இடுகைகள்

பணக்காரர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் அதிகரிக்கும் பெரும் பணக்காரர்கள்... தீவிர வறுமையில் அழுத்தப்படும் 95 சதவீத மக்கள்!

படம்
  பெர்னி சாண்டர்ஸ் பார்வையில் இந்தியா... இந்தியா, உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. மொத்தம் 1.46 பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு மொத்தம் 200 பெரும் பணக்காரர்கள்.இவர்கள், 2025ஆம் ஆண்டில் 941 பில்லியன் சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்கள்.  இந்தியாவில் 75 மில்லியன் மக்கள் தீவிரமான வறுமையில் வாடி வருகிறார்கள். இந்தியாவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ள கௌதம் அதானி, பிரதமருக்கு நெருக்கமானவர்.இவர் நிலக்கரி, அடிப்படை கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறார். பிரதமரின் நெருக்கமான நட்பை பயன்படுத்தி பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட அரசு ஒப்பந்தங்களைப் பெற்று வருகிறார். கூடுதலாக பெரும் வரி விலக்கு, தனது நிலக்கரி நிறுவனத்திற்கு விதிமுறைகளில் இருந்து விலக்கு, தொழிலாளர் சங்கங்களை அழுத்தி செயலிழக்கச் செய்வது, ஆதரவான நீதித்துறையினர் மூலம் விசாரணைகளை தாமதப்படுத்தி நிறுவனங்களை காப்பாற்றுதல் என நிறைய விஷயங்களை சாதித்து வருகிறார்.  பல கோடி மக்கள் அடிப்படையான சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்தான உணவு, வேலை கிடைக்காமல் வறுமையில் தடுமாறி வருகிறார்கள்.  இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுக...

பண்டோரா பேப்பர்ஸ்!- அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பை நடத்தும் பணக்காரர்கள்

படம்
  பண்டோரா பேப்பர்ஸ் - இந்தியன் எக்ஸ்பிரஸ் பண்டோரா பேப்பர்ஸ்  14 கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து 11.9 மில்லியன் கோப்புகள் வெளியாகியுள்ளன. இந்த கோப்புகள் வெளிநாடுகளில் தொடங்கப்பட்டுள்ள 29 ஆயிரம் போலி நிறுவனங்கள் பற்றியது. சிங்கப்பூர், நியூசிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர்களாக உள்ள நிறுவனங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.  வெளியாகியுள்ள கோப்புகள் பல்வேறு வெளிநாடுகள், அறக்கட்டளைகளில் உள்ள முதலீடுகள், பங்கு முதலீடுகள், வாங்கப்பட்டுள்ள நிலங்கள், ரொக்கம் ஆகியவற்றை விளக்குகின்றன. பண்டோரா பேப்பர் விவகாரத்தில் இந்தியாவின் பங்கு இருந்தால்தானே நமக்கு பெருமை? இதில் மொத்தம் 380 இந்தியர்கள் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.  இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், அறுபது நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் கோப்புகளை ஆராய்ந்து உறுதிபடுத்தியுள்ளது.  பல்வேறு அறக்கட்டளைகளைத் தொடங்கி அதன் மூலம் வரி ஏய்ப்பு செய்தவர்கள்தான் இந்த விவகாரத்தில் வெளியாகி இருக்கிறார்கள். இப்படி வரி  ஏய்ப்பு விவகாரம் வெளியாகும் போதெல்லாம் வரி குறைவாக உள்ள நாடுகளில் ஒருவர் நிறுவனம் தொடங்குவது கு...

அசத்தும் வள்ளல் பணக்காரர்கள்! - கல்வி, மருத்துவச்சேவைக்காக பணத்தை செலவிடும் பணக்கார தொழிலதிபர்கள்

படம்
                  வள்ளல் பணக்காரர்கள் ஹியூ டங் சூ ஜிஎஸ் கால்டெக்ஸ் - தென்கொரியா கடந்த ஆகஸ்ட் மாதம் ஹியூ ஜி என்ற இவரது நாற்பது வயது மகள் இறந்துபோனார் . அவரது நினைவாக பௌண்டேஷன் ஒன்றைத் தொடங்கி கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறார் . எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனர் ஹியூ டங் சூ , 1.9 மில்லியன் மதிப்பிலான பங்குகளை மகளின் பெயரில் அமைத்துள்ள பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இதற்கு முன்னர் 33 மில்லியன் மதிப்பிலான தொகையை டாங்ஹெங் நலப்பணி பௌண்டேஷனுக்கு வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் இவரது குடும்பத்தாரால் நி்ர்வகிக்கப்படுகிறது . இதன் தலைவர் ஹியூ டங் சூதான் . 1973 இல் கால்டெக்ஸ் நிறுவனத்தில் ஹியூ இணைந்தார் . இவரது குடும்ப நிறுவனமான ஜிஎஸ் குழுமத்தை கால்டெக்ஸ் நிறுவனம் கட்டுப்படுத்துகிறது . இவர் செஸ்ட் ஆப் கொரியா என்ற இனக்குழுவை நிர்வாகம் செய்துவருகிறார் . இந்த அமைப்பு நாட்டிலேயே பெரும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும் . ராபர்ட் என்ஜி , பிலிப் என்ஜி ராபர்ட் என்ஜி - சினோ குழுமம் பிலிப் என்ஜி - ஈஸ்ட் கார்ப்பரேஷன் இரு...

சாதனை படைக்கும் வள்ளல் பணக்காரர்கள் ! வியட்நாம், ஜப்பான், ஹாங்காங் நாட்டு வள்ளல்கள்

படம்
          உலகம் புகழும் வள்ளல் பணக்காரர்கள் ! பாம் நாட் உவாங் வின் குழுமம் வியட்நாம் பாம் , 2006 ஆம் ஆண்டு கைண்ட் ஹார்ட் பௌண்டேஷனை உருவாக்கினர் . இந்த நிறுவனத்திற்கென 77 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளார் . இதன் மூலம் சிகிச்சை தேவைப்படும் ஏழை எளியவர்களுக்கும் மாணவர்களின் உதவித்தொகைக்கும் நிதியை வழங்கியுள்ளார் . இந்த பௌண்டேஷன் வீடுகளைக் கட்டுவது , மருத்துவ மையங்களை அமைப்பது . நூலகங்களை உருவாக்குவது என வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கென பல்வேறு செயல்பாடுகளை பாம் செய்துள்ளார் . இயற்கை பேரிடர்களுக்கு உதவுவதோடு , வின் குழுமம் கோவிட் -19 நிவாரணப்பணிகளுக்கும் 55 மில்லியன் டாலர்கள் அளவில் பல்வேறு கருவிகளை வாங்கிக் கொடுத்துள்ளனர் . வின் குழுமத்தில் அதிக பங்குகளை வைத்துள்ள பாம் , வாகனங்கள் தயாரிப்பு , ரியல் எஸ்டேட் , தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை தயாரித்து விற்கிறார் . ததாசி யானாய் ஃபாஸ்ட் ரீடெய்லிங் ஜப்பான் இவரது நிறுவனம் யுனிக்யூ என்ற ஜவுளி பிராண்டை நடத்தி வருகிறது . இதில் கிடைக்கும் வருமானத்தில் 102 மில்லியன் டா...