சூழல் சொற்களுக்கான அர்த்தம் அறிவோம்!

 








அருஞ்சொல்




Albedo

சூரியனின் கதிர்வீச்சு பொருளின் மீது அல்லது பரப்பின் மீது எந்தளவு படுகிறது என்பதைக் குறிக்கும் அளவு. வானியலில் அதிகம் பயன்படுகிறது. 

Alternative Energy

சூரியன், காற்று, நீர் ஆகிய இயற்கை வள ஆதாரங்களிலிருந்து பெறும் ஆற்றல்

Anthropogenic

மனிதர்களின் செயல்பாட்டால் இயற்கையில் ஏற்படும் மாறுதல் அல்லது பாதிப்பு. பொதுவாக, மனிதர்களால் உருவாகும் பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது. 

Atmosphere

பூமியின் வளிமண்டலம். காற்றிலுள்ள நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட் உள்ளிட்ட வாயுக்களைக் குறிப்பிடுகிறது. 

Atmospheric Lifetime

வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் ஆயுட்காலத்தைக் குறிக்கிறது. பசுமை இல்ல வாயுக்கள் ஒருமுறை வெளியானால், வளிமண்டலத்தில் பல்லாண்டுகள் இயக்கத்தில் இருக்கும். எடு. கார்பன் டை ஆக்சைட் 


அப்சார்ப்ஷன் (Absorption)

உறிஞ்சுதல். ஒரு பொருள் இன்னொரு பொருளை தனக்குள் ஈர்த்துக்கொள்வது. எ.டு. கரிம எரிபொருட்களால் உருவாகும் நைட்ரஜன் டையாக்சைட், சூரிய ஒளியில் நீலநிற ஒளியை ஈர்ப்பது.

ஆசிட் (Acid)

பிஹெச்  அளவுகோலில் எண் 7க்கும் குறைவாக உள்ள பொருள். நீர், மண்ணின் வளத்தை அழிக்கிறது.

ஆக்டிவேட்டட் கார்பன் (Activated carbon)

நீர், காற்று ஆகியவற்றை சுத்திகரிக்கப் பயன்படும் பொருள். எடு.நிலக்கரி, தேங்காய் ஓடு, மரம்


https://legacy.azdeq.gov/function/help/glossary.html

https://www.epa.gov/no2-pollution/basic-information-about-no2

https://19january2017snapshot.epa.gov/climatechange/glossary-climate-change-terms_.html

கருத்துகள்