இடுகைகள்

ஆல்பாகோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆஃப்லைனில் தூங்கும் செயற்கை நுண்ணறிவு!

படம்
               டெமிஸ் ஹஸாபிஸ் நிறுவனர், டீப்மைண்ட்   சாதாரண முறையில் கண்டறிய முடியாத என்னென்ன விஷயங்களை நாம் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறியலாம் ? ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் தனியாக யோசித்து அறிவியல் கோட்பாடுகளை இப்போது கண்டுபிடிப்பது கடினம் . அறிவியல் முறைகள் மிகவும் சிக்கலானவையாக மாறிவிட்டன . இன்று தனியாக ஒருவர் தொழில்நுட்ப உதவியின்றி புதிய விஷயங்களை அதில் கண்டுபிடிப்பது கடினம் . இப்போது உயிரியல் துறையில் இயற்பியல் நுட்பங்களை பயன்படுத்துவது கடினம் . ஆனால் அதனை கணினி அறிவியலும் , செயற்கை நுண்ணறிவும் செய்கிறது . நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் . செயற்கை நுண்ணறிவை நீங்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு உதவியாளராக பயன்படுத்தமுடியும் . இதன்மூலம் , ஆராய்ச்சி செய்பவர்களுக்கு வேலைச்சுமை குறைகிறது . அவர்கள் புதுமைத்திறன் கொண்டதாக வேறு விஷயங்களை யோசிக்கலாம் . ஆல்பாபோல்ட் போன்ற செயற்கை நுண்ணறிவு குறிப்பிட்ட ஒரு வேலையை மட்டுமே சரியாக செய்யலாம் . அனைத்து வேலைகளையும் சரியாக செய்யமுடியாது என்று கூறுகிறார்களே ? பொதுவான பல்வேறு பணிகளைச் செய்ய நாம் இன்னும் யோசித்து செயற்கை ந