இடுகைகள்

நியாண்டர்தால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நியாண்டர்தால் மனிதர்களிடமிருந்து நவீன மனிதர்கள் பெற்ற பழக்கவழக்கங்கள்!

படம்
        நாம் தினசரி செய்யும் செயல்பாடுகளை கவனித்துப் பார்த்திருக்கிறீர்களா ? அதில் ஒரு தொடர்புத்தன்மை உண்டு . காலையில் எழுவது பல் துலக்காமல் டீ குடிப்பது , பதற்றத்தில் நகம் கடிப்பது , யோசிக்கும்போது ஆட்காட்டி விரலுக்கு அடுத்த நீ்ண்ட விரலை மேசையில் தட்டுவது , தோளை அடிக்கடி குலுக்குவது , கண்களை விரித்து பார்ப்பது , அணிந்துள்ள பிரெஸ்லெட்டை ஜெபமாலை ஆக்குவது இப்படி பலரது மேனரிசங்கள் நெடுங்கால பழக்கத்தில் உருவானவைதான் . இவை ஒருநாளில் உருவாகிவிடவில்லை எனவே மூளையிலிருந்து இதனை நீக்குவதும் கடினம் . நியாண்டர்தால் மனிதர்கள் என்பதை பல்வேறு அகழாய்வு செ்ய்திகளில் படித்திருப்பீர்கள் . இதற்கு நியாண்டர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த மனிதர்கள் என்று பொருள் . இந்தப்பகுதி ஜெர்மனியின் மேற்குப்பகுதியில் உள்ளது . நவீன மனிதர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தவர்கள்தான் நியாண்டர்தால் மனிதர்கள் . இவர்கள் ஐரோப்பாவில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது . இவர்களின் மரபணுக்களில் இருந்துதான் நமது டிஎன்ஏ மாறுதல் ஏற்பட்டு தோலின் நிறம் , முடியின் நிறம் , உறக்கம் , மனநிலை , புகைபி