இடுகைகள்

கொள்ளைநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொள்ளைநோய் கோவிட் -19 விதிகள் - சட்டத்தை கடைபிடிக்காத மத்திய அரசு

படம்
newslaundry ஸ்பானிஷ் காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் முதல் ஏராளமான கொள்ளை நோய்களை உலகம் சந்தித்துள்ளது. இதற்கான விதிகளும் இயற்றப்பட்டு அச்சமயங்களில் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் பொதுவாக இப்பிரச்னைகள் ஏற்பட அதிக வாய்ப்பில்லை. காரணம் காய்ச்சலுக்கு சாகுபவர்களை விட கஞ்சிக்கு செத்தவர்கள் இங்கு அதிகம். அந்தளவு சோற்றுக்காக கஷ்டப்பட்டவர்கள். பசி, பட்டினி பாதிப்பு இந்தியாவில் அதிகம். அதற்காக நோய்களே வரவில்லை என்று கூற முடியாது. அதன் பாதிப்பு மிகவும் குறைவு. பிரிட்டிஷாரின் ஆட்சியில் 1897ஆம் ஆண்டு தொற்றுநோய் சட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை பிரித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நடைமுறைக்கு வந்தது. 1918ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சா பாதிப்பு ஏற்பட்டு பல்லாயிரம் மக்கள் இறந்தபோது இக்கட்டுப்பாடுகளை கடைபிடித்தனர். இன்று இதில் சில மாற்றங்களை ஏற்படுத்தினாலும், 123 ஆண்டுகால சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் அப்படியே கடைபிடித்து வருகின்றன. பொதுமக்களுக்கான சுகாதாரத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு புதிய விதிகள் இயற்றப்பட்டன. இதில் நோய்களின் பாதிப்பு, அவர்களுக்கான சிகிச்சை

கோடையில் கொரோனா பரவுமா?

படம்
giphy கொரோனா இறப்பில் இத்தாலி சீனாவை முந்தி முன்னுக்கு வந்துகொண்டிருக்கிறது. இறப்பை தடுக்க முடியுமா என்பதை விட பரவுவதை தடுக்கவே ஆராய்ச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். அதனால் பல்வேறு சூழல்களில் கொரோனா வைரஸ் பரவுமா என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்து வருகின்றனர். உடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நீர்த்திவலைகள் வழியாக பரவும் கொரோனாவை எதிர்க்கும்  பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். ”கொரோனா வைரஸ் இன்ஃப்ளூயன்சா வைரஸ் போலவேதான் பரவுகிறது. நீர்த்திவலைகளை வழியாக பரவும் அதன் வேகத்தை கட்டுப்படுத்த சூழல்களின் பங்கு உண்டா என ஆராய்ந்து வருகிறோம் ” என்கிறார் ஆய்வாளர் சவீஸ் சஃபாரியன். வைரஸ்களின் மேலோட்டை வெப்பம் பாதிக்குமா என ஆராய்ச்சி செய்வதற்காக  இரண்டு லட்சம் டாலர்களை உதவித்தொகையாக சவீஸ் பெற்றிருக்கிறார். வைரஸ் தானாக எதையும் செய்யும் திறன் கொண்டது அல்ல. பிற உயிரிகளின் செல்களில் நுழைந்து அதன் செயல்பாட்டை முடக்கி தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மேற்சொன்ன ஆய்வுக்காக வைரஸ்களின் மேலோடுகளை செயற்கையாக உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக, இதில் வைரஸ் மரபணுக்கள் இருக்காது. எனவே, வைரஸ் பாதிப்