நீதியை எதிர்கொள்ள லாலுபிரசாத்திடம் வலுவில்லை! நேர்காணல்: சுசில்குமார் மோடி, பீகார் பா.ஜ.க தலைவர் தமிழில்: ச.அன்பரசு





நீதியை எதிர்கொள்ள லாலுபிரசாத்திடம் வலுவில்லை!
நேர்காணல்: சுசில்குமார் மோடி, பீகார் பா.. தலைவர்தமிழில்: .அன்பரசு

பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஒருங்கிணைந்த ஜனதாதளமும், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளமும் ஒன்றிணைந்து ஆட்சி செய்துவரும்நிலையில் நிதிஷ் பா..கவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரித்து பேசினார். அடுத்த அதிரடியாக லாலுவின் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தது. அவரின் மீதான ஊழல் வழக்கும் தூசு தட்டப்பட்டு வருகிற நிலையில் பாஜகவின் அடுத்த திட்டம் என்ன என்று பீகார் பா.. தலைவர் சுசில்குமார் மோடியை சந்தித்து பேசினோம்.

பீகாரில் உங்களின் மிஷன் முடிந்துவிட்டதா?

அரசியலைப்பொறுத்தவரை ஓய்வே கிடையாது. நாங்கள் லாலுவைப் பற்றி கூறியிருப்பதில் இன்னும் 40% விஷயங்கள் மிச்சமுள்ளது. தன் 45 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பல்வேறு திட்டங்களில் ஊழல்கள், சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் என கிரிமினல்களோடு பழகி, இன்று ஊழல் குற்றச்சாட்டு கூட அவரை அசைக்க முடியவில்லை. மிகவும் கேஷூவலாக குற்றச்சாட்டை அவர் எதிர்கொண்டதே இதற்கு சாட்சி.


லாலு மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை எப்படி பெற்றீர்கள்?
அரசின் பொறுப்பிலுள்ள ஒருங்கிணைந்த ஜனதாதள கட்சியின் சிலர் ஆதாரங்களை வழங்கினார்கள். அவர்கள் தவிர்த்து சில அதிகாரிகள் தேவையான தகவல்களை கொடுத்தார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் ஆதாரங்களை தராவிட்டால் எப்படி ரகசியங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும்?

பாஜக அரசும் நீங்களும்தான் லாலுபிரசாத் மீதான வழக்குகளை வருமான வரித்துறை, சிபிஐ மூலம் தோண்டித்துருவுகிறீர்கள்?
1996 ஆம் ஆண்டே லாலுபிரசாத் மீதான மாட்டுத்தீவன ஊழல் வழக்கு வெளியே வந்துவிட்டது. ஆனால் அப்போது அவருக்கு ஆதரவான அரசு டெல்லியில் அமைந்திருந்தது. ஆனால் உயர்நீதிமன்றம் அவர் மீதான வழக்கை ஏற்காவிட்டால் அவர் அப்போதே விடுதலை ஆகியிருக்கிறார். இப்போது பாஜக, அந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறது. அவ்வளவுதான். உடனே லாலு, பழிக்குப்பழி, தலித் மகன், ஏழை குடிமகன் என புலம்புகிறார். ஏனெனில் நீதியை எதிர்கொள்ள அவரிடம் அணுவளவும் உண்மையில்லை.

பீகார் முதல்வர் பா..கவின் பணமதிப்பு நீக்கம், ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரை ஆதரிப்பது உள்ளிட்டவற்றை எப்படி பார்க்கிறீர்கள்?

மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், சந்திரபாபு நாயுடு, மாயாவதி உட்பட பலரும் பா..கவோடு இணைந்து பணியாற்றி, பின் விலகியும் போயிருக்கிறார்கள். நிதிஷ்குமார் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரிக்கிறார் என்றால், அது கருப்பு பண ஒழிப்பு காரணமாக மக்களின் ஆதரவைப் பெற்றது என்பதால்தான். பாஜக, நிதிஷ்குமார் அரசின் மதுவிலக்கை முழுமனதோடு ஆதரித்ததும் மக்களின் நலன் சார்ந்த திட்டம் என்பதற்காகவே. லாலு முதல்வராக இருந்தாலும் பா.. ஆதரவு பெற, ஜனாதிபதி வேட்பாளரை நிச்சயம் ஆதரித்திருப்பார். பா..கவின் ஆதரவு அவருக்கு தேவைப்பட்டிருக்கலாம்.

பீகாரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமாரின் ஒருங்கிணைந்த ஜனதாதளத்தோடு இணைந்து உங்கள் கருத்தியலோடு செயல்படுவீர்களா?

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகும் நிதிஷ்குமார் பா..கவோடு இணைந்து இருந்தார். மத்தியில் கிடைத்த ரயில்வே அமைச்சர் பதவியையும் அனுபவித்தார். அப்போதுதான் அந்த கோரசம்பவமும் நிகழ்ந்தது. ஊடகங்கள் அதை முழுமையாக பதிவு செய்தன எனினும் அதன் பிறகும் அவர் பா..கவுடன் ஆட்சியில் இணைந்திருந்தார். அவரின் அரசியல் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள இந்த சம்பவங்களே போதும் என நினைக்கிறேன்.

பசுக்காவலர்கள் தொடர்ந்து முஸ்லீம்கள் தலித்துகள் மீது பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வரும்போது, பிரதமர் மோடி அதனை தடுக்கவேண்டும் என கூறுகிறார். ஆனால் கட்சித் தொண்டர்கள், பசு தொடர்பான தாக்குதலை நியாயப்படுத்தி சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனரே?

சமூக வலைதளங்களில் மாநில, மத்திய தலைவர்கள் பசு தொடர்பான தாக்குதல்களை, கொலைகளை ஆதரிப்பதை நான் இதுவரையிலும் பார்க்கவில்லை. அப்படி தாக்குதல் நடந்தால் உடனே எங்களுக்கு கூறுங்கள். பலகோடி தொண்டர்களைப் பெற்றுள்ள எங்கள் கட்சி அதனை முறைப்படி விசாரிக்கும்.    

நன்றி: Liz Mathew,financialexpress.com



                                  


பிரபலமான இடுகைகள்