இடுகைகள்

ஐடி செல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை வளைக்க முயலும் காவிக்கட்சி! - ரூட்டு புதுசு

படம்
  இன்ஸ்டாகிராம் இளைஞர்களை குறிவைத்து வளைக்கும் பாஜக இன்று சாதாரணமாக பாய் விற்கும் வியாபாரி கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு   மகிழ்ச்சியுடன் தனது பயண நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் இளைஞர்களின் வாழ்க்கை அதிவேகத்தில் பயணித்து வருகிறது. ஒரு நிமிட வீடியோ போதும் ஒருவரை பிரபலமாக்க.. இதில் எதையும் யோசிக்க வேண்டியதில்லை. டிவி பார்ப்பது போல... ரீல்ஸை  விரல்களால் தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே போகலாம்.  அரசியல் கட்சிகளில் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஏற்பாட்டை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.   சமூக வலைத்தளங்களில் மோடியின் அனைத்து செயல்பாடுகளும் ரீல்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர், இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் இருபத்தைந்து சந்திப்புகள் நடந்தன. இவை அனைத்துமே பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு ரீல்ஸ் வடிவில் வெளியாகின. இதை அப்போதே 2.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள். 40 ஆயிரம் பேர் லைக் போட்டு விரும்புவத