இடுகைகள்

காந்திராமன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேடுபொருள் யாதுமிலை - கடித நூல் - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  தேடுபொருள் யாதுமிலை நூல், இரா.முருகானந்தம் அவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பெரும்பான்மையாக கொண்டுள்ளது. இந்த கடிதங்களின் வழியே பத்திரிகை பணி, அதில் எதிர்கொண்ட சிக்கல்கள், சந்தித்த மனிதர்கள், எழுத்துப்பணி, தனிப்பட்ட மனநிலை என நிறைய விஷயங்கள் பேசப்படுகின்றன.இவை குறிப்பிட்ட காலகட்டத்தை கல்லில் பொறிப்பது போலத்தான் அமைகின்றன. மன்னர் என்றால் கல், எழுத்தாளன் என்றால் சொல் சரிதானே?  ஆரா பிரஸ்ஸின் வெளியீட்டில் கடித நூல்களுக்கு முக்கியப் பங்குண்டு. அந்த வகையில் இந்த நூலும் முக்கியமானது. பரபரப்பான உலகில் மனிதர்களுக்கு நிதானமாக ஒன்றை ஆழ்ந்து பார்க்கும் புரிந்துகொள்ளும் எண்ணம் குறைந்துபோய்விட்டது. கடிதங்கள் எழுதும்போதும், அதற்குப் பிறகு அதை கையில் எடுத்து வாசிக்கும்போதும் பல்வேறு வகையான எண்ணங்களை உருவாக்குகிறது. அந்த வகையில் தேடுபொருள் யாதுமிலை கடித நூல், உங்களுக்கும் பல்வேறு நினைவுகளை, உங்கள் நட்புவட்டம் சார்ந்து உருவாக்கலாம். நூலை வாசியுங்கள். பிடித்திருந்தால் வாசிப்பு வேட்கை கொண்டவர்களுக்கு பரிந்துரையுங்கள். மிக்க நன்றி  தலைப்பு உதவி கவிஞர் பாரதிதாசன் நூலை வாசிக்க... https://www.amazon.com/dp/B0

கல்யாணம் சார்ந்து ஏற்பட்ட மன உளைச்சல்கள் அதிகம்!

படம்
  நரசிங்கபுரம் 6/6/2023 அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா? கடந்த சில நாட்களாக டெலிகிராமில் மெசேஜ் எதுவும் வருவதில்லை. தினமும் செக் பண்ணுவேன். கடந்த 28.5.2023 அன்று எழுதியிருந்த கடிதத்தில், போன் ரிப்பேர் ஆனதைச் சொல்லியிருந்தீர்கள். எதற்கு உங்களை டிஸ்டர்ப் செய்யுறது?ன்னு போன் போடவில்லை. சில விஷயங்களால் மன உளைச்சல் அதிகம். கடிதத்தில் நண்பர் ஜெகன் பற்றி சொல்லியிருந்தீங்க. அவருக்கு ஏற்பட்ட நிலை இன்று எனக்கும்… பெண்கள் சுயநலவாதிகள். தானும், தனக்குரியவரும் மட்டுமே நல்லா இருந்தா போதும். யார் எப்படிப் போனாலும் கவலை கொள்ளாத மூடர்கள். இதை அறிந்துகொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனக்கும் சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தனர். தனிக்குடித்தனம் பற்றிய பேச்சை பெண் வீட்டார் தீவிரமாக வலியுறுத்துகிறார்கள். இதைக் கேட்டதும் கவலையாக உள்ளது. வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பியுள்ளனர். அப்பா, பாவம். வரன் கிடைப்பதே கஷ்டம். கெடச்சாலும் இப்படியான கண்டிஷன்ஸ். அவரின் பட்ஜெட்டில் இடி இடிப்பது போல உணர்கிறார். பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் இந்த சூழலில் தனிக் குடித்தனம் அவசியமா? இப்பவே

கிரிக்கெட்டை விளையாடமுடியாத அளவுக்கு வெயில்!

படம்
  சார் வணக்கம். நலமா? கடும் வெயில். உடல் சூடு அதிகம். பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டை விளையாட முடியவில்லை. மழையில் ஒதுங்கினால் தேவலை என்பது போல வெயில் வாட்டுகிறது. நேற்று (ஞாயிறு) குடும்பமாக அக்கா வீட்டிற்குச் சென்றோம். அங்கேயே நாளைக் கழித்தோம். எங்கள் வீட்டிற்குத் திரும்பவில்லை. வீட்டில் கடும் புழுக்கம். என்னுடைய முதல் அக்கா வீடு காற்றோட்டமாக நன்றாக இருக்கும். தாய்மாமனுக்கே அக்காவைக் கொடுத்ததால் அவர்கள் வீட்டில் எங்களுக்கு உரிமை அதிகம். பனங்காய், தோண்டி கிடையில் அறுத்து சாப்பிட்டோம். குடும்பம் சூழ இருந்ததால் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சி.   மாணவர் இதழ் பற்றி சொல்ல ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. டிசைனர் சீஃப் போனதில் இருந்து, அவரது குழுவினர் சிறப்பாக டிசைன் செய்கிறார்கள். புதுப்புது லோகோ வைத்து எனது பக்கத்தை மெருகேற்றுகிறார்கள். விரைவான லே அவுட் இனி நடக்கும் என நம்புகிறேன். கணபதி சார், இப்போதெல்லாம் என்னிடம் நிறைய பேசுகிறார். கொடுக்கு அந்தளவிற்கு கொட்டுவதில்லை. அவரது பெண்ணை நல்ல கல்லூரியில் சேர்க்க படாதபாடு படுகிறார். மாணவர் இதழ் எடிட்டரும் தாய் நாளிதழும் உதவி புரியவில்லை என்ற புலம்

ராயல்டியை ஏமாற்றும் பதிப்பு நிறுவனங்களை நினைத்தாலே கசப்பாக உள்ளது!

படம்
6/5/2023 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நலமா? தோல் பிரச்னை எப்படி இருக்கு? சிகிச்சை மேற்கொள்ள பொருளாதாரம் உள்ளதா? கடிதம் எழுதி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அடிக்கடி டெலிகிராமில் பேசுவதால் முறையாக கடிதம் எழுதவில்லை. தீராநதியில் பேட்டி கொடுத்த இந்திரா சௌந்தர்ராஜனைப் பற்றி நீங்கள் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பல எழுத்தாளர்களும் ராயல்டி விஷயத்தில் ஏமாற்றப்படுவது கசப்பாக உள்ளது.  நேற்று (5/5/2023) எடிட்டரிடம் பேசினேன். திங்கட்கிழமை தாய் நாளிதழுக்கு எழுதும் ஒரு பக்க கணக்குப் புதிர்களை புத்தகமாக போடுவது சம்பந்தமாக. ‘’நிறுவனப் பதிப்பகத்தில் போடலாம்’’ என்றார். நான்,’’ வேண்டாம் சார். வேறு பதிப்பகத்தை நண்பர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்’’ என்று சொன்னேன். எடிட்டரும் நான் கூறிய பதிப்பகத்தில் இலக்கிய நூலொன்றை எழுதியிருப்பதாக கூறினார். மேலும், அங்கு இலக்கியம் சார்ந்த புத்தகங்களே அதிகம் விற்கும் என்றும், கணக்கு புத்தகங்களை கமர்ஷியல் பதிப்பகத்தில் போட்டால்தான் சரியாக இருக்கும் என்றார். உண்மையா சார்? சமீபத்தில், மாணவர் இதழுக்கு இன்டர்ன்ஷிப் வந்த இளம்பெண், இதழில் உதவி ஆசிரியராக இணைந்தார். கூடுதலாக 23

ஒரே மாதிரியாக கட்டுரை எழுதுவதே போர் அடிக்கும் வேலை!

படம்
  நரசிங்கபுரம் 5/2/2023 அன்பு அன்பரசு சாருக்கு, வணக்கம். புத்தகம் படிப்பதால் நலமாக இருப்பீர்கள் என்றுணர்கிறேன். காலம் கடந்துகொண்டிருக்கிறது. சில கடமைகளை காலாகாலத்திற்குள் முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக உணர்கிறேன். ஒன்று அரசு வேலை, மற்றொன்று திருமணம். தற்போது இருக்கும் வேலையில் சிக்கலும் இல்லை. வளர்ச்சியும் இல்லை என்று உணர்கிறேன். எத்தனை நாட்களுக்கு கணக்கு கட்டுரைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்க முடியும்?   பல வேலைகளைச் செய்வது திடமாக உள்ளது. சென்ற வாரம் பத்திரிகையில்   கணபதி சாருக்கு கணக்கு டவுட் வந்தது. தீர்வு சொன்னதும் வியப்படைந்தார். அன்றிலிருந்து ‘’வேறெதாச்சும் வேலைக்கு போயா, இங்கே வளர்ச்சி இருக்காதுன்னு’’ பேசிக்கிட்டே இருக்காரு. எப்போதும்! அவர்தான் அண்ணனையும் திட்டி விரட்டியிருப்பார் என்றுணர்ந்தேன். வேலைக்கு இதுபோல் என்றால் திருமணம் மற்றொரு கதை. வீட்டில் எனக்கு திருமணம் செய்ய கங்கணம் கட்டியிருக்கிறார்கள். அதிகம் பேசுகிறேனாம். பேச்சில் தத்துவங்களை அடுக்கி பேசுகிறேனாம். குடும்ப பொருளாதாரச் சிக்கலில் திருமணம் செய்ய, தற்போது விருப்பம் இல்லை எனக்கு… செ

புத்தகத் திருவிழாவிற்கு சென்ற ஜீனியஸ்!

படம்
  நரசிங்கபுரம் 24/1/2023 அன்பரசு சாருக்கு, அன்பு வணக்கம். நலமா? வேலை இல்லாத சூழலில், பொருளாதாரம் மாபெரும் சிக்கலாக இருக்குமே? எப்படி எதிர்கொள்கிறீர்கள்? தோல் பிரச்னைக்கு கூடுதல் செலவாகுமே? வேலைக்கான முயற்சி எந்தளவில் உள்ளது? சென்றவாரம் திங்கட்கிழமை 16/1/2023 அன்று புக்ஃபேர் சென்றேன். சாணக்கிய நீதி, நினைவாற்றலை வளர்க்க என்ன செய்வது? ஆர்வமூட்டும் முல்லா கதைகள் ஆகிய நூல்களை வாங்கினேன். அறிவியல் தொடர்பாக ஒரு ஆங்கில நூல் கிடைத்தது. கணிதத்திற்கென எந்த புத்தகமும் இல்லை; சிவராமன் சார் எழுதிய நூல்கள் தவிர. வரும் மார்ச் பத்திற்குள் மாணவர் இதழ் வெளியீடு நிறைவடைகிறது. ஒரு வாரம், முன்னதாக கட்டுரைகளை வழங்கி வருகிறேன். யாரும் கேள்வி கேட்காத வகையில் காலம் நகர்கிறது. மார்ச் 10க்குப் பிறகு புத்தகம் ஏதேனும் வடிவமைக்கவேண்டும்.   அடுத்த ஆண்டுக்கான இதழ்   தொடங்குவதற்கு முன்…. முல்லாவின் கதைகளைப் படித்தேன். 46 பக்கங்கள் கொண்ட சிறு புத்தகம் அது. சுவாரசியமாக இருந்தது. பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்க வேண்டும், நுணுக்கமான தந்திரங்களை பேச்சில் எவ்வாறு சேர்க்க வேண்டும் என முல்லா நினைவூட்டியிருக்கிறார்.   நேற

அப்பாவுக்கு கடிதத்தைப் பெற்று படிப்பதில் அதீத மகிழ்ச்சி!

படம்
  நரசிங்கபுரம் 20/12/2022   அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பின் கடிதம் கிடைத்தது. அப்பா சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கும் அவரது நண்பர் திருவண்ணாமலையில் இருந்து கடிதம் எழுதி அனுப்பி வந்தார். போன் வந்ததும் கடிதம் நின்றுவிட்டது. எனவே, கடிதத்தை வாங்குவதில் அதீத மகிழ்ச்சி அவருக்கு. எனக்கு முன்பாகவே படித்துப் பார்ப்பார். அவருக்கு நீங்கள் எழுதும் கையெழுத்தில் சில வார்த்தைகள் புரியவில்லையாம். எப்படி படிப்பே? என்று கேட்டார். அன்பிடம் பழகியவர்க்கே அன்பரசு கையெழுத்து புரியும் என்று சொன்னேன். சரிதானே? உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது சார்? மருத்துவ செலவுகள்? பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் சொல்லுங்கள். தயக்கம் வேண்டாம். சென்னை வந்தால் சொல்லலுங்கள். நீங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறேன். கொஞ்சம் முன்கூட்டியே சொன்னால் சிறப்பு. தினமும் விதவிதமான கணித ஸ்டேட்டஸ்களை வாட்ஸ்அப்பில் பதிவிடுகிறேன். மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 17ஆம் தேதி என் குருநாதர் நடத்திவரும் பை கணித மன்றத்தில் இராமானுஜன் பிறந்த நாளையொட்டி நிகழ்ச்சியொன்று நடைபெற்றது. ஏஐஆர்எம்சி என்ற அமைப்பிலிருந்து வந

வாசிப்பது மனநிறைவைத் தருகிறது - காந்திராமன் கடிதங்கள்

படம்
  ஊக்கம் மின்னல் 23/10/2022 அன்பரசு சாருக்கு அன்பு வணக்கம். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, இந்த இங்க் பென்னில் எழுத. புத்தக வாசிப்பு உங்களை நலமாக வாழ வைக்கும் என நம்புகிறேன். ஆத்ம தூய்மைக்காக நீங்கள் எழுதும் புத்தகங்களுக்கு எனது வாழ்த்துகள். முந்தைய நாள், சிவராமன் சாரிடம் பேசியதாக உங்களிடம் சொன்னேன். உங்களையும், அவரையும் தவிர என்னை யாரும் அதிகம் ஊக்கப்படுத்தியதில்லை. நான் மாணவர் இதழில் இத்தனை நாட்கள் வேலை செய்ய நீங்கள் இருவருமே காரணமாக இருப்பீர்கள் என உணர்கிறேன். அன்று பேசும்போது, சிவராமன் சார் தனது அனுபவக் கதைகளை சொன்னார். ‘’கல்லூரியில் யாரும் சரியாக இல்லை. ஹெச்ஓடி அதிகம் வேலை வாங்குகிறார். படிக்க நேரம் போதவில்லை. பிள்ளைகள் வளர்ந்திருந்தால் முன்னமே வேலையை விட்டிருப்பேன்’’ என புலம்பினார். இருப்பினும், உருப்படியாக செய்யும் ஒரே வேலை மாணவர் இதழில் கட்டுரை எழுதுவதுதான் என்றார். பிஹெச்டி பற்றி நான் கேட்டேன். ஹெச்ஓடி சரியில்லை. நானே உனக்கு சொல்லுறேன். வெயிட் பண்ணு என்றார். சரிங்க சார் என்றேன். வீட்டில் எனக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்கள். சென்னையில் இருந்து பணிபுரிந்துகொள்ளவே இந்த ப

உதவிக்கொள்வதால் உறவு நீடிக்கிறது! - காந்திராமன் கடிதங்கள்

படம்
  நரசிங்கபுரம் 9.10.2022   அன்புள்ள அன்பரசு சார் அவர்களுக்கு வணக்கம். நான் நலமாக இருக்கிறேன். நீங்களும் புத்தகம் சகிதமாக நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். இது நான் எழுதும் முதல் கடிதம். தவறு இருந்தால் மன்னிக்கவும். போகப் போக பிழைகளைக் களைய முயல்கிறேன். நம்பிக்கை உள்ளது. முந்தைய வாரம் சென்ற டூர் அனுபவம் சிறப்பாக இருந்தது. அண்ணன், அவரது நண்பர் என ஐந்துபேர் சென்றோம். குற்றாலம், திருநெல்வேலி, நெல்லையப்பர் சுவாமி, திருச்செந்தூர் முருகன் கோவில் ஆகிய இடங்களைப் பார்த்தோம். இது எனக்கு வெளியில் அதிக தொலைவு சென்ற முதல் அனுபவம். மாணவர் இதழ் பற்றி பேச ஒன்றும் இல்லை. பீட்டர் அண்ணன் விலகுகிறார். போனமுறை போட்ட போனஸை விட இந்தமுறை அனைவருக்கும் குறைவாகவே வந்துள்ளது. எடிட்டரிடம் முறையிட்டோம். பலனில்லை. இதுபற்றிப் பேசும்போது எடிட்டரைப் பார்த்தால் எனக்கே நம்பிக்கை வரவில்லை.   எழுதிய எழுத்தாளர்களுக்கு இன்னும் காசு போடவில்லை. சிக்கல் நீண்டுகொண்டே இருக்கிறது. எடிட்டர், பீட்டர் அண்ணனுக்கு பதிலாக நாமக்காரர் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். அவரை உதவி ஆசிரியராக தேர்வு செய்திருக்கிறார்கள் என நினைக்கிறேன