இடுகைகள்

நிலநடுக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Rings of fire என்றால் என்ன? - தைவான் நிலநடுக்கம்!

படம்
  தைவான் நிலநடுக்கம் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி, தைவானில் நடந்த நிலநடுக்கம் இருபத்தைந்து ஆண்டு வரலாற்றில் தீவிரமானது. அமெரிக்க வல்லுநர்கள் கணிப்பில் 7.4 ரிக்டர் அளவில் இருந்தது. இந்த இயற்கை பேரிடரில் எண்ணூறு பேர் காயமுற்றனர். ஒன்பது பேர் பலியானார்கள்.  நிலநடுக்கத்தின் தொடக்கம், தைவானின் கிழக்குப்பகுதி. அங்கே உள்ள ஹூவாலியன் கவுண்டி பகுதியில் உருவாகி வந்தது. இங்கு, பல்வேறு நிலநடுக்க அதிர்ச்சிகள் பதிவானது. அதில் ஒன்று, 6.5 ரிக்டர் அளவும் ஒன்று. உலகிலுள்ள நாடுகளில் தொண்ணூறு சதவீத நிலநடுக்க பாதிப்பு நடக்கும் நாடு, தைவான். இப்படியான நிலநடுக்க சூழல் கொண்ட நாட்டை ரிங் ஆஃப் ஃபயர் என்று குறிப்பிடுகிறார்கள். 1980ஆம் ஆண்டு தொடங்கி தைவானில் 4 ரிக்டர் அளவு அல்லது அதற்கு மேல் என நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது.  எண்ணிக்கையில் இரண்டாயிரத்திற்கும் மேல் வருகிறது. நூறு நிலநடுக்கங்களின் ரிக்டர் அளவு 5.5 என அமெரிக்க நிலநடுக்க ஆய்வு அறிக்கை கூறுகிறது.  பசிஃபிக் கடல் பகுதியில் உள்ள எரிமலை, நிலநடுக்கப்பகுதிகளை ரிங் ஆஃப் ஃபயர் என்று குறிப்பிடுகிறார்கள். 40,240 கி.மீ. தொலைவில் அரைவட்ட அளவில் இப்பகுதி அமைந்துள்ள

நிலநடுக்கத்தை முன்னரே அறிந்து இழப்பைத் தடுக்க உதவும் கருவிகள், முறைகள்!

படம்
  நிலநடுக்கத்தை அறிய உதவும் பல்வேறு முறைகள்!  பூமியின் கீழுள்ள அடித்தட்டு பகுதி (Crust), மேற்புற மூடகம் (Mantle) ஆகியவற்றுக்கு இடையில்  புவித்தட்டுகள் அமைந்துள்ளன. இவை ஒன்றன் மீது மற்றொன்று நகரும்போது  நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் புள்ளி, ஃபோகஸ் அல்லது ஹைப்போசென்டர்  (Hypo center)என்று அழைக்கப்படுகிறது.  நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளை எளிதாக நீட்ட முடியும். இதில் கூடுதலாக அழுத்தம் சேரும்போது, குறிப்பிட்ட வரம்புவரை நீளும். அதையும் தாண்டி அழுத்தம் கொடுத்தால் அப்பொருள் உடைந்துவிடும். பூமியும் அப்படித்தான் இயங்குகிறது. பூமியின் கீழ்ப்பகுதியில்  வெப்பம், அழுத்தம் உருவாகிறது. இப்படி உருவாகும் ஆற்றலை பூமி, நெகிழ்வுத்தன்மை கொண்ட அலையாக மாற்றுகிறது. இதனை நிலநடுக்க அலைகள் (Seismic waves) என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  நிலநடுக்க அலைகளை, நிலநடுக்க அளவீட்டு நிலையங்கள் கண்டறிகின்றன. அலைகளின் ஆற்றலை அறிய, சீஸ்மோகிராப் கருவிகள் உதவுகின்றன. இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் (National Center for Seismology (NCS)) செயல்பட்டு

இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பதுதான் எனது வேலை - ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன்

படம்
  ரோகினி சம்பூர்ணம் சாமிநாதன் இயற்கை பேரிடர் வல்லுநர், யுனிசெஃப் தற்போது தாங்கள் என்ன பணிகளைச் செய்துகொண்டிருக்கிறீர்கள்? இயற்கை பேரிடர்களை முன்னமே கணித்து தடுப்பதற்கான பணிகளை செய்துகொண்டிருக்கிறேன். இயற்கை பேரிடர் ,நடந்த முதல் 72 மணிநேரம் முக்கியமானது. அந்த நேரத்தில் நாம் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும்.  இதற்கென சில மாதிரிகள் உள்ளன. அவற்றின் அடிப்படையில் நாங்கள் மண்டல அளவிலான அலுவலகங்களை தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறுவோம். இப்போது தகவல்களுக்கான ஆன்லைன் டேஷ்போர்டு ஒன்றை உருவாக்கியுள்ளோம்.  நீங்கள் ஜியோமேட்டிக்ஸ் துறையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? எனக்கு புவியியல் துறையில் ஆர்வம் உண்டு. எனக்கு 14 வயதாகும்போது இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியைப் பார்த்தேன். இந்த இயற்கை பேரிடர்தான் இத்துறையில் நான் இன்று பணியாற்றுவதற்கு முக்கியக் காரணம். தமிழ்நாட்டில் அரசு அதிகாரியான எனது தந்தை அங்குள்ள மீனவர்களை அடிக்கடி சந்திப்பார். நானும் அப்படிப்பட்ட நேரத்தில் அப்பாவுடன் கூடவே செல்வேன்.  சுனாமி பாதிப்பு ஏற்பட்ட பிறகு அக்கடற்புரத்திற்கு நான் சென்றேன். இயற்கை பேரிடரால் மக்கள் எப

நிலநடுக்கத்தை முன்னறிவோம்!

படம்
  நிலநடுக்கத்தை முன்னறிவோம்! பூமியின் கீழுள்ள அடித்தட்டு பகுதி (Crust), மேற்புற மூடகம் (Mantle) ஆகியவற்றுக்கு இடையில்  புவித்தட்டுகள் அமைந்துள்ளன. இவை ஒன்றன் மீது மற்றொன்று நகரும்போது  நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலநடுக்கம் தொடங்கும் பூமியின் புள்ளி, ஃபோகஸ் அல்லது ஹைப்போசென்டர்  (Hypo center)என்று அழைக்கப்படுகிறது.  நெகிழ்வுத்தன்மை கொண்ட பொருளை எளிதாக நீட்ட முடியும். இதில் கூடுதலாக அழுத்தம் சேரும்போது, குறிப்பிட்ட வரம்புவரை நீளும். அதையும் தாண்டி அழுத்தம் கொடுத்தால் அப்பொருள் உடைந்துவிடும். பூமியும் அப்படித்தான் இயங்குகிறது. பூமியின் கீழ்ப்பகுதியில்  வெப்பம், அழுத்தம் உருவாகிறது. இப்படி உருவாகும் ஆற்றலை பூமி, நெகிழ்வுத்தன்மை கொண்ட அலையாக மாற்றுகிறது. இதனை நிலநடுக்க அலைகள் (Seismic waves) என்று புவியியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.  நிலநடுக்க அலைகளை, நிலநடுக்க அளவீட்டு நிலையங்கள் கண்டறிகின்றன. அலைகளின் ஆற்றலை அறிய, சீஸ்மோகிராப் கருவிகள் உதவுகின்றன. இந்தியாவில், புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தேசிய நிலநடுக்க அளவீட்டு மையம் (National Center for Seismology (NCS)) செயல்பட்டு வருகிறது. இந்த அ

நிலநடுக்க பொது எச்சரிக்கை அமைப்பின் முன்னேற்றம்!

படம்
  நிலநடுக்க முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்! ஒரு நாட்டின் பரப்பில் நடைபெறும் தட்பவெப்பநிலை மாற்றங்களை அரசு அமைப்புகள் துல்லியமாக கண்காணிக்கின்றன. அமெரிக்காவின்  நாசா அமைப்பு, பல்வேறு செயற்கைக்கோள்கள் மூலம்  மாகாணங்களில் ஏற்படும் நிலப்பரப்பு ரீதியான மாற்றங்கள் அனைத்தையும் பதிவு செய்கிறது. இதனோடு தேசிய கடல் மற்றும் சூழல் அமைப்பும், அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பும்(USGS) இணைந்து பணியாற்றுகின்றன. தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்கின்றன.  கூடுதலாக, அமெரிக்க அரசு அமைப்புகள்,  தனியார் நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றி வருகின்றன. இதனால், அடிப்படை அறிவியல் கேள்விகளுக்கும், கடினமான சவால்களை பற்றிய ஆய்வுகளை செய்யமுடிகிறது.  தற்போது நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் நுட்பங்கள் (Earthquake Early Warning EEW)வேகமாக முன்னேறி வருகின்றன.  இதற்கு முக்கியமான காரணம், அமெரிக்க அரசும், தனியாரும் இணைந்து தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதுதான். இதன்மூலம் நிலநடுக்கத்தால் பலியாகும் ஏராளமான மக்களைக் காப்பாற்ற முடியும்.  நிலநடுக்கம் ஏற்படும் நிலநடுக்கவெளி மையத்தில் (Epicenter) நிலநடுக்க சென்சார்களை பொருத்துகின்றன

மூக்கில் ரத்தம் கொட்டினால் என்ன அர்த்தம்? உ்ணமையும் உடான்ஸூம்

படம்
        1. உடலைக் கடுமையாக வருத்திக்கொண்டால் மூக்கில் ரத்தப்பெருக்கு ஏற்படும் . ரியல் : 1980 களில் வெளியான ஆங்கில திரைப்படங்கள் , காமிக்ஸ்களில் அதிசய சக்தி கொண்ட நாயகர்கள் தங்கள் சக்தியை அதிகம் பயன்படுத்தினால் பக்கவிளைவாக மூக்கில் ரத்தம் கொட்டி மயங்கி விழுவார்கள் . உண்மையில் பனி , வறண்ட காலநிலையில் மூக்கில் ரத்தம் கொட்டுவது இயல்பானது . உயர் ரத்த அழுத்தம் , மூக்கை விரலால் நோண்டுவது காரணமாகவே பெரும்பாலானோர்க்கு மூக்கில் ரத்தம் கொட்டுகிறது . சில நிமிடங்கள் தானாகவே ரத்தம் கொட்டுவது நின்றுவிடும் . இப்படி ரத்தம் கொட்டுவதற்கு எபிஸ்டாக்சிஸ் (Epistaxis) என்று பெயர் . ரத்தம் உறையாமல் இருந்தால் மருத்துவரின் ஆலோசனைகள் அவசியம் . உடலை அல்லது மூளையை அதிகம் பயன்படுத்துவதால் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டுவதில்லை . 2 . பூமியில் நிலநடுக்கும் ஏற்படுவது போல வானிலும் ஏற்படுவது உண்டு . ரியல் : சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிலுள்ள அலபாமா மாநிலத்தில் சில பகுதிகளில் வெடிகுண்டு வெடித்தாற் போன்ற பெரும் சத்தம் கேட்டது . இந்த ஒலிகள் இரண்டு , மூன்று நாட்கள் ஒலித்திருப்பதை தேசிய தட்பவெப

தலைநகரில் தொடர்ச்சியாக தோன்றும் நிலநடுக்கங்கள்! - டில்லியில் அடுத்த பிரச்னை

படம்
தலைநகரை மிரட்டும் நிலநடுக்கம்! இந்தியத் தலைநகரான டில்லியில் கடந்த இரு மாதங்களில் 13 முறை சிறிய அதிர்வுகளைக் கொண்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது முதல்முறையல்ல, கடந்த இருபது ஆண்டுகளாக 600 முறை நிலநடுக்கங்கள் ஏற்படுள்ளதாக ஆவணங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை அளவிடும் கருவியான சீஸ்மோமீட்டர் நாடு முழுவதும் 115 என்ற எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன. அதில் 16 டில்லியில் உள்ளன. மொத்து ஆறு நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் அளவுகோலில் நான்கு பதிவு செய்யப்படுகின்றன. இத்தகைய நிலநடுக்கத்திற்கு இந்திய தகட்டில் ஏற்பட்டுள்ள விரிசல்கள்தான் காரணம் என்று புவியியல் ஆய்வாளர்கள் தகவல் சொல்லுகின்றனர். மகேந்திரகர் – டேராடூன் வழியில் நிறைய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. டில்லியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தின் அதிர்வு தன்மை 4.5 ஆகும்.   அடுத்து பெரும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதா? நிச்சயம் இதற்கு யாரும் பதில் சொல்ல முடியாது. நிலநடுக்கம், புயல் ஆகியவற்றை எப்போது எப்படி வரும் என்று கூறமுடியாது. ஒரு சிலர் பெரும் நிலநடுக்கம் வருவதற்கு முன்பு, குறிப்பிட்ட இடத்தில் சிறிய நிலநடுக்கங்கள் ஏற்படும் எ

கடலிலுள்ள உப்பு குறைந்தால், காணாமல் போனால் என்னாகும்?

படம்
pixabay ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி திடீரென கடலிலுள்ள டன் கணக்கிலான உப்பும் காணாமல் போனால் என்னாகும்? உடனே நடக்கும் ரியாக்ஷன், நிலநடுக்கம் மற்றும் எரிமலைகள் வெடிப்புதான். அடுத்து பிற இடங்களிலுள்ள நீர், கடல் நீரின் அடர்த்திக்குறைவால் சவ்வூடு பரவல் முறையில் உள்ளே வர முயற்சிக்கும். ஆர்க்டிக் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் சிறிது உருகும். ஒரு லிட்டர் நீரில் 35 கிராம் உப்பு உள்ளது. நீங்கள் கேட்கும் கேள்வி நிஜமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இப்போதைக்கு எந் பிரச்னையும் இல்லை. நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்