இடுகைகள்

வீடியோசாட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணர்ச்சிகள் வழியாக ஒருவரை எளிதாக புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு! - பரபரக்கும் ஏஐ ஆராய்ச்சி உலகம்

படம்
  உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் செயற்கை நுண்ணறிவு ! செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி , மனிதர்களின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளும் அளவுக்கு முன்னேறி வருகிறது . செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் வளர்ச்சிபெற்று வருகிறது . பல்வேறு இணையத்தளங்களில் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுவதும் ஏ . ஐ நுட்பம்தான் . புகைப்படங்களை பயிற்சி செய்து விலங்குகளை எளிதில் அடையாளம் காண கற்பதோடு மனிதர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவுத்துறை பயணிக்கிறது . எப்படியிருக்கிறீர்கள் , சாப்பிட்டீர்களா ? என்ற வார்த்தைகளை இன்று பலரும் வீடியோ அழைப்புகளிலும் , குறுஞ்செய்திகளிலும்தான் கேட்டு வருகிறார்கள் . இந்த அழைப்புகள் நேருக்கு நேர் பேசுவது போல இருக்காது . இதில் ஒருவரின் உணர்வைப் புரிந்துகொண்டு பேசினால் எப்படியிருக்கும் ? எல் கலியோபி என்ற பெண்மணி , அஃபெக்டிவா என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கியுள்ளார் . வண்டி ஓட்டும்போது , மின்னஞ்சல் அனுப்பும்போது ஒருவரின் உணர்வுகளை எளிதாக அடையாளம் காணமுடியும் என இந்நிறுவனம் கூறுக