இடுகைகள்

சவால் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்களை தலைவராக்கும் விதிகளைக் கொண்ட நூல்!

படம்
  21 இர் ரெப்யூடபிள் லாஸ் ஆஃப் லீடர்ஷிப் ஜான் சி மேக்ஸ்வெல் 336 பக்கம் ஹார்ப்பர் கோலின்ஸ்   தலைமைத்துவத்தை ஒருவர் எப்படி வளர்த்துக்கொள்வது என்பதை ஏராளமான அமெரிக்க நாட்டு உதாரணங்களோடு எழுத்தாளர் எழுதி விளக்கியுள்ளார். பிறரது வாழ்க்கை அனுபவங்களோடு, தான் தேவாலயத்தில் பாதிரியாக பொறுப்பேற்று செயல்பட்டபோது செய்த சரி, தவறு, அதனால் நேர்ந்த விளைவுகள் அனைத்தையும் தான் பேசும் தலைமைத்துவ மையப்பொருளுக்கு இணைத்திருக்கிறார். நூலில் இந்தியாவைப் பற்றி மோசமான விவரிப்புதான் உள்ளது. அதைப்பற்றி பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை. காந்தி, இந்தியா போன்ற ஒரு தேசத்தில் சுதந்திரம் பெற்றுத்தர எப்படி உழைத்தார், மக்களை தொடர்புகொண்டார் என்பதை சிறப்பாக விளக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தில் ஊழியர்களின் நம்பிக்கையைப் பெறுவது, எதிர்ப்புகளை வெல்வது, பிறருக்கு உதாரணமாக முன்னே நின்று தடைகளை எதிர்கொள்வது, எதிரிகளை வெல்வது, தொலைநோக்காக யோசிப்பது, நெருக்கடியில் வேகமாக சிந்தித்து செயல்படுவது என ஏராளமான விஷயங்களை உதாரணங்களுடன் மெல்ல விவரித்து எழுதியிருக்கிறார். சில இடங்களில் எழுத்தாளர் தான் நடத்தும் பயிற்சி வகுப்பு உதாரணங்கள

மீசையை முறுக்கி சவால் விட்டுத் திருடும் மாதவன்! - மீச மாதவன், கிரேஸி கோபாலன் - கேரக்டர் புதுசு

படம்
  மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் - மலையாளம் மீச மாதவன் மலையாளம் திலீப் (மாதவன் நாயர்)   கிரேஸி கோபாலன், மீசை மாதவன் என இரு படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டிலும் திலீப் நடித்தார் என்பதல்ல. இரண்டு படங்களிலும் நாயகன் திருடன். ஆனால் அப்படி மாறியதற்கு இறந்தகாலத்தில் நெகிழச்செய்யும் ஃபிளாஷ்பேக் உண்டு. அதை நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.   மாதவன் நாயர். இந்தப் பெயரைச் சொன்னாலே ஊரில் உள்ள அனைவருக்குமே அவர் திருடன் என்பது தெரியும். மலையாளத்தில் கள்ளன் என்கிறார்கள்.   மீசை மாதவன் என்பதுதான் அவன் பட்டப்பெயர். ஊர் மக்கள் யாராவது அவனிடம் லொள்ளு பேசி கோபம் வந்து மீசை முறுக்கினால் அன்று, சம்பந்தப்பட்டவர் வீட்டுக்குள் முக்கியமான ஏதாவது ஒரு பொருளேனும் களவு போகும். அதை தடுக்கவே முடியாது. அந்தளவு திருட்டில் ஜெகஜாலன். திருட்டில் ரிடையர்டாகி கால் ஆணி வந்துவிட்ட முன்னாள் திருடரிடம் வித்தை கற்ற ஆள், மாதவன். ஊருக்குள் புதிய பொருட்களை வாங்க முடியாத சிலர், மீசை மாதவனிடம் எனக்கு இந்த பொருட்கள் வேண்டுமென்று சொல்லி, ஆர்டர் செய்து காசு கொடுத்து வாங்குவதும் உண்டு. மாதவனைப் பொறுத்தவரை அவனுக

குப்பையிலிருந்து மின்சாரம் - கேரளாவின் முயற்சி வெல்ல வாய்ப்புண்டா?

படம்
  திடக்கழிவு மேலாண்மை  குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிப்பதில் லாபம், சவால்கள் என்னென்ன? கேரளா மாநில அரசு, கோழிக்கோட்டில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இது மாநிலத்திலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.   இரண்டு ஆண்டுகளில் ஆறு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். நாட்டில் நூற்றுக்கும் மேலான குப்பையிலிருந்து மின்சாரம் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அவற்றில் இன்றும் செயல்பாட்டில் இருப்பவை மிகச்சிலதான். என்ன பயன்? மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். இதன்மூலம் திடக்கழிவு மேலாண்மையைச் செய்வதோடு, மாநில மக்களுக்கு மின்சாரமும் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள திடக்கழிவுகளில் 60 சதவீத கழிவுகள் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடியவை. அதாவது தானாகவே மட்க கூடியவை. 30 சதவீத கழிவுகள் உலர் கழிவுகளாக நிலத்தில் தேங்குகின்றன. 3 சதவீத கழிவுகளான கடினமான பிளாஸ்டிக், உலோகம், இ கழிவுகள் ஆகியவற்றை மறுசுழற்சி செய்யமுடியும். மீதமுள்ள பிளாஸ்டிக், துணிகள் எல்லாமே மறுசுழற்சி செய்ய முடியாத நிலையில் உள்ளவை. இந்த கழிவுகளைப் பயன்படுத்தி

பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சில சவாலான சூழல்கள்!

படம்
  இப்போது சில சூழ்நிலைகளைப் பார்ப்போம். அதைப் பத்திரிகையாளர்களாக நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், புரிந்துகொள்கிறீர்கள் என ஆராய்வோம். இதற்கான பதில்கள் ஒன்றுக்கும் மேலாக இருக்கலாம். இதை நீங்கள் உங்கள் சக நண்பர்கள், வழிகாட்டிகளுடன் ஆராய்ந்து பதில் கூறலாம். அல்லது உங்கள் அனுபவத்தை வைத்து மட்டுமே பதில் கண்டுபிடிக்கலாம். நாட்டின் மத்திய நிதியமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு பற்றிய செய்தியை நீங்கள் பதிவு செய்யவிருக்கிறீர்கள். அந்த நேரத்தில் நிதியமைச்சர் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குச் செல்கிறீர்கள். அறை வாசலில் அன்றைய மாநாடு தொடர்பான தகவல்களைக் கொண்ட தாள்கள் கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பார்ப்பீர்களா? நீங்கள் வேலை செய்யும் நாளிதழ், செய்திக்காக எவரிடமிருந்தும் அன்பளிப்புகள், பரிசுகள், பணம் வாங்க கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. விதியாகவும் மாற்றியுள்ளது. அந்த நேரத்தில் உங்களது சக நண்பரும், தோழியுமான ஒருவர் போனில் பெருநிறுவனத்தின் பிரதிநிதி ஒருவரிடம் பேசுகிறார்.   தனக்கு ஒரு நகை ஒன்றை பரிசாக பெற்று வீட்டு முகவரியைக் கொடுத்து அனுப்பி வைக்க சொல்கிறார். இந்த செய்தியைக் கேட்கும் நீங்கள், இதைப் பற்

புகழ்வெளிச்சம் எப்போதும் ஆபத்தானது! - எர்னோ ரூபிக், க்யூப் கண்டுபிடிப்பாளர்

படம்
  ”க்யூபை எப்படி உருவாக்கினேன் என்றே எனக்கு தெரியாது!” ரூபிக் க்யூபைப் பயன்படுத்தி பிறரோடு சவால் விட்டு விளையாடிய அனுபவம் பலருக்கும் இருக்கலாம். இந்த விளையாட்டுப் பொருளை 1974ஆம் ஆண்டு, ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்ட் நகரைச் சேர்ந்த கட்டுமானத்துறை பேராசிரியரான  எர்னோ ரூபிக் உருவாக்கினார்.   1944 ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி புதாபெஸ்டில் பிறந்தார் எர்னோ ரூபிக். சிறுவயதில் ஓவியம் வரைவது, சிற்பங்கள் செதுக்குவது ஆகியவற்றில் பேரார்வம் கொண்டிருந்தார். அதனால், புதாபெஸ்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை படிப்பை தேர்ந்தெடுத்து படித்தார்.  1974ஆம் ஆண்டு 29 ஆம் வயதில், மரத்தில் செய்த எட்டு க்யூப் வடிவங்களை ஒன்றாக்கி தற்போதைய க்யூப் வடிவத்தை உருவாக்கினார். அதற்கு வண்ணங்களைத் தீட்டி பரிசோதனை செய்து பார்த்தார். க்யூப்பை உருவாக்கியபோது தனது அம்மாவின் வீட்டில் இருந்தார். ஜியோமெட்ரிக் வடிவங்களின் மீது ஆர்வம் கொண்ட எர்னோ ரூபிக், பல்வேறு வடிவங்களில் க்யூபை செய்து பார்த்தார். ஆனால் எதுவுமே சரியாக வரவில்லை. பிறகுதான், உருவாக்கிய அனைத்தையும் இணைத்துப் பார்த்தால், அனைத்தும் ஒன்றுக்குள் ஒன்றாக இயந்திரத்தில்

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிறைய சவால்கள் உண்டு!

படம்
      மேக்ஸ் டெக்மார்க், அறிவியலாளர்       மேக்ஸ் டெக்மார்க் -Max Tegmark   விண்வெளி பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தவர் நீங்கள் . திடீரென எதற்கு செயற்கை நுண்ணறிவு துறையில் ஆய்வு செய்யத் தொடங்கினீர்கள் ? எனக்கு பெரிய கேள்விகளைக் கேட்பதில் விருப்பம் அதிகம் . கற்பனைக்கு எட்டாத பெரிய கேள்விகள் , பெரிய , சரியான கேள்வி என்று கூட வைத்துக்கொள்ளலாம் . விண்வெளி உருவாகியது , அதூபற்றி தத்துவங்கள் , அனைத்து விஷயங்களும் எப்படி தொடங்கியிருக்கும் ?, அடுத்து என்ன நடக்கப்போகிறது , இந்த விவகாரங்களுக்கு இடையில் நமது பங்கு என்ன ? என்று இப்படி கேள்விகள் சென்றுகொண்டே இருக்கும் . நான் வானியலில் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறோம் . ஆனால் அதில் புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பது கடினமானதாக இருக்கிறது . மிகவும் அரியதும் கூடத்தான் . எனவே , நான் விடை காண முடியாத சிக்கல்களைக் கொண்ட துறையை தேடினேன் . அப்போதுதான் நரம்பியல்துறை சார்ந்த தகவல்கள் , அதில் உருவாக்கப்படும் செயற்கை நுண்ணறிவு பற்றி தெரிய வந்தது . இன்று நாம் நுண்ணோக்கிகள் வழியாக நம் முன்னோர்கள் பார்க்க முடியாத அற

வைரலாகும் வார்த்தை விளையாட்டு !

படம்
  ட்விட்டரில் இப்போது வேர்டில் என்ற வார்த்தை விளையாட்டு பிரபலமாகி பரவி வருகிறது. அந்தந்த பிராந்திய மொழிகளில் இதனை பல்வேறு மென்பொருள் திறமைசாலிகள் மேம்படுத்தி வருகிறார்கள். ஐடியா ஒன்றுதான். அதனை மொழிகளை மாற்றி சில மாறுதல்களை செய்கிறார்கள். குறிப்பிட்ட மொழிகளுக்கு மாற்றும்போது அதற்கான நிறைய சவால்கள் உண்டு.  வேர்டில் என்ற விளையாட்டி ஒரு நாளுக்கு ஒருமுறை தான் விளையாட முடியும். மேலும் இதில் சரியான வார்த்தைகளை நிரப்புவதற்கான வாய்ப்புகளும் குறைவுதான். புதிய சொற்களை கண்டுபிடிப்பதற்கான ஆர்வம் கொண்டவர்களுக்கு இது சுவாரசியமான சவால்.  லியூடில் இது முழுக்க காதல் போதை நிரம்பியவர்களுக்கானது.நான்கு எழுத்து வார்த்தைகளை கண்டுபிடிக்கவேண்டும் வயது வந்தவர்களுக்கானது என்பதால் அதற்கேற்ப யோசியுங்கள். வேர்டில் விளையாட்டு போலத்தான். ஆனால் இதில் காம மோகமாக யோசித்தாலும் பிழையில்லை.  அப்சுர்டில் இதுவும் வேர்டில் போலத்தான். இதில் நீங்கள் நிரப்பும் வார்த்தைகள் பற்றி அதிக தகவல்களை தருவதில்லை. எனவே நீங்கள்தான் வார்த்தைகளை சரியாக நிரப்ப வேண்டும். விளையாட்டின் நடுவிலும் கூட யோசித்து குறிப்பிட்ட வார்த்தையை கண்டுபிடித்து

அங்கன்வாடி பணியாளரின் சிந்தனையால், மேம்பட்ட குழந்தைகளின் ஆரோக்கியம்! - சுமதி உருவாக்கிய மாற்றம்

படம்
  காய்கறிகளை விளைவித்த அங்கன்வாடி பணியாளர்! மரக்காணத்தில் உள்ளது பாலாஜி கார்டன். இது டவுன் பஞ்சாயத்து வரம்பில் வருகிறது.  இங்குள்ள அங்கன்வாடியில் மொத்தம் 30 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் பலரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். அமைப்புகள் அப்படியேதான் இருக்கும். ஆனால், அதனை இயக்குபவர்கள் மனம் விரிவாக இருந்தால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும். 54 வயதான சுமதி அப்படிப்பட்டவர்தான். அங்கன்வாடி பணியாளரான இவர், அங்கு கொடுக்கும் உணவுவகைகளுக்கான காய்கறிகளை குப்பைக்கூளமாக கிடந்த நிலத்தை தூய்மைப்படுத்தி உருவாக்கிய நிலத்தில் இருந்து பெறுகிறார். இவருக்கு உதவியாக ஹேமாவதி என்ற பெண் பணியாளர் இருக்கிறார்.  மாதம் 15 ஆயிரம் சம்பளம் சுமதிக்கு வழங்கப்படுகிறது. அதில் சேர்த்து வைத்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை செலவிட்டு நிலத்தை பண்படுத்தி, காய்கறிகளை விளைவித்திருக்கிறார். இதற்கான தொடக்க கால முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் இவரை ஏளனம் செய்திருக்கிறார்கள். முயற்சியை தடுத்திருக்கிறார்கள். உள்ளூர் மக்களும் கூட சுமதியின் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை. ஆனால் சுமதி தனது முயற்சி செயல்பாடுகளில் எந்த தளர்வையும் காட்டவில்லை.

காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு!

படம்
  காவல்துறையோடு பூனை - எலி விளையாட்டு என்பது எளிதானது கிடையாது. அதற்கு மனதளவில் சிறப்பாக தயார் செய்திருக்க வேண்டும். இலையெனில் காவல்துறை சும்மா இருக்குமா? சென்னை போலீஸ் போல கையில் மாவுக்கட்டு போடும் வாய்ப்பு அதிகம். ஆனாலும் கூட இதிலும் செம சவாலான ஆட்கள் உண்டு.  ஜேக் தி ரிப்பர், ஸோடியாக் கில்லர், பெர்க்கோவிட்ஸ் ஆகியோர் தான் செய்கிறோம் என்று தெரியாமலேயே காவல்துறைக்கு பல துப்புகளை கொடுத்து குழப்பினார்கள். இதேபோல இன்னொருவர்  இல்லாமல் கொஞ்சமேனும் புத்திசாலித்தனமாக யோசித்தார் என்றால் அது ஜான் முகமது, ஜான் மால்வோ என்ற இருவர்தான். இவர்கள் கொலைகளை பல்வேறு மாகாணங்களில் செய்துவிட்டு தப்பிச்சென்றார்கள். ஆனாலும் காவல்துறையை பிடிக்க முடியுமா என சவால்விட்டதால் அவர்கள் சூடானார்கள். முகமதின் அழைப்பு ஒன்றை பின்தொடர்ந்து சென்று கொலைகாரர்கள் இருவரையும் பிடித்தனர். அதோடு அவர்களின் ஃபன் பண்றோம் திட்டம் நின்றுபோனது.  இவர்களை சாதாரணமாக நினைத்து விட முடியாது. இவர்களை என்று இங்கு கூறியது, சீரியல் கொலைகாரர்களைத்தான். காவல்துறை விசாரணையில் கூட தகவல்களை மாற்றிக் கூறி விசாரணையை மாற்றும் முயற்சியையும் செய்வார்கள். ஆ