எனக்கு பாக்ஸ் ஆபீஸ் வசூல்தான் முக்கியம்! - அக்சய் குமார் அதிரடி!
நேர்காணல்
அக்சய் குமார், திரைப்பட
நடிகர்.
நீங்கள் பதினோராவது வெற்றிப்படத்தை
கொடுத்துள்ளீர்கள். உங்கள் ரசிகர்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள்.
நான் அடுத்து நான்கு படங்களில்
நடிக்க உள்ளேன். என்னுடைய அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்துகிறேனா என்பது
பற்றி தெளிவாக கூறமுடியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் செயல்படுகிறேனா என்பதைப் பற்றியே
கவலைப்படுகிறேன். நான் சிறப்பாக பணியாற்றி வருகிறேன்.
உங்களுடைய படங்கள் விமர்சகர்களின்
விமர்சனங்களையும் மீறி வெற்றியடைந்து வருகிறதே?
நான் விமர்சகர்களின் நேர்மையான
விமர்சனங்களை ஏற்கிறேன். காமெடி பற்றிய விமர்சனங்களும் முக்கியம்தான். அவை உங்களை ஆக்கப்பூர்வமாக
மேம்படுத்தவேண்டும் அவ்வளவுதான். எனக்குப்பிடித்த நான் நடிக்கும் காமெடி என் மனைவிக்கு
பிடிக்காது. அவர் வேறுவிதமான காமெடியை ரசிக்கிறார். இதுபோலவே விமர்சகர்களுக்கும் காமெடி
மீதான ஈடுபாடு, விமர்சனங்கள் மாறுபடும்.
உங்களுடைய படங்கள் பற்றி
நிறைய எதிர்மறையாக விமர்சனங்கள் வருகிறதே?
நான் மக்கள் பேசுவதை பெரிதாக
எடுத்துக்கொள்வதில்லை. அவர்களுக்குப் பிடித்தால் அதனை பாக்ஸ் ஆபீஸ் வசூல் சொல்லிவிடும்.
அதுமட்டுமேதான் முக்கியமான விமர்சனமாக நான் கருதுகிறேன்.
நீங்கள் சண்டை நடிகராக இருந்து
பின்னர் காமெடி நடிகராக மாறினீர்கள். அதுபற்றி சொல்லுங்கள்.
நான் இதனை திட்டமிட்டபடி
செய்யவில்லை. எனக்கு வந்த கதைகளின் அடிப்படையில் அதனை செய்தேன். அவ்வளவுதான். நான்
நடிப்பு பயிற்சிப் பள்ளிக்கு சென்று படித்தவனல்ல. இயக்குநரின் கையில் என்னை நடிகனாக
ஒப்படைத்து விடுவேன். ஏனெனில் என்னைவிட அவர் ஆயிரம் முறை அந்த படத்தை பார்த்து இருப்பார்.
அவர்தான் திரைப்படம் எனும் கப்பலின் கேப்டன். என்ன, உங்களுடைய கப்பலுக்கு டைட்டானிக்
போன்ற நிலைமை வந்துவிடக்கூடாது.
ஒரு நடிகராக நீங்கள் தன்னம்பிக்கையோடு
இருக்கிறீர்களா?
நடிகராக திரைப்படம் வெளியாகும்போது
எனக்கு ஏற்படம் பதற்றம் என்னுடைய குழுவினருக்கு மட்டுமே தெரியும். விமர்சகர்கள், மக்களின்
கருத்து ஆகியவற்றைக் கேட்பது ஆகியவை முக்கியமானது. காரணம், நீங்கள் குறிப்பிட்ட படத்திற்காக
பல மாதங்கள் கடுமையாக உழைத்திருப்பீர்கள்.
நன்றி – டைம்ஸ் லைஃப், அஷ்வினி
தேஷ்முக்