இடுகைகள்

அமெரிக்கா - வெடிகுண்டு மிரட்டல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஜனநாயக கட்சி தலைவர்களுக்கு மிரட்டல்!

படம்
வெடிகுண்டு மிரட்டல்! ஜனநாயக கட்சித்தலைவர்களுக்கு பைப் வெடிகுண்டுகளை பார்சல் அனுப்பிய சந்தேகத்தில் ட்ரம்ப் ஆதரவாளரான அமெரிக்கர் சீசர் சயோக்கை எஃப்பிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. புளோரிடாவின் அவென் சுரா பகுதியைச் சேர்ந்த சீசர் சயோக், டிஜே, பவுன்சர் என வேலைபார்ப்பவர் ஹாபியாக பாடி பில்டிங், பாக்கெட் மணிக்கு பீட்ஸா டெலிவரி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பணிகளை செய்தும் வந்துள்ளார். சோஷியல் மீடியா பதிவுகளும், வேனில் ஒட்டியுள்ள ட்ரம்ப் ஆதரவு ஸ்டிக்கர்களும் அவர் மீதான சந்தேகத்தை போலீசாருக்கு தூண்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு விலகிய சீசர், வெள்ளை வேனில் வாழ்ந்து வந்துள்ளார். போலீஸ், அந்த வேனில் பைப் குண்டுகளை தயாரித்ததற்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முன்பே சிற்சில திருட்டுகள், போதைப்பொருள் விற்பனை குற்றங்களுக்காக ஒன்பது முறை போலீசில் கைதானவர் சீசர். புகார் வராமல் பீட்ஸா டெலிவரி செய்தாலும் இரண்டு ஃபேஸ்புக் கணக்குகளில் சீசர் பதிவிட்ட தாராளவாதிகளுக்கு எதிரான பதிவுகளும், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், தன்பாலினத்தோருக்கு எதிராக பேச்சுக்களும்