இடுகைகள்

இளையோர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதனை புரிந்த இளையோர் - கெயவோன் வுடார்ட் மாற்றுத்திறனாளிகளுக்கான திரை பிம்பம்

படம்
          சாதனை புரிந்த இளையோர் - கெயவோன் வுடார்ட் மாற்றுத்திறனாளிகளுக்கான திரை பிம்பம் இந்திய சினிமாக்களில் நன்றாக நடிக்க கூடிய, சினிமா குடும்ப செல்வாக்கு இல்லாதவர்களை ஓரம்கட்டும் போக்கு உள்ளது. இதை வெளிப்படையாக பெருமையாக இந்தி சினிமா ஆட்கள் செய்கிறார்கள். மற்றவர்கள் மறைவாக செய்கிறார்கள். சாதி, மதம், இனம் சார்ந்த வேறுபாடுகள் மாற்ற முடியாமல் இறுகிப்போன மனங்கள் அதிகாரத்தில் உள்ளன. எனவே, சூழல்கள் நாட்டுக்கே பேராபத்தை ஏற்படுத்தும்படி மாறியுள்ளளன. திரையில் மாற்றுத்திறனாளிகளை எப்படி காட்டுவது என நிறைய இயக்குநர்களுக்கு இன்னும் தெரியவில்லை. பெரும்பாலும் அவர்களை கேலிக்குரியவர்களாக மாற்றி நகைச்சுவை செய்கிறார்கள். பார்வையாளர்களுக்கு அவை நகைச்சுவையாக இருக்கிறதா என்று யோசிக்கத் தெரியவில்லை. தங்களது அறியாமையை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறார்கள். பொதுவாகவே மாற்றுத்திறனாளிகளை குறிப்பிட்ட பாத்திரத்தில் நடிக்க வைத்து வெற்றி பெற முடியுமா என்றால் அது இயக்குநரின் திறனைப் பொறுத்தது. அந்த வகையில், காது கேட்க முடியாத சிறார் நடிகரான கெய்வோன் உழைப்பும் போட்டு, அதற்கு காலமும் பயன் கொடுத்...

சாதனை புரிந்த இளையோர் - தீ விபத்து அலாரம் - சான்யா கில்

படம்
              சாதனை புரிந்த இளையோர் தீ விபத்து அலாரம் சான்யா கில் அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் பதிமூன்று வயதான சான்யா கில் வாழ்கிறார். இவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள உணவகம் ஸ்டவ்வை ஒழுங்காக அணைக்காமல் விட்டதால் தீப்பிடித்து எரிந்தது. அன்று தொடங்கி இன்றுவரை சான்யாவின் அம்மா, சமையல் அறையில் அடுப்பை அணைத்துவிட்டோமா என்ற இருமுறை சரிபார்க்கும் பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார். சான்யா, எங்கோ நடந்த விபத்து என நினைக்காமல் தீ பற்றும்போதே பயனருக்கு செய்தி, எச்சரிக்கை தெரிவிக்கும் கருவி ஒன்றை அல்காரிதம் எழுதி உருவாக்கியிருக்கிறார். தெர்மல் கேமரா, சிறிய கணினி ஆகியவை சான்யாவின் கருவியில் இணைந்துள்ளன. இவரது கருவி, இரண்டாயிரம் போட்டியாளர்களைக் கடந்து 25 ஆயிரம் டாலர்கள் கொண்ட அறிவியல் பரிசை வென்றிருக்கிறது. இந்த அறிவியல் போட்டிக்கு 65 ஆயிரம் பள்ளி மாணவர்கள் போட்டியிட்டால் அதில் பத்து சதவீதம்பேர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இப்போது அந்த அறிவியல் போட்டி எந்தளவு கடுமையாக இருக்கும் என புரிந்திருக்கும்தானே?  சொசைட்டி ஃபார் சயின்ஸ் என்ற தன்னார்வ அமைப்பு,...