இடுகைகள்

ரோஸ் ஐலேண்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பொறியாளரின் சுதந்திர வேட்கையை உடைத்து நொறுக்கும் மத, அரசியல் அமைப்புகளின் கோர முகம்! ரோஸ் ஐலேண்ட் 2020

படம்
                ரோஸ் ஐலேண்ட் சுதந்திரமாக வாழ நினைக்கும் பொறியாளரின் கனவை அரசியலும் மதமும் இணைந்து எப்படி அழிக்கின்றன என்பதுதான் கதை.  இத்தாலியில் வாழும் பொறியாளர் ஜார்ஜியா ரோஸ். இவருக்கு தனித்துவமாக வேலைகளை செய்வது பிடிக்கும். எனவே, பிற பிராண்டு வண்டிகளை வாங்கி நம்பர் பிளேட் வைத்து ஓட்டாமல் தானே மோட்டார் காரை வடிவமைத்து அதனை ஓட்டிச்செல்கிறார். இவரது கனவு பெரியது. ஆனால் அதனை உலகம் புரிந்துகொள்வதில்லை. ஏன்  வழக்குரைஞராக இருக்கும் அவரது காதலி கூட புரிந்துகொள்வதில்லை. ஆனால் அவர் அதற்காகவெல்லாம் கவலைப்படவில்லை. அப்படியா ஃபைன் என கடந்துபோய்விடுகிறார். தான் சுதந்திரமாக இருப்பதோடு பிறரும் அப்படி வாழும்படி ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என முடிவு செய்கிறார். இதற்கு காதலி  கோபத்தில் திட்டும் ஒரு வாக்கியம்தான் காரணமாக உள்ளது. நீ வேறு உலகத்தில் வாழ்கிறாய். நானும் நீயும் ஒன்றாக வாழ முடியாது. நீ ஏதாவது சாதிக்கணும்னா அதை உன்னுடைய உலகில் உருவாக்கிக்கொள் என திட்டிவிட்டு சென்று செல்கிறாள் கேப்ரியெல்லா. அந்த வாக்கியம் ரோஸை அதிகம் யோசிக்க வைக்கிறது. எனவே, உடனே தனது தொழிலதிபர் நண்பனைத் தொடர்புகொள்கிறான். அதி