இடுகைகள்

தான் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தான், பிறர் என்பதை எப்படி புரிந்துகொள்கிறோம்?

படம்
  உளவியல் பகுப்பாய்வில் தன்னுணர்வற்ற மனம் என்பதில் நினைவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். அதை தன்னுணர்வு மனம் எளிதாக பெறமுடியாது என அறிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், தன்னுணர்வற்ற மனதில் உள்ள நினைவுகள், சிலமுறை வெ்வேறு வழிகளில் தன்னுணர்வு மனத்திடம் தொடர்புகொள்கிறது. இதை கார்ல் ஜங், தனது ஆய்வில் விவரிக்கிறார். கனவுகள், அடையாளங்கள், பல்வேறு வித குணங்கள், பேசும்போது கூறும் பொருத்தமற்ற வார்த்தைகள் ஆகியவற்றை தொடர்புகொள்ளும் வழிமுறைகளாக கூறுகிறார்.  உளவியலில் தான் பிறர் என்பது முக்கியம். ஒரு பெரிய கூட்டத்தில் மனிதர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தனித்தனியானவர்கள்தான். காரணம், அவர்களின் சுயம் வேறுபட்டது. பிறர் என்பது தன்னைக் கடந்த விஷயங்கள், உலகைக் குறிக்கிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிறந்த நொடியில் இருந்து உலகைப் புரிந்துகொள்ள முயல்கிறது. நாம் சில விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோம். எழுதுகிறோம். ஆனால் அதை பிறருக்கு கூறவேண்டுமெனில் இருவருக்கும் பொதுவான ஊடகம் தேவைப்படுகிறது. அதாவது மொழி. மொழி கைவிட்டால் புகைப்படங்கள் சைகைகளை நாடலாம்.  ஜாக்குயிஸ் லாகன் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் பிறந்தவர்.

தன்னைப் பற்றி உணர உதவும் உளவியல் சிகிச்சை முறை

படம்
  கெஸ்சால்ட் தெரபி என்பது நிகழ்காலத்தில் உள்ளவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டது. ஒருவர் தனது உணர்ச்சிகளை கையில் கையாளத் தெரிந்துகொண்டாலே எளிதாக பிரச்னைகளிலிருந்து வெளியே வரமுடியும். தனது மனதில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுகின்றன என்பதே இதில் உணரவேண்டியது. இப்படி உணர்ந்துகொண்டால் ஒருவரால் கவனமாக தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். தன்னைப் புரிந்துகொள்ளலாம்.  உணர்ச்சிகளின் மீதான கவனத்தை ஒருவர் கொண்டிருப்பது, கூறுவதைப்போல எளிதானது அல்ல. கடினமானது. இதை நிகழில் வாழ்தல் என்று கூறுவார்கள். இதை ஒருவர் மெல்ல பழகினால் எளிதாக தனது சூழல், அதில் அவரது அனுபவம் என இரண்டையும் மெல்ல மாற்றிக்கொள்ள முடியும். கெஸ்சால்ட் தெரபியில் என்னால் முடியாது என்று கூறுவதை நான் அதை செய்ய விரும்பவில்லை என மாற்றிச்சொல்ல வைக்கிறார்கள். செயல்பட வைக்கிறார்கள். முதலில் பேசவேண்டும். பிறகு அதுவே செயலாகிறது. அதாவது, நான் என்ற தன்மை மாறுதல் அடைகிறது. விஷயங்களை வாய்ப்பாக பார்க்கும் குணம் கூடுகிறது. குறிப்பிட்ட சூழல் காரணமாக அல்லது அதை காரணம் காட்டி தன்னை பாதிக்கப்பட்டவர்கள