ஆட்டோமேஷனில் தப்பி பிழைக்க முடியுமா? - கா.சி.வின்சென்ட்



ஆட்டோமேஷனில் தப்பி பிழைக்க முடியுமா? - கா.சி.வின்சென்ட்

ரோபாட்டுகள் அனைத்து துறையிலும் 200சிசியில் பாய்ச்சலை நிகழ்த்த தொடங்கியுள்ள காலமிது. செயற்கை அறிவு மற்றும் பிக் டேட்டா என்பது இன்று வேலைவாய்ப்பு சந்தையை மாற்றி வருகிறது. அமெரிக்காவில் ரீடெயில் வியாபாரிகள் தங்களுடைய குடோனில் பணியாளர்களுக்கு பதிலாக ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார்கள். கல்வி மற்றும் முதியோர் பராமரிப்பு மட்டுமே இன்றுவரை ரோபாட்டுகளின் கைக்கு எட்டாதவை. எதுவரை? எக்கச்சக்க முதலீடுகள் அத்துறையில் குவியும்வரை.

ரோபோக்களின் ஆட்சி!

உலகிலேயே பல நாடுகளிலும் குறைவான கூலிக்கு பொருட்களை செய்து தரும் சீனத்தொழிலாளர்களையும் ரோபோக்கள் ஒதுக்கி தள்ளிவிட்டதுதான் மிகப்பெரும் சாதனை. விவசாயத்திலும் கீரையை விதைக்க ரோபாட்டுகள் ரெடி. அமெரிக்காவில் மட்டும் 40% வேலையிழப்புக்கு காரணமாகவும், உலகில் மூன்றில் இரண்டு பங்கு வேலைகள் இழப்புக்கு ரோபாட்டுகள  காரணமாக இருக்கும் என்று ஆய்வுத்தகவல்கள் கூறுகின்றன. வேலை செய்வதில் ரோபாட்டுகளை பின்னினாலும், மனிதர்களை பராமரிப்பு உள்ளிட்ட உணர்ச்சிகரமான வேலைகளுக்கு சரிபட்டு வராது.

கல்வியும் ஆதரவும்!

ஆரோக்கியத்துறையில் மனிதர்களை புரிந்துகொள்ளும் தன்மை மிக அவசியம். பல்வேறு வளர்ந்த நாடுகளிலும் வயதானவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் அளவு அதிகரித்துவருகிறது. இந்நிலையில் இவர்களை பராமரிப்பதற்கான பணியாளர்களின் எண்ணிக்கை 40 மில்லியன். ஆனால் தற்போது பணியாற்றிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை 18 மில்லியன். அடுத்து கல்வித்துறை, இதற்கும் ஆரோக்கியத்துறைக்கு நிகராக கவனம் தேவை. "ஆன்லைனில் கல்வியை(MOOC) எளிதாக கற்கலாம் என்றாலும் அதனை முழுமையாக கற்பவர்களின் எண்ணிக்கை 4-15%.  இது வறுமையில் படிப்பை இடைநிறுத்தியவர்களின் அளவை விட குறைவு. இதில் ஆசிரியர்களின் அணுக்கமான வழிகாட்டுதல், நண்பர்களின் உறவு இதெல்லாம் கிடைக்காததும் ஒரு காரணம்" என்கிறார் சமூக ஆய்வாளரான ட்ரெஸி மெக்மில்லன்.

எதிர்காலம் நம் கையில்!


அமெரிக்காவில் முதியோர் பராமரிப்பிற்கான கட்டணம் 45 ஆயிரம் டாலர்கள்(அமெரிக்கர்களின் வருமானத்தில் இது 80%) என எகிறி வருகிறது. கல்வித்துறையிலும் இதே நிலைமைதான். ஐரோப்பாவில் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இது குடும்பத்தில் பார்ட் டைம் வேலை பார்ப்பவர்களுக்கு குடும்பத்தை நடத்திச்செல்ல உதவுகிறது. இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து ஏன் அமெரிக்காவின் கலிஃபோர்னியா ஆகிய பகுதிகளிலும் உடல் ஊனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது பொது மருத்துவ காப்பீட்டை தங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பயன்படுத்த முடியும். தொழில்நுட்ப வளர்ச்சியை தடுக்க முடியாது ஆனால் அதற்காக ரெடியாக முடியும்தானே!

நன்றி: முத்தாரம் வார இதழ்