புயல்களை துரத்திச் செல்வதன் பயன்?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹபூப் என்றால் என்ன? மணல், தூசி கலந்த புயல் என்று ஹபூப்பைக் குறிக்கலாம். இதன் வேர்ச்சொல் அரபி மொழியில் இருந்து வந்தது. ஆப்பிரிக்காவின் சகாரா, அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பாலைவனங்கள், ஆஸ்திரேலியா, ஆசியா ஆகியவற்றில் தீவிரமான புயல் வீசுவதைக் காணலாம். விண்ட் ஷியர் என்றால் என்ன? ஷியர் என்றால் காற்று மாறுபாடு என்று கொள்ளலாம். குறுகிய தொலைவில் காற்று வேகமாக சட்டென திசையில் மாறுபட்டு வீசும்.இடியுன் கூடிய மழையில் காற்று திடீரென திசை மாறி வீசுவதைக் காணலாம். அதேநேரம், விமானம் இச்சூழ்நிலையில் பயணிக்க நேர்ந்தால் ஆபத்து நேருவதற்கு வாய்ப்பு அதிகம். இப்படியான சூழலை முன்னரே உணர்ந்து விமானிகளை எச்சரிக்க, விமானநிலையங்களில் ஏற்பாடுகளை செய்து வைத்திருந்த காலமெல்லாம் உண்டு. மைக்ரோ கிளைமேட் என்றால் என்ன? பெரிய நிலப்பரப்பில் உள்ள சிறிய பகுதியில் மட்டும் தட்பவெப்பநிலை, வீசும் காற்று, கருமேகங்கள் சூழ்வது என சூழல் மாறுவதை மைக்ரோகிளைமேட் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். கடற்கரைப்பகுதியில் இப்படியான சூழல் மாற்றங்கள் ஏற்படுவது வாடிக்க...