவீர்கள்.


நிலவின் தென் முனையில் மனிதர்கள் வாழ்வதற்கான நீராதாரம் பனிக்கட்டிகளாக உறைந்து கிடக்கிறது. மனிதர்கள் இங்கு வாழ நினைத்தால் இப்பகுதியில் காலனிகளை அமைக்கலாம். இங்கு கிடைக்கும் உலோக கனிமங்களும் நம்மை கவர்ந்து ஈர்க்கின்றன. சிலிகான், அலுமினியம், நியோடைமினியம், லாந்தனம், டைட்டானியம் ஆகியவை நிலவில் அதிகளவு உள்ளன. மேலும் தரைப்பரப்பில் ஹீலியம் 3 எனும் ஐசோடோப்பு கிடைக்கிறது. இதனை அணுஉலையில் பயன்படுத்த முடியும். இதனால் பல்வேறு அணுஉலை நிறுவனங்கள் நிலவை தோண்ட ஆர்வமாக முன்வந்துள்ளன.

© Andy Potts
பிபிசி 

நிலவில் உள்ள கனிமங்களை பல்வேறு உலக நாடுகளும் பகிர்ந்துகொள்ளும் முயற்சிகளை செய்து வருகின்றனர். 1979ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. நிலவை உலக நாடுகள் அனைவருக்குமான சொத்தாக கருதி, அங்கு கிடைக்கும் வளங்களை பகிர்ந்துகொள்வதற்கான விதிகளைக் கொண்டது இந்த ஒப்பந்தம். ஆனால் இதனை அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை.

நிலவில் பூமியில் உள்ள ஈர்ப்புவிசையில் ஆறில் ஒரு பங்குதான் உள்ளது. இதனால் இங்கு எளிதில் செல்லமுடிந்தால், பிற கோள்களுக்கான பயணத்தை திட்டமிட முடியும். காரணம், இங்குள்ள நீராதாரத்தைப் பயன்படுத்தி ராக்கெட்டுகளுக்கான எரிபொருளை தயாரித்து விடலாம். நீரிலுள்ள ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் பிரித்தாலே எரிபொருள் கிடைத்துவிடும். இதனால் செவ்வாய் போன்ற பிற கோள்களுக்கு செல்வது எளிது.


நன்றி - பிபிசி