குடல் புற்றுநோயை வென்ற பிறகு ஐஏஎஸ் அதிகாரி ஆடிய இரண்டாம் சுற்று! - இரண்டாம் சுற்று - ஆர். பாலகிருஷ்ணன்

 









இரண்டாம் சுற்று -ஆர்.பாலகிருஷ்ணன்





இரண்டாம் சுற்று
ஆர். பாலகிருஷ்ணன்
எஸ்ஆர்வி பதிப்பகம்

இந்த நூலை எஸ்ஆர்வி பள்ளியின் பதிப்பகம் பதிப்பித்துள்ளது. இதன் பெயர் இரண்டாம் சுற்று என்பதற்கு முக்கியமான காரணம் உள்ளது. எழுத்தாளர், குடலில் புற்றுநோய் வந்து குணமான பிறகு நூலை எழுதியிருக்கிறார். 


ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்





சிறகுக்குள் வானம் போலவே இந்த நூலும் முக்கியமானது. மாணவர்களுக்கான நூல்தான். ஆனால் இம்முறை பணி சார்ந்த பல்வேறு ஆழமான அனுபவங்களை வாசகர்கள் படிக்க முடியும். நூலின் வடிவம் கட்டுரை, கவிதை என்று அமைந்துள்ளது. 

இதில் ஒடிசா மாநிலத்திற்கு தேர்வாகி செல்வது, அங்கு தொலைதூர கிராமத்திற்கு செல்வதும், வளர்ச்சிப்பணிகளைப் பற்றிச்சொல்வது சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நவடா என்ற கிராமத்திற்கு அரசு அதிகாரிகளே செல்லாதபோது, வளர்ச்சிப் பணிக்காக ஆர். பி அங்கு செல்கிறார். இதன் விளைவாக அந்த கிராமத்தினருக்கு கவனம் கிடைக்கிறது. பிந்தைய ஆண்டுகளில் வளர்ச்சிப் பணி காரணமாக மீண்டும், கிராமத்தின் பெயரை உச்சரிக்கிறார்கள். அந்த கிராமத்தினருக்கும் அரசின் திட்டங்கள் மெல்ல சென்று சேருகின்றன. 

சாலைத்திட்டங்கள், குடிநீர் வசதிகளை அமைத்து கொடுக்கிறார்கள். முதலில் அங்கு காரிலும், நடந்தும் சென்ற அரசு அதிகாரிகள் வாகன வசதி மூலம் அங்கு எளிதாக செல்ல முடியும். இந்தளவு வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க தான் எப்படி மெனக்கெட்டேன் என்பதோடு தனது குழுவினரின் உழைப்பையும் பதிவு செய்கிறார். 

கூடுதலாக, அரசியல் ஈடுபாடு எப்படி கல்லூரி வாழ்க்கையை பாதித்து அவரை கல்வியை பாதிக்கிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இந்த வகையில் மாறுபட்ட அரசியல் கொள்கையுள்ளவர்கள் ஆசிரியர்களாக இருந்தால் மாணவர்களை எப்படி ஒடுக்குகிறார்கள், மன சள்ளைகளை உருவாக்குகிறார்கள் என்பதை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். பின்னாளில் அவர் அதே ஆசிரியரோடு கோபமின்றி பேசினார் என்றாலும் அவர் தனது கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவரை இந்தளவு அவமானப்படுத்த வேண்டுமா என்று தோன்றுகிறது. வாசிக்கும் யாருக்குமே இப்பகுதி கொஞ்சம் சங்கடமாகவே இருக்கும். ஆர். பாலகிருஷ்ணன் அதனை தனது மனவலிமையால் கடந்திருக்கிறார். 

ஒடிசாவில் உள்ள பூஜ்ஜிய வளர்ச்சி மாவட்டம் என்று தேசிய இதழ்களில் கட்டுரை எழுதப்படுகிறது. அதைப் பார்த்து உடனே நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த மாவட்டத்தை முன்னேற்ற நடவடிக்கையை ஆர். பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு செய்கிறது. இதுபற்றிய செயல்பாடுகளை படிக்கவே சிறப்பாக இருக்கிறது. 

இதோடு தமிழ் ஆராய்ச்சி பற்றிய எண்ணங்கள், அமெரிக்காவைச் சேர்ந்த நார்மன் என்பவரை சந்தித்து உரையாடியது ஆகிய நிகழ்ச்சிகள் நூலில் முக்கியமானவை. 

நூலை வாசித்து முடித்ததும் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி இந்தளவு மாற்றங்களை உருவாக்க முடியுமா என்ற ஆச்சரியம் மேலிடுகிறது. இத்தனைக்கும் மேல் மதக்கலவரத்திற்கு எதிராக துணிச்சலாக நின்ற பாலகிருஷ்ணன் அவர்களின் நெஞ்சுரம் மகத்தானது. 


கோமாளிமேடை டீம் 

நூலை இலவசமாக தரவிறக்க

Bookday.in



தளத்தில் சிறகுக்குள் வானம், இரண்டாம் சுற்று என்று நூலின் பெயர்களை தமிழில் தட்டச்சு செய்து தேடுங்கள். 






கருத்துகள்