இடுகைகள்

கிருபா ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்று காலத்தில் உருவான எழுத்தாளர்கள்- கிருபா ஜி, ஜோதி பாண்டே லவாகரே

படம்
  கிருபா ஜி, எழுத்தாளர் சென்னை பெருந்தொற்று காலம் நிறையப் பேருக்கு உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு சிக்கல்களை அளித்துள்ளது. சிலர் அதில் சிக்கி பாதிக்கப்பட்டாலும் இன்னும் சிலர் எழுத்து, ஓவியம், படைப்பு, பல்வேறு ஆன்லைன் படிப்பு என மீண்டு வந்துள்ளனர். முன்பை விட இன்னும் சிறப்பான மனிதர்களாக தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.  இந்த பெருந்தொற்று காலத்தில் நிறைய புதிய எழுத்தாளர்கள் வந்துள்ளனர். இதற்கு பின்ஞ், பிரதிலிபி என நிறைய வலைத்தளங்கள் காரணம் என்றாலும் கூட சொந்த முயற்சியும் தளராத உழைப்பும் பின்னணியில் உள்ளதையும் மறுக்க முடியாது. தன்னறம் நூல்வெளியின் காணொலியில் எழுத்தாளர் தேவிபாரதி, புதிய இளம் எழுத்தாளர்களுக்கு தொடர்ச்சியாக எழுதுங்கள். அதன் வழியாக நீங்கள் என்ன கண்டடைய வேண்டுமோ அதனைக் கண்டுபிடிப்பீர்கள் என சொன்னார். பயணம் என்று கிளம்பிவிட்டால் இறுதியாக அனைவரும் வந்தடையும் இடம் ஒன்றுதான். தன்னைத்தானே அறிதல்தானே? அப்படிப்பட்ட சிலரைப் பற்றி பார்ப்போம்.  கிருபா ஜி  வாட் வீ நோ அபவுட் ஹெர் - வெஸ்ட்லேண்ட் புக்ஸ்  சென்னையைச் சேர்ந்த 35 வயதாகும் எழுத்தாளர் இவர். நாவலை எழுத வேண்டும் என்று தோன்றியதும் தனத