விவசாய கருவிகளை புதுமையாக வடிவமைத்த டெக் விவசாயி! - செல்வராஜ்

 













கண்டுபிடிப்புகள் என்பது அந்நியச் சொல் அல்ல!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, எம் செல்வராஜ். இரண்டே முக்கால் நிலத்தை வைத்து விவசாயம் செய்கிறார். விவசாயம் செய்வதோடு, அதனை எளிமையாக செய்வதற்கான பல்வேறு கருவிகளை, சாதனங்களை கண்டுபிடித்து வருகிறார். 58 வயதான செல்வராஜ் அதனால்தான் இப்பகுதியில் சாதனையாளராக பார்க்கப்பட்டு வருகிறார்.

மாவட்டத்தின் தலைநகரிலிருந்து 110 கி.மீ. தூரத்தில் உள்ளது சேசுராஜபுரம். இங்குதான், இவரது விவசாய நிலம் உள்ளது. தனது நிலத்தில் நிலக்கடலை, தக்காளி, சிறு தானியங்களை விளைவித்து வருகிறார். 

இளைஞராக இருக்கும்போதிலிருந்து விவசாய பணிகளை செய்துவருகிறார். அப்போதிலிருந்து பல்வேறு சோதனை முயற்சிகளை நிலத்தில் செய்து பார்த்து வந்தார். சோதனை மற்றும் தவறுகள் என ஏற்க பழகியவர், வீட்டிலுள்ள பல்வேறு இரும்பு பொருட்களை வைத்து விவசாய பொருட்களை செய்யத் தொடங்கினார். இப்படித்தான் சைக்கிள் டயர்கள், மரத்துண்டுகள், கத்திகள் ஆகியவற்றை வைத்து 500 ரூபாயில் கருவி ஒன்றை உருவாக்கினார். விதைப்பது, களை பறிப்பது ஆகியவற்றை இப்படி கருவிகளை வைத்தே செய்கிறார். 




விதைகளை விதைப்பதற்கு முன்னர் மட்டும் ரோட்டாவேட்டரைப் பயன்படுத்துகிறார். பிறகு அனைத்தும் செல்வராஜ் தான் தயாரித்த கருவிகளை மட்டுமே பயன்படுத்தி செலவுகளை வெகுவாக குறைத்துக்கொள்கிறார். ஒரு சீசனுக்கு தொழிலாளர்களுக்கு மட்டுமே 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்றால் அந்த செலவை பெரும்பாலும் தனது கருவிகளைக் கொண்டே செய்கிறார். இதனால் நிறைய செலவுகளை மட்டுப்படுத்துகிறார். இவரோடு, குடும்ப உறுப்பினர்களும் வேலைகளை பகிர்ந்து செய்கிறார்கள். 

இதில் முக்கியமானது சாதனங்களின் பயன்பாடு அல்ல. குறிப்பாக, விவசாய வேலைகளுக்கு இன்னொருவரை சார்ந்து இருக்க வேண்டியதில்லை என்பதுதான். அருகிலுள்ள ஊர்களுக்கும் சென்று விவசாயிகளுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கி வருகிறார் செல்வராஜ். பல விவசாயிகளும் செல்வராஜின் உதவியுடன் பல்வேறு விவசாய கருவிகளை உருவாக்கி வேலை செய்து வருகிறார்கள். இக்கருவியை பயன்படுத்துவதால், நான்கு பேர் வேலை செய்யும் இடத்தில் ஒருவர் வேலை செய்தால் போதும் என்ற நிலை உள்ளது. 

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

சிவகுரு - கிருஷ்ணகிரி

pinterest

 





கருத்துகள்