பெருந்தொற்று காலத்தில் உருவான எழுத்தாளர்கள்- கிருபா ஜி, ஜோதி பாண்டே லவாகரே

 





கிருபா ஜி, எழுத்தாளர் சென்னை




பெருந்தொற்று காலம் நிறையப் பேருக்கு உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு சிக்கல்களை அளித்துள்ளது. சிலர் அதில் சிக்கி பாதிக்கப்பட்டாலும் இன்னும் சிலர் எழுத்து, ஓவியம், படைப்பு, பல்வேறு ஆன்லைன் படிப்பு என மீண்டு வந்துள்ளனர். முன்பை விட இன்னும் சிறப்பான மனிதர்களாக தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர். 





இந்த பெருந்தொற்று காலத்தில் நிறைய புதிய எழுத்தாளர்கள் வந்துள்ளனர். இதற்கு பின்ஞ், பிரதிலிபி என நிறைய வலைத்தளங்கள் காரணம் என்றாலும் கூட சொந்த முயற்சியும் தளராத உழைப்பும் பின்னணியில் உள்ளதையும் மறுக்க முடியாது. தன்னறம் நூல்வெளியின் காணொலியில் எழுத்தாளர் தேவிபாரதி, புதிய இளம் எழுத்தாளர்களுக்கு தொடர்ச்சியாக எழுதுங்கள். அதன் வழியாக நீங்கள் என்ன கண்டடைய வேண்டுமோ அதனைக் கண்டுபிடிப்பீர்கள் என சொன்னார். பயணம் என்று கிளம்பிவிட்டால் இறுதியாக அனைவரும் வந்தடையும் இடம் ஒன்றுதான். தன்னைத்தானே அறிதல்தானே? அப்படிப்பட்ட சிலரைப் பற்றி பார்ப்போம். 

கிருபா ஜி 


வாட் வீ நோ அபவுட் ஹெர் - வெஸ்ட்லேண்ட் புக்ஸ் 

சென்னையைச் சேர்ந்த 35 வயதாகும் எழுத்தாளர் இவர். நாவலை எழுத வேண்டும் என்று தோன்றியதும் தனது அம்மா, பாட்டி ஆகியோரின் வாழ்க்கை கண் முன்னே வந்திருக்கிறது. பாட்டிக்கு சிறுவயதில் திருமணம் ஆகியிருக்கிறது. அதாவது குழந்தை திருமணம். அந்தக் காலத்தில் அவர் சந்தித்த சவால்கள், பெண்களுக்கான பிரச்னைகள் ஆகியவற்றைப் பற்றி நாவலாக எழுதியிருக்கிறார். 

ஒன்பது ஆண்டுகள் தனது குடும்ப வரலாற்றை ஆய்வு செய்து நாவலை எழுதியிருக்கிறார் கிருபா. கட்டுரையை எழுதுவதை விட நாவல் எழுதுவது கடினமானது. அதுவும் பெருந்தொற்று காலம் மனதிற்கு பெரும் சோர்வை தந்ததாக கூறினார். ஜேசிபி இலக்கியப் பரிசில் பட்டியலிலும் கிருபாவின் நாவல் இடம்பெற்று அவரைப் பெருமைப்படுத்தியது. 




ஜோதி பாண்டே லவாகரே


ப்ரீத்திங் ஹியர் இஸ் இன்ஜூரியஸ் டு ஹெல்த் - தி ஹியூமன் காஸ்ட் ஆஃப் ஏர் பொல்யூஷன் அண்ட் ஹவ் யூ கேன் பி தி சேலஞ்

ஜோதி பாண்டே லவாகரே





நூலின் தலைப்பை இவ்வளவு பெரிதாக எழுதினாலே புரிந்துகொள்ளலாம். ஜோதி எந்தளவு முக்கியமான விஷயத்தை பேச முயற்சிக்கிறார் என்பதை. 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவிலிருந்து டெல்லிக்கு திரும்பியிருக்கிறார். இங்குள்ள காற்று மாசுபாட்டைப் பார்த்து பதறிவிட்டார் . எனவே, காற்று மாசுபாட்டைக் குறைக்கவே கேர் ஃபார் ஏர் என்ற அமைப்பைத் தொடங்கினார். 

2018ஆம் ஆண்டு தனது அம்மா மறைந்தபிறகு இந்த நூலை எழுத தொடங்கி பெருந்தொற்று சமயம் முடித்திருக்கிறார். இவரது கட்டுரை நூல் டாடா இலக்கியப் பரிசு பட்டியலில் இடம்பிடித்து பெருமை சேர்த்துள்ளது. 



 


கருத்துகள்