புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான கூடு!

 













பொள்ளாச்சியில் சரணாலயம் ஜோதி என்ற தன்னார்வ அமைப்பு தொண்டாற்றி வருகிறது. இதைத் தொடங்கிய வனிதா ரங்கராஜூக்கு இப்போது 67 வயதாகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த அமைப்பின் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. 

வனிதாவுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் பிறந்தன. அப்போதுதான் நடந்தது முக்கியமான நிகழ்ச்சி. காந்தி நகரிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் தொடர்பாக சென்றிருந்தார். அங்கு மூளை தொடர்பான குறைபாடு உள்ள சிறுவனைப் பார்த்தார். அவனுக்கு உள்ள பிரச்னையை மருத்துவர்கள் செரிபெரல் பால்சி என்று அழைத்தனர்.

 பையனை முழுக்க வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள முடியாதபடி அவனது அம்மாவுக்கு பொருளாதார நிலைமை இருந்தது. காலையில் வேலைக்கு போய்விட்டு வந்து பார்த்தால் தரையில் அப்படியே விழுந்து கிடப்பான் குழந்தை. பதறிப்போய் பார்த்தால், உடலில் பல்வேறு இடங்களில் பூனையின் நக கீறல்கள். அவனுக்கு வனிதா வைத்த பெயர் சக்தி. ஆனால் அங்குள்ளவர்கள் அவன் எப்போது தரையில் விழுந்து கிடப்பதால், அவனை பூச்சி என பட்டப்பெயர் வைத்து அழைத்தனர். 

அவனைக் கவனித்துக்கொள்ள ஏதாவது செய்யத் தோன்றியது. உடனே வனிதா தனது தந்தையிடம் சிறிது பணம் பெற்று சரணாலயம் என்ற பெயரில் இல்லம் ஒன்றை தொடங்கினார். தொடக்கத்தில் இது மனநிலை பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கானதாகவே இருந்தது. பின்னாளில் முதியோர்களையும் பராமரிப்பதாக மாறியது. ஆறு குழந்தைகளோடு தொடங்கிய இல்லத்தில் இப்போது 200 பேர் உள்ளனர். 16 முதல் 80 வயது வரையிலான பெண்கள் இங்கு வாழ்கின்றனர். 

முதியோர்களை பராமரிப்பதற்கு குறைந்தபட்ச தொகையை வனிதா வசூலிக்கிறார். பல்வேறு அரசு அமைப்புகளின் உதவியுடன் இல்லங்களை வனிதா நடத்திவருகிறார். இவருக்கு உதவியாக இவரது மகள் சரண்யா இருக்கிறார். புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேலியேட்டிவ் மையம் ஒன்றையும் தொடங்கும் திட்டத்தில் உள்ளார் வனிதா. 



நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

செந்தில்குமார், கோவை

https://www.sharanalayam.org/jothi.html

 

கருத்துகள்