இடுகைகள்

டெக் உலகு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் போனுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்கள் இதோ......2020

படம்
          சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ் ஸ்னாப்சீட் ஆண்ட்ராய்டுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் இது . போட்டோ எப்படி எடுத்தாலும் இதில் உள்ள ஏராளமான டூல்களை பயன்படுத்தி ரவிவர்மாக ஓவியம் போல அழகாக மாற்றமுடியும் . புகைப்படத்தை தவறுதலாக அழித்துவிட்டாலும் கூட அதனைத் திரும்ப பெற முடியும் . கூகுளின் தயாரிப்பு என்பதால் தயங்காமல் பயன்படுத்தலாம் . ஆப்பை திறந்தவுடனே பிரிவியூ பேனல் அழகாக விரிகிறது . செய்யும் மாறுதல்களை உடனுக்குடன் பார்த்துக் கொள்ளலாம் . விஸ்கோ இந்த ஆப் தனித்திறமையான புகைப்படக்காரர்களுக்கானது . இதன் சிறப்பம்சம் , ரெசிப்பீஸ் என்ற அம்சம் . எதிர்காலத்தில் புகைப்படத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களுக்காக அதனை சேமித்து வைக்க முடியும் . இலவச ஆப்பில் குறைந்த சமாச்சாரங்களைத்தான் சோதிக்க முடியும் . புகைப்பட எடிட்டிங் ஆப் என்றாலும் , இதனை சமூக வலைத்தளம் போல பயன்படுத்தால் . இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் படங்களைப் பார்க்கலாம் . நண்பர்களுக்கு நீங்கள் செய்த படங்களை பகிரலாம் . இதில் உடனே மாஸ்டர் ஆக முடியாது . அதிக நேரம் செலவழித்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து ப

ஐபிஎம் கணினியை மிஞ்சும் புதிய ரக குவாண்டம் கணினி!

படம்
          cc     புதிய குவாண்டம் கணினி !   அமெரிக்காவைச் சேர்ந்த ஹனிவெல் கணினி நிறுவனம் , உலகிலேயே சக்தி வாய்ந்த குவாண்டம் கணினியைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளது . ஹனிவெல் நிறுவனம் கூறியபடி , குவாண்டம் கணினி அமைந்தால் அது ஐபிஎம் நிறுவனத்தின் குவாண்டம் கணினிக்கு அடுத்தபடியாக அமையும் . பொதுவாக இக்கணினிகளின் கணக்கிடும் திறன் , தவறுகளின் எண்ணிக்கை ஆகியவை அதன் குவாண்டம் வால்யூம் அளவைப் பொறுத்து அமையும் . ஹனிவெல் குவாண்டம் கணினியின் அளவு 64 குவாண்டம் பிட்ஸாக உள்ளது . இது ஐபிஎம் கணினியின் திறனுக்கு அடுத்தபடியான திறன் கொண்ட கணினி ஆகும் . ” குவாண்டம் கணினியின் திறனை அளவிட 120 அல்காரிதம்கள் பயன்படுத்தப்படுகின்றன . எங்களது கணினி , அதிக தகவல்களைக் கொண்ட கணிதத்தை செய்யும் திறன் பெற்றது” என்கிறார் ஹனிவெல் நிறுவனத்தின் இயக்குநரான டோனி உட்லே . இக்கணினி , எந்திரவழி கற்றல் , வேதியியல் , பொருள் பற்றிய அறிவியல் ஆகிய துறைசார்ந்த அறிவைக் கொண்டது . மேலும் இக்கணினியின் திறன் காலத்திற்கேற்ப அதிகரிக்கும்போது , பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரச்னைகளை சமாளிக்கும் திறன் பெற்று விளங்க வாய்ப்புள்ள

காணாமல் போகும் ஸ்டெதாஸ்கோப் - புதிய தொழில்நுட்பங்களின் வருகை!

படம்
giphy.com ஸ்டெதாஸ்கோப் இல்லாத ஒருவரை டாக்டர் என அவரே சொன்னாலும் மக்கள் நம்புவதில்லை. ஆனால் இனி ஸ்டெதாஸ்கோப்பின் தேவை கிடையாது. தொழில்நுட்பம் அந்தளவு வளர்ந்துவிட்டது. வீட்டில் நீங்களே உங்களை சோதித்துக்கொள்ளுமளவு டெக் உலகம் வளர்ந்திருக்கிறது. கூடுதலாக டிஜிட்டல் ஸ்டெதாஸ்கோப் இதயத்துடிப்பைக் கணிக்கிறது. கையில் இலகுவாக பயன்படுத்தும் புதிய கருவிகளும் மொபைல் போனுடன் இணைத்துப் பயன்படுத்துமளவு வந்துவிட்டன. அமெரிக்காவில் உள்ள பட்டர்ஃப்ளை இன்க் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள கருவியை நோயாளிகளே பயன்படுத்தலாம். இம்முறையில் நாம் நம் உடல்நிலையை படம் எடுத்து மருத்துவருக்கு அனுப்பலாம். அவர் பிரச்னையைப் பொறுத்து உங்களுக்கு சிகிச்சை வழங்குவார். ஸ்கைப்பில் வழங்குவாரா என்றெல்லாம் கேட்கக்கூடாது. அது அவரவர் வசதியைப் பொறுத்தது. ஸ்டெதாஸ்கோப்பில் நம் நெஞ்சிலும், முதுகிலும் வைக்கும் உலோகப்பரப்பு ஒலியை பெரிதுபடுத்திக் கொடுக்கிறது. இது, மருத்துவர் காதில் பொருத்தியுள்ள கருவியில் கேட்கிறது. மருத்துவப் பயிற்சி பெற்றுள்ளவருக்கு இதன் மாறுபாடுகளைப் புரிந்துகொள்ள முடியும். ரெனெ லானெக் என்ற பிரெஞ்சுக்காரர