உடலை குலைக்கும் நோய்! - அன்புள்ள அப்பாவுக்கு...
pixabay |
9
அன்புள்ள
அப்பாவுக்கு, வணக்கம்.
நான்
இங்கு நலம். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். வெயில் சென்ற ஆண்டைவிட
இந்த ஆண்டு அதிகம் காய்கிறது. பருத்தி உடையைத் தவிர வேறெதுவும் அணிய முடியவில்லை. பருத்தியானாலும்
பதினைந்து நிமிடத்தில் நனைந்து வியர்வை வாடை மூக்கைத் துளைக்கிறது.
இந்த
ஞாயிறு எங்கும் வெளியில் செல்லவில்லை. அறையில் ஜனா சமைத்தார். இரவில் உள்ளே படுக்க
முடிவதில்லை. கடுமையான புழுக்கம். மழை, வெயில் இரண்டையும் அப்படியே இந்த அறை அப்படியே
கண்ணாடி போல பிரதிபலித்துவிடுகிறது. சில நாட்களாக மாடியில்தான் தூக்கம். நான் எழுதும்
கட்டுரைகளை நீங்கள் படித்திருக்க மாட்டீர்கள். கவனிப்பீர்கள் என்று நம்புகிறேன். முத்தாரத்திற்கு
எந்த விளம்பரமும் வருவதில்லை. இதனால் இதற்கு விற்பனையும் கிடையாது.
மஞ்சள்
காமாலைக்காக கீழாநெல்லி மருந்தை தினசரி குடித்து வருகிறேன். வீட்டில் சமைத்த உணவை சாப்பிட்டாலே
உடல் சரியாகிவிடும். முழு உடல் பரிசோதனையை நீங்கள் செய்யப்போவதாக அம்மா சொன்னார். இதற்கான
சோதனைகளை மருத்துவமனைக்கு மருத்துவமனை மாற்றிச் சொல்லுகின்றனர். பொரித்தல், வறுத்தல்
இல்லாத உணவுகளைச் சாப்பிட்டு, கொழுப்பு கொண்ட கறி போன்றவற்றை தவிர்த்தாலே போதும்.
நன்றி!
ச.அன்பரசு
24.4.16