பார்வையற்றவர்களுக்கு கௌரவமான வாழ்க்கைதான் முக்கியம்! - முன்னாள் பார்வையற்றோர் கிரிக்கெட் வீரர் மகன்டேஷ்

 








பார்வை இல்லாம் கிரிக்கெட் விளையாடும் ஆசை இருந்தால் என்ன செய்வது? 

கர்நாடகத்தின் பெல்காமில் கிராமத்தில் பிறந்த மகன்டேஷ் ஜி கிவாடாசன்னாவர், நன்றாகத்தான் இருந்தார். ஆனால் பிறந்து ஆறு மாதம் ஆனபோது, டைபாய்டு காய்ச்சல் வந்தது. அப்போது கண்பார்வை போய்விட்டது. அதற்கும் மேல் கிராமத்தில் இருந்தால் மருத்துவ வசதி போதாது. கல்வியும் வேறு பயிற்சிகளும் வழங்க முடியாது என மகன்டேஷை பெங்களூரு நகருக்கு அழைத்து வந்தனர் அவரது பெற்றோர். 

உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கௌன்சிலின் தலைவராக 2011ஆம் ஆண்டு மகன்டேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்தியாவில் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தை துணை நிறுவனராக இருந்து தொடங்கினார். மாற்றுத் திறனாளிகளை புறக்கணிக்காமல் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை பெற்றுத்தருவதை தனது லட்சியமாக கொண்டிருக்கிறார் மகன்டேஷ். 

2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, இந்தியாவில் 70 மில்லியன் பேர் இப்படி மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய புறக்கணிப்புகள் நடக்கின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பதே மகன்டேஷின் முக்கியமான பணி. 

பள்ளியில் படிக்கும்போது தன்னை எப்படி பார்த்துக்கொள்வது என்பதை கற்றுக்கொண்டார். 1997இல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவென சமார்த்தனம் எனும் தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இதனை தனது நண்பர் எல் நாகேஷின் உதவியுடன் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் திட்டம்தான் கிரானா. இதன்படி கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை மேற்படிப்பு படிக்க வைக்க உதவுகிறார்கள். இப்படி எம்பிஏ, சிஏ படிப்பு படித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். சமார்த்தனம் அமைப்பின் முக்கியமான நோக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு கௌரவமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதுதான். 

தற்போது ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் மகன்டேஷ். மேலும் 2030க்குள் பத்து லட்சம் மாற்றுத்திறனாளிகளை வரி கட்டும் விதமாக நல்ல வேலைக்கு தயார் செய்யவேண்டும். அதை நோக்கித்தான் உழைத்துக்கொண்டிருக்கிறோம் என்றார் மகன்டேஷ். இத்தனை விஷயங்களை செய்திருக்கிறார், இதைச் செய்யமாட்டாரா என்ன?

readers digest

somak ghosal

https://www.samarthanam.org/donate/?placement=&adposition=&category=&device=c&devicemodel=&creative=525256322762&adid={adid}&target=&keyword=samarthanam%20trust&matchtype=b&gclid=Cj0KCQiAxc6PBhCEARIsAH8Hff0pR3jJsnFe44YMXquzOs_6XXlCPAs0QbXtQNL8BBvBbMEyXJ4gvxgaArXPEALw_wcB




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்