இடுகைகள்

நோபடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அம்மாஞ்சி எப்படி ஆக்ரோஷ அசுரன் ஆகிறார்! - நோபடி

படம்
  நோபடி  Director:   Ilya Naishuller போலீஸ் ஸ்டேஷனின் விசாரணை அறையில் படம் தொடங்குகிறது. முகம் முழுக்க காயம்பட்டவர் மெல்ல கைவிலங்கு இறுகத்தில் உள்பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைக்கிறார். பிறகு, சட்டையின் உள்ளேயிருந்து பூனை ஒன்றை எடுத்து, அதற்கான உணவை சாப்பிடக் கொடுக்கிறார். அப்போதுதான் அவரையே கவனித்துக்கொண்டிருக்கும் டிடெக்டிவ்களை பார்க்கிறார். உன்னோட பெயர் என்ன என்று கேட்க நோபடி என்று சொல்லுகிறார். கதை தொடங்குகிறது.  ஜான் விக் கதை என்னவோ அதேதான். அமைதியாக குடும்பத்தோடு வாழ்பவனை திடீரென ஒரு சம்பவம் உசுப்ப சூறாவளியாக சுழன்று வேட்டையாடுகிறான். கதையில் முக்கியமான விஷயம் சண்டைதான். விதவிதமான நுணுக்கங்கள், ஆயுதங்கள், தந்திரங்கள், கொட்டும் ரத்தம், சிதறும் கண்ணாடி, கார் துரத்தல்கள் என படம் பரபர வேகம்.  ஹட்ச் மான்செல் தனது மாமனாரின் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கும் மனைவிக்கும் கூட நல்ல உறவு இல்லை. அவர்கள் பெரும்பாலும் பேசுவதே இல்லை. இந்த நிலையில் அவரது வீட்டில் திருட்டு ஒன்று நடக்கிறது. குண்டே இல்லாத துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஆண், பெண் இருவர் திருட வருகிறார்கள். அவர்களை