இடுகைகள்

வளிமண்டலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழல் சொற்களுக்கான அர்த்தம் அறிவோம்!

படம்
  அருஞ்சொல் Albedo சூரியனின் கதிர்வீச்சு பொருளின் மீது அல்லது பரப்பின் மீது எந்தளவு படுகிறது என்பதைக் குறிக்கும் அளவு. வானியலில் அதிகம் பயன்படுகிறது.  Alternative Energy சூரியன், காற்று, நீர் ஆகிய இயற்கை வள ஆதாரங்களிலிருந்து பெறும் ஆற்றல் Anthropogenic மனிதர்களின் செயல்பாட்டால் இயற்கையில் ஏற்படும் மாறுதல் அல்லது பாதிப்பு. பொதுவாக, மனிதர்களால் உருவாகும் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.  Atmosphere பூமியின் வளிமண்டலம். காற்றிலுள்ள நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட் உள்ளிட்ட வாயுக்களைக் குறிப்பிடுகிறது.  Atmospheric Lifetime வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் ஆயுட்காலத்தைக் குறிக்கிறது. பசுமை இல்ல வாயுக்கள் ஒருமுறை வெளியானால், வளிமண்டலத்தில் பல்லாண்டுகள் இயக்கத்தில் இருக்கும். எடு. கார்பன் டை ஆக்சைட்  அப்சார்ப்ஷன் (Absorption) உறிஞ்சுதல். ஒரு பொருள் இன்னொரு பொருளை தனக்குள் ஈர்த்துக்கொள்வது. எ.டு. கரிம எரிபொருட்களால் உருவாகும் நைட்ரஜன் டையாக்சைட், சூரிய ஒளியில் நீலநிற ஒளியை ஈர்ப்பது. ஆசிட் (Acid) பிஹெச்  அளவுகோலில் எண் 7க்கும் குறைவாக உள்ள பொருள். நீ

காற்றிலுள்ள மீத்தேனைப் பயன்படுத்தி புரத உணவுகள்!

படம்
  எழில் சுப்பையன், ஸ்ட்ரிங் பயோ மீத்தேன் மூலம் உணவு தயாரிக்கலாம்! 2013ஆம் ஆண்டு எழில் சுப்பையன், அவரது கணவர் வினோத் குமார்  ஆகியோர் இணைந்து ஸ்ட்ரிங் பயோ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். பெங்களூருவில் செயல்படும் இந்த நிறுவனம் மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தி, புரத உணவை உற்பத்தி செய்து வருகிறது. ஆசியாவிலேயே பதப்படுத்தும் முறையில் மீத்தேன் மூலம் புரதங்களை  உற்பத்தி செய்யும் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஸ்ட்ரிங் பயோ தான்.  ”எப்படி சர்க்கரையை ஈஸ்டாக மாற்றி மதுவை தயாரிக்கிறார்களோ அதை முறையைத் தான்  பின்பற்றுகிறோம். இதில் சற்றே மாறுபாடாக, நாங்கள் பயன்படுத்தும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் மீத்தேனை உண்டு அதனை புரதமாக மாற்றுகின்றன” என்றார் ஸ்ட்ரிங் பயோ துணை நிறுவனரான எழில் சுப்பையன். மீத்தேனை இயற்கை எரிவாயு, உணவுக்கழிவுகளிலிருந்து பெறுகின்றனர். மீத்தேனிலிருந்து உருவாக்கும் புரதத்தை, விலங்குகளுக்கான உணவாக மாற்றி விற்று வருகிறது ஸ்ட்ரிங் பயோ நிறுவனம்.  ”நாங்கள் குறைந்தளவு நீர், நிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விலங்குகளுக்கான உணவை உற்பத்தி செய்கிறோம். பிற தாவர, விலங்கு இறைச்சி வகைகளை விட பதப்படுத்தும் முறையில்

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் கார்பனை மரங்களால் உட்கிரகிக்க முடியாது!

படம்
  காடுகளால் உள்ளிழுக்கப்படும் கார்பன் அளவு! உலக நாடுகள் அனைத்துமே கார்பன் வெளியீட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. தொழில்துறை சார்ந்த கார்பன் வெளியீட்டைக் குறைப்பதோடு, மாசடைந்த காற்றிலிருந்து பசுமை இல்ல வாயுக்களை தனியாக பிரிப்பதும் முக்கியமானது. இதற்காக மரங்கள் உதவுகின்றன. ஒளிச்சேர்கை செயல்பாடு மூலமாக தாவரங்கள் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட்டை உள்ளிழுக்கின்றன. ஒளிச்சேர்க்கை செயல்பாடு வழியாக,கார்பன் எந்தளவு உள்ளிழுக்கப்படுகிறது, அதனால் கார்பன் அளவு கட்டுப்படுத்தப்படுகிறதா என்பது பற்றிய விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.  சூழலில் கார்பன் டை ஆக்சைட் நிரம்பியிருப்பது தாவரங்களுக்கு முக்கியம். அப்போதுதான், அதன் ஒளிச்சேர்க்கை நடைபெற முடியும். மனிதர்களின் செயல்பாட்டால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைட் அதிகரிப்பதும், அதனை தாவரங்கள் அதிகளவு உள்ளிழுக்கின்றன. இதற்கு, கார்பன் ஃபெர்டிலைசேஷன் (Carbon Fertilization)என்று பெயர்.  வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைட் அளவு அதிகரிப்பது, தாவரத்தின் வளர்ச்சி வேகத்தை பாதிக்கிறது. வளர்ச்சி காலம் அதிகரிப்பதால், வளிமண்டலத்தில் க