இடுகைகள்

க்வால்காம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காப்புரிமைப் போர்!

படம்
    நிறுவனத்தை முதன்முதலில் ஸ்டார்ட்அப்பாக தொடங்குபவர், அதற்கான கொள்கை, லட்சியத்தை உடலின் ஒவ்வொரு அணுக்களிலும் சுமப்பார். மற்றவர்கள் இதை அப்படியே பின்பற்றுவார்கள். அந்த வகையில் ஹூவாவெய் நிறுவனத்தில் புகழ்ச்சிக்கு எந்த மரியாதையுமில்லை. உழைத்தே ஆகவேண்டும். தங்களை நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு உண்டு. நிறுவனத்தின் பங்குகளும் கூடுதலாக வழங்கப்படும்.   நிறுவனம் எதற்கு தொடங்கப்படுகிறது? அதன் லட்சியம் என்ன? நினைத்த லட்சியத்தை சாத்தியப்படுத்துமா என்பதற்கான பதில்களே தேடிக் கண்டுபிடிப்பது முக்கியம். அப்படி இல்லாதபோது நிறுவனம் விரைவில் டைட்டானிக்காக தொழில்துறையில் சவால்களை சந்திக்க முடியாமல் மூழ்கிவிடும். இந்த வகையில் ஹூவாவெய் தனது இலக்குகளை அறிந்தேயுள்ளது என்றார் ரென். அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தொலைத்தொடர்பு வசதிகள் கிடைக்கவேண்டும் என்பதுதான் ஹூவாவெய்யின் லட்சியம்.   அமெரிக்க அரசின் குற்றச்சாட்டு காரணமாக குவால்காம், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் மென்பொருள், வன்பொருள் சேவைகளை ஹூவாவெய்யிடமிருந்து விலக்கிக்கொண்டனர். இதனால் உங்களுக்கு நஷ்டம்தானே என சிஎன்பிசி சேனல் பேட்டியில்