இடுகைகள்

செயலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொஞ்சம் வெளிப்படையாக பேசுவோமா? - கிளப்ஹவுஸ் ஆப் வெற்றி பெறும் ரகசியம்

படம்
          கொஞ்சம் வெளிப்படையாக பேசுவோமா ? மிர்ச்சி சிவசங்கரி அன்போடு அழைக்கும் லேட் நைட்ஷோவின் தலைப்புதான் இது . கிளப் ஹவுஸ் ஆப்பின் புகழுக்கும் இதேதான் காரணம் . இந்த ஆப்பின் விசேஷம் இதனை ஆப்பிள் போன் வைத்திருப்பவர்கள்தான் பயன்படுத்த முடியும் . யாராக இருந்தாலும் உடனே பேஸ்புக் போல உள்ளே நுழைந்து விட முடியாது . அங்குள்ளவர்கள் யாராவது உங்களை அழைப்பிதழ் கொடுத்து அழைக்க வேண்டும் . டிஜிட்டல் அழைப்பிதழ்தான் . அப்படி அழைத்து உள்ளே வருபவர்கள் மாடரேட்டர் என்பவர்களால் கட்டுப்படுத்தப்படுவார்கள் . அங்கு ஜாலியாக அ முதல் ஃ வரை என்ன வேண்டுமானாலும் பேசலாம் . உடனே உற்சாகமாகும் உள்ளங்கள் கவனிக்க . இங்கு உறுப்பினராகுபவர்கள் அனைவரும் தங்கள் உண்மையான பெயரையே பயன்படுத்த வேண்டும் .    கிளப் ஹவுஸ் ஆப் இந்த ஆப்பின் வசதிக்கு முக்கிய காரணம் , இதில் நீங்கள் தகவல்களை ஆடியோ வடிவில் பகிர்ந்துகொள்ளலாம் . இதன் காரணமாக , அரசியலோ , ஆன்மீகமோ , ஆண்மைக்குறைவோ எதுவாக இருந்தாலும் கேட்பவர்களுக்கு நெருக்கமாக தோன்றும் இதனால் இந்த ஆப்பில் இணைவதற்காகவே பல இந்தியர்கள் ஐபோன்களை வாங்க முயல்கின்றனர் . வெளிப்பட

சுயமுன்னேற்றத்திற்கு உதவும் செயலிகள்!

படம்
 சுயமுன்னேற்றத்திற்கு உதவும்  செயலிகள்  நவீன கால இளைஞர்கள் தங்களின் சுயமுன்னேற்றம் மற்றும் திறன் வளர்ப்புக்கு பல்வேறு ஸ்மார்ட்போன் செயலிகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.  நவீன காலத்தில் சுயமுன்னேற்றம் மற்றும் திறன் வளர்க்கும் பயிற்சிகளுக்கு நூல்களை மட்டும் யாரும் நம்பியிருக்கவில்லை. பல்வேறு ஸ்மார்ட் போன் ஆப்ஸ்கள் மற்றும் கைகளில் அணிந்துகொள்ளும் சாதனங்கள் என புதுமையாக உள்ளன.  மொழி கற்றுக்கொள்ள, தினசரி குறிப்பிட்ட தூரம் நடந்துசெல்வதை நினைவுபடுத்த, சந்திப்புகளை ஒழுங்கமைக்க, வாசிக்கும் நூல்களை கணக்கிட என அனைத்திற்கும் தொழில்நுட்பம் கைவசம் தீர்வுகளை வைத்துள்ளது.  பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் மானஸ் சலோய், ஆப்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் பொருட்கள் மூலமாக தன் வாழ்க்கையை வாழ்கிறார். நூல்களைப் படிக்கவும், எழுதவும், தன் வைட்டமின் மாத்திரைகளை சாப்பிடவும் ஹேபிட் ட்ராக்கர் (Habit tracker) என்ற ஆப்பைப் பயன்படுத்துகிறார். ஹெட்ஸ்பேஸ் (Headspace) ஆப்பை தியானம் செய்யவும், மி ஸ்மார்ட் பேண்டை (Mi Smart band) உடற்பயிற்சிக்காகவும் மானஸ் பயன்படுத்துகிறார்.  ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயக்கமுறைக