தெரிஞ்சுக்கோங்க! - தொகுப்பு: முகமது மத்தின்

தெரிஞ்சுக்கோங்க ! - தொகுப்பு: முகமது மத்தின் விண்வெளியில் அதற்கான விசேஷ உடை இல்லாமல் நடமாட முடியுமா ? நிச்சயம் முடியாது . பெரும் வலி வேதனையோடு இறப்பை சந்திக்க வேண்டியிருக்கும் . ஏன் இப்படி ? முதல் காரணம் காற்று பற்றாக்குறை . நீங்கள் உயிர்பிழைக்க அணுவளவு காற்றும் விண்வெளியில் இருக்காது . பின் எதை சுவாசிப்பீர்கள் ? மற்ற பிரச்சினைகளை விட முதலில் உங்களை சிரமத்திற்குள்ளாக்குவது காற்று இல்லாமைதான் . அடுத்த சிக்கல் சோடாவை திறக்கும்போது எழுமே குமிழ்கள் அதுபோல நமது உடலின் ரத்தத்தில் வாயுக்குமிழ்கள் பணியாரம் அளவு தோலில் படபடவென உருவாகத் தொடங்கும் வேதனையான நிகழ்வு தொடங்கும் . இது விண்வெளியில் உள்ள அழுத்தத்தினால் ஏற்படும் . விண்வெளியில் அணியும் விசேஷ ஆடை நமது உடலின் தட்பவெப்பத்தை நிலைப்படுத்தும் தன்மை கொண்டது . விண்வெளி ஓடம் இருந்தால் மேற்கண்ட ஆபத்திலிருந்து நீங்கள் தப்பிக்கலாம் . இல்லையெனில் சாமி சத்தியமாக மோட்சம் நிச்சயம் . பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவது போல ஆண்களுக்கு ஏற்படுவது உண்டா ? பெண்களுக்கு ஏற்படுவது போல மாதாமாதம் ஏற்படும் அந்த மூன்று நாட்கள் சமா