விநோதரச மஞ்சரி - விக்டர் காமெஸி





விநோதரச மஞ்சரி - விக்டர் காமெஸி

உலகம் சுற்றிய தம்பதி!

வேலையில் கான்சென்ட்ரேஷன் செய்து எங்காவது ஜாலி டூர் அடிக்கலாம் என யோசனை வரும்போதே தலையில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் வந்துவிடுகிறது. அந்த வயதிலும் வொஃய்ப்போடு பிளான்போட்டு ஊர் சுற்றுவது சாதனைதானே! மும்பையைச் சேர்ந்த பல்தவா தம்பதியினரின் மும்பை டூ லண்டன் சாதனை இந்த கேட்டகிரிதான்.

மும்பையைச் சேர்ந்த பல்தவா தம்பதிகள், மார்ச் மாதம் 23 அன்று லெமன் நசுக்கி BMW காரில் கியர் போட்டு கிளம்பிய 72 நாள் டூர் இது. மும்பை டூ லண்டன் லட்சியத்தில் 19 நாடுகளை சாலைவழியாக கடந்து சென்று இறுதியாக லண்டன் சென்று சேர்ந்தபோது 22 ஆயிரத்து 200 கி.மீ தூரத்தை கடந்திருந்தனர். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட பல்தவா, சார்டண்ட் அக்கவுண்ட்டாக செட்டிலானது மும்பையில். அட்வென்ச்சர் பயணங்கள் இவரது ஸ்பெஷல் ஹாபி. "கடந்த ஆண்டு போட்ட பிளான் இது. இம்பால் வழியாக லண்டன் சேர்வது சேஃப் என முடிவு செய்து சாதித்துவிட்டோம்" என புன்னகைக்கிறார் பல்தவா. அட்வென்ச்சர் தீராது!

 அதிசய ட்வின்ஸ்!

மனித உயிரைக் காப்பாற்றுவது டாக்டர்களின் தர்மம் என்றாலும் கருப்பையில் உடலுக்கு  உயிர் தந்து காப்பாற்றும் தாய்க்கு நிகராக  இந்த உலகில் யாரைக்கூறமுடியும் ?

பிரேசிலைச் சேர்ந்த ஃபிராங்கிளின் படில்ஹாவுக்கு திருமணமாகி, அன்பின் பரிசாக வயிற்றில் குழந்தைகள் வளரத்தொடங்கி 9 வாரங்களாகியிருந்தது. அப்போதுதான் அவருக்கு மூளை புற்றுநோய் பாதிப்பு இருக்கும் செய்தி, அவரது வாழ்வை இடியாய் தாக்கியது. மனைவியை காப்பாற்ற முடியாது, அவளின் வயிற்றிலுள்ள குழந்தையை மட்டுமேயாவது காப்பாற்றுவது சாத்தியமா? படில்ஹாவின் கணவர் கண்ணீரோடு டாக்டர்களிடம் கெஞ்சினார்படில்ஹா நோயின் பாதிப்பால் ஸ்லோமோஷனில் இறந்துகொண்டிருந்தாலும்,  குழந்தைகள் அவரின் கருப்பையில் எந்தவித பாதிப்புமின்றி வளர்ந்து வந்தன. மருந்துகளின் மூலம் இறுக்கிப்பிடித்திருந்த படில்ஹாவின் உயிர், கடந்த ஆண்டு அக்டோபரில் உடலை விட்டு நீங்கியபோது, அவரின் ட்வின்ஸ்களுக்கு வயது இரண்டரை வயது. தாய் தன் இறப்பிலும் குழந்தைகளை 120 நாட்கள் போராடி காப்பாற்றியதுதான் மெடிக்கல் வட்டாரங்களில் இன்று மிராக்கிள் ஸ்டோரி.   

 இந்தியாவின் யங் விமானி!

பிறக்கும் குழந்தையே எஞ்சினியர், டாக்டர் டிகிரியுடன்தான் பிறக்கணும் என்பது இந்தியப் பெற்றோர்களின் பிறப்பு லட்சியம். இந்த லட்சணத்தில் ஃபிளைட் ஓட்டணும் என்கிற பிள்ளைகளின் லட்சியம் கரைசேருமா? இதுதான் அனன்யா திவ்யாவை போயிங் விமானத்தை ஓட்டவும், நம்மை ஈ ஓட்டவும் வைத்திருக்கிறது.

பஞ்சாப் பதன்கோட்டில் பிறந்த அனன்யா, ஆர்மி குடும்ப வாரிசு. சிறுவயதிலேயே ஆந்திராவுக்கு ஷிப்ட் ஆகியவர். கலாசார வேறுபாடு, மிடிஸ் கிளாஸ் பொருளாதாரம், இங்கிலீஷ் தடுமாற்றம் என எதிர்நீச்சல் அடித்தவர் இன்று வெறும் விமானம் ஓட்டவில்லை; போயிங் 777 வில் ரைட் லெக் எடுத்து வைத்து ஓட்டும் மிக இளம் வயது கமாண்டர் இந்தியாவில் அனன்யாதான் என்பது அக்மார்க் பெருமைதானே! "நான் பைலட் கோர்ஸ் எடுத்தபோது படிப்பு அவ்வளவு பாப்புலராகவில்லை. யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு பறப்பது பிடிக்கும் என்பதால் கான்ஃபிடன்டாக படித்து ஜெயித்தேன்" என்ற மின்னல் வேக எனர்ஜியில் பேசுகிறார் இந்த பஞ்சாப் கமாண்டர். காற்று வெளியிடையே கண்ணம்மா!

 உயிரைக் காப்பாற்றியவருக்கு குவியும் வேலை

உங்களுக்கு அன்று இன்டர்வியூ. பஸ்ஸில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கையில் ஓர் விபத்தை பார்க்கிறீர்கள். என்ன செய்வீர்கள்? அமெரிக்காவைச் சேர்ந்த இந்த மனிதரும் சந்தித்த சிச்சுவேஷன் அதுதான். அங்கே அவர் எடுத்த முடிவுதான் அவரது வாழ்க்கையையே மாற்றிப் போட்டுவிட்டது.

அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியைச் சேர்ந்த ஆரோன் டக்கர், பஸ்ஸில் இன்டர்வியூக்கு செல்லும்போது திடீரென நிகழ்ந்த அந்த கார் ஆக்சிடென்டை பார்த்து மற்றவர்கள் போலத்தான் பதறினார். உதவிக்கு பிறர் தயங்க, உடனே கீழிறங்கிய ஆரோன், கவிழ்ந்து கிடந்த காரிலிருந்த மனிதரை ரத்தம் சொட்ட சொட்ட வெளியே இழுத்து காப்பாற்றி முதலுதவியும் செய்தார். ரிசல்ட்? வேலை போய்விட்டது. சிறு குற்றங்களுக்காக சிறை சென்றுவந்த ஹிஸ்டரி, ஆரோனுக்கு உ்ண்டு என்றாலும் தற்போது இந்த மனிதநேய உதவி மூலம் போலீசாரின் பாராட்டோடு, எக்கச்சக்க வேலை ஆஃபர்களும் அவரது வீட்டின் காலிங்பெல் அடித்து வருகின்றன. இவரது உதவியை மெச்சிய டெய்லர் ஒருவர், ஆரோனுக்கென ஸ்பெஷல் சூட் தைத்து கொடுத்துள்ளார். எதற்கு? இன்டர்வியூக்காகத்தான்.

பாகுபலி டைவ் பரிதாபம்! -ரோனி

சக்திமான் டூ பாகுபலி வரை அநாயச சாகசங்கள் அனைத்துமே ஸ்பெஷலாக ரசிக்கப்பட காரணம், ரோப் வித் கிராஃபிக்ஸ். ஆனால் இதுதெரியாமல் ஹீரோயிசம் காட்டி பல்லு கொட்டிப்போகும் ஆட்களுக்கும் இந்தியாவில் குறைவில்லை. மும்பையைச் சேர்ந்த பிஸினஸ்மேனும் பொழுதுபோகாமல் இப்படி ஜம்பிங் செய்தார் விளைவு? பரிதாபம்.

மும்பையைச் சேர்ந்த பிஸினஸ்மேன் இந்திரபால் பாட்டீல்தான் அந்த சாகசத்தை நிகழ்த்தியவர். சம்பவ இடம் சாஹாபூர் மாஹூலி போர்ட் எனுமிடத்திலுள்ள அருவியை ரசிக்க சென்றவர், உற்சாக பரவசத்தில் ரோப் கட்டாத பாகுபலியாக உயரமான பாறையிலிருந்து அருவி மேல் குதித்தார். ரிசல்ட்? தேங்காய் நொறுங்கிவிட்டது. "அங்கு சீசனில் அடிக்கடி நிகழும் சம்பவம்தான் இது. போனமுறை இதே போல அருவியில் குதிக்கும்போது, அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோய்விட்டார். இது இரண்டாவது சம்பவம்" என கூட்டி கழித்து கணக்கு சொல்கிறது காவல்துறை. தமன்னாவை பார்த்தாரா?

 பார்மஸியில் கஞ்சாவை விற்கும் முதல் நாடு! -ரோனி

தென் அமெரிக்க நாடான உருகுவே முதல் நாடாக கஞ்சாவை பார்மஸிகளில் விற்க அனுமதித்துள்ளது. 2013 ஆம் ஆண்டு கஞ்சா பயிரிடவும், விற்கவுமான மசோதா ரெடியானாலும் உடனே அமலுக்கு வரவில்லை.

தற்போது அங்கு பார்மஸிகளில் விற்கப்படும் கஞ்சாவை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தங்களுடைய கைரேகையை பதிந்து மாதத்திற்கு ரேஷன் கடைபோல 40 கிராம் கஞ்சாவைப் பெறலாம். அரசின் அறிவிப்பு வெளியானதிலிருந்து இன்றுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரெஜிஸ்டர் செய்து க்யூ கட்டி நிற்கிறார்கள். தற்போது நாட்டின் புதிய வளர்ந்து வரும் தொழில் கஞ்சா பயிரிடுவதுதானாம். ஒரு கிராம் கஞ்சாவின் விலை 1.30 டாலர். உருகுவே புகைக்கிறது.  

 நன்றி: குங்குமம் வார இதழ் 

p>





பிரபலமான இடுகைகள்